உலகிலேயே வாழ்ந்து வரும் உயிரினங்களில் நீண்ட ஆயுட்காலத்தினைக் கொண்டதாக சில வகை ஆமைகளும், திமிங்கிலங்களும் கருதப்பட்டு வந்தன.
ஆனால் இவற்றினைவிடவும் அதிக ஆயுட்காலத்தினைக் கொண்டதாக குழாயுருவான புழுக்கள் (Tube Worms) இருப்பதாக தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை 100 தொடக்கம் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழக்கூடியன என குறிப்பிடப்பட்டுள்ளது. இப் புழுக்கள் மெக்ஸிக்கோ வளைகுடா பகுதியில் வாழ்ந்து வருகின்றன.
Escarpia laminata எனும் இனத்தைச் சேர்ந்த இப் புழுக்கள் பற்றிய குறித்த தகவல்களை அமெரிக்காவின் டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான அலானா டர்கின் என்பவர் வெளியிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் Galapagos என்ற இராட்சத ஆமை 177 வருடங்களும், Bowhead எனும் திமிங்கிலம் 211 வருடங்களும் அதிகபட்சமாக வாழ்ந்துள்ளன.
இதேவேளை 4,000 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த ரொக்பிஸ் எனும் மீனினம் 205 வருடங்கள் வாழக்கூடியதாக இருந்தது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-lankasri.com