ஓட்ஸில் விட்டமின் E, B6, B5 மற்றும் கனிமங்களான இரும்பு, செலினியம், மக்னீசியம், நார்ச்சத்து, காப்பர் ஆகியவை அதிகம் நிறைந்துள்ளது.
இவ்வளவு சத்துக்கள் மிகுந்த ஓட்ஸை நீர் அல்லது பாலில் கொதிக்க வைத்து தினமும் காலை உணவாக சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் நன்மைகள் தெரியுமா?
ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்?
- ஓட்ஸில் உள்ள ஆக்ஸிஜனேற்ற பண்புகள் மற்றும் நார்ச்சத்து, இதயம் தொடர்பான நோய்கள் வராமல் தடுத்து, கொழுப்பினை குறைக்க உதவுகிறது.
- ஓட்ஸில் அதிகளவில் உள்ள நார்ச்சத்து, குடல் அசைவுகளை ஒழுங்குபடுத்தி, மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
- உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தின் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாவது வகை நீரிழிவு நோயினால் உண்டாகும் ஆபத்துக்கள் அதிகரிக்காமல் குறைக்கிறது.
- ஹார்மோன்கள் தொடர்பான மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளை குறைக்க உதவுகிறது.
- ஓட்ஸில் உள்ள அதிக அளவிலான மெக்னீசியம் சத்துக்கள், ஆற்றல் உற்பத்தி மற்றும் நொதிகளின் செயல்பாட்டிற்கு உதவுவதுடன், இதய தசைகளை பாதுகாத்து, பக்கவாதம் மற்றும் மாரடைப்பு வராமல் தடுக்கிறது.
- ஓட்ஸில் குறைந்த கலோரி உள்ளதால், இது பசியை குறைத்து, அதிகப்படியான உடல் எடையை குறைக்க உதவுகிறது.
- ஓட்ஸ் சாப்பிடுவதால் தோல் அரிப்பு மற்றும் எரிச்சலை நீக்கி, சருமத்தின் Ph அளவை சீராக்கி, ஈரப்பதம் மிக்க மிருதுவான சருமமாக மாற்றுகிறது.
- -lankasri.com