சொக்லேட் சாப்பிடுவது தொடர்பில் வெளியான புதிய ஆய்வு முடிவு!

chocolateசொக்லேட் சாப்பிடுவதை விரும்பாதவர்கள் இல்லை என்றே கூறலாம்.

அந்த அளவிற்கு வித்தியாசமான சுவையினால் அனைவரையும் கட்டிப்போட்ட ஒரு நொருக்கு தீனி ஆகும்.

எனினும் இதனை உண்பது தொடர்பாக இரு வேறுபட்ட ஆய்வு முடிவுகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இதில் ஒரு வகையான முடிவுகள் சொக்லேட் சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் எனவும் மற்றைய வகையானது சில ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் தெரிவித்து வருகின்றன.

இதேவேளை தற்போது வெளியாகியுள்ள புதிய முடிவானது சொக்லேட் சாப்பிடுவது மூளையின் செயற்பாட்டு திறனை அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது.

இந்த ஆய்வானது இத்தாலியை சேர்ந்த விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சொக்லேட்டில் கலக்கப்படும் கொகோவினாலேயே மூளையின் செயற்பாடு தூண்டப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளனர்.

எவ்வாறாயினும் ஒருவர் முழுமையான சொக்லேட்கள் 85 இனை தனியாக உட்கொள்ளும்போது அது நஞ்சாக மாறுவதற்கான சாத்தியங்களும் இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

-lankasri.com