‘ஞாயிறு’ நக்கீரன், ஆகஸ்ட் 17, 2017. பார் போற்றும் மலேசியத் திருநாடு, அரசியல் நிலைத்தன்மைக்கும் பல இன சமுதாயமாக விளங்கும் மலேசியக் கூட்டு சமுதாயம் இஃதுகாறும் கடைப்பிடிக்கும் இன இணக்கத்திற்கும் சமய சகிப்புத் தன்மைக்கும் பெயர் பெற்றநாடு. இப்படிப்பட்ட நாட்டின் அரசியல் போக்கில் எவ்வளவுதான் கடுமையான சூழல் நிலவினாலும் வன்முறை மட்டும் கூடவேக் கூடாது; வேண்டுவதெல்லாம் நன்முறைதான். இஃது, ஆளுந்தரப்பார், எதிரணியினர் என இருசாராருக்கும் பொருந்தும்.
நாட்டின் முன்னாள் பிரதமரும் நவீன மலேசியத் தந்தை என போற்றப்படுபவரும் அம்னோவையும் தேசிய முன்னணியையும் இருபது ஆண்டு-களுக்கும் மேலாக வழிநடத்தியவருமான துன் டாக்டர் மகாதீர் முகம்மது, வெகு அண்மையில் ‘ஒழிப்பதற்கு ஒன்றுமில்லை’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது வன்முறை எழுந்தது.
அந்த மோசமான சம்பவம் நடந்து ஒரு வாரம்கூட ஆகாத நிலையில், நாட்டின் மையப் பகுதியை ஒட்டிய சிரம்பான் நகரில் பட்டப்பகலில் ஹிண்ட்ராஃப் தலைவரும் வழக்கறிஞருமான பொன்.வேதமூர்த்தி தாக்கப்பட்டிருப்பது, நாட்டின் ஒட்டு மொத்த அரசியல் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஷா ஆலமில் மகாதீர் பேசிக் கொண்டிருந்தபோது காலணி, நாற்காலிகளெல்லாம் வீசப்பட்ட ன. அது மலேசிய அரசியல் களத்திற்கு புதியது. சம்பந்தப்பட்ட நபர்கள்மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க முற்பட்டிருப்பது ஒருபுறமிருக்க, நாகரிக மக்கள் கடைப்பிடிக்கும் நாகரிக அரசியல் நெறிமுறைக்கு ஒவ்வாதப் போக்கு, இத்தகைய வன்முறைப் போக்கு.
கருத்துக்கு கருத்து என்பதுதான் அரசியல் பண்பாடு; அது சொல்லாக இருந்தாலும் சரி; அச்சடிக்கப்பட்ட எழுத்தாக இருந்தாலும் சரி; அதுதான் பண்பட்ட அரசியல் போக்கு; நாட்டிற்கும் சமுதாயத்திகும் நன்முறையான அரசியல்தான் பயனளிக்கும். ஏதோ, எப்படியோ கைமீறி நடந்துவிட்ட அந்த நிகழ்ச்சியின் தாக்கம் மறைவதற்குள் இன்னொரு அரசியல் தாக்குதல் நடைபெற்றிருப்பது நல்லதல்ல.
ஏதோ பத்திரங்களை ஒப்படைப்பவர்களைப் போல உள்ளே நுழைந்த ஈராடவர்கள், முன்னாள் துணை அமைச்சருமான பொன்.வேதமூர்த்தியைத் தாக்கி இருப்பது, அரசியலில் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிப்பவர்களின் மனதை நெருடவேச் செய்யும். ஆகஸ்ட் 16-ஆம் நாள் புதன்கிழமை நடைபெற்ற இச்சம்பவத்தின்போது, சம்பந்தப்பட்ட ஆடவர்கள் வேதா’வின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியது கடும்போக்கு ஆகும். அத்துடன், அரசாங்கத்தை குறை கூறும் போக்கை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அவ்விரு ஆடவரும் மிரட்டி இருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. அரசாங்கத்தின் பெயரைப் பயன்படுத்தி தனிப்பட்ட பகை காரணமாக இவர்கள் இருவரும் ஏவப்பட்டனரா என்பது எண்ணிப்பார்க்கத்தக்கது.
எது எவ்வாறாயினும் இதுபோன்ற போக்கு உடனே நிறுத்தப்பட வேண்டும். அத்துடன், போகிற போக்கில் வேதாவின் மனைவியையும் தாக்கிவிட்டு, அவர் அணிந்திருந்த ஆபரணத்தையும் அபகரித்துச் சென்றிருப்பது அநாகரிகத்தின் உச்சம்.
ஒரு பெண், தன் கண் முன்னால் தன் கணவர் தாக்கப்படும்பொழுது எப்படி வாளாயிருக்க முடியும்? குறைந்தபட்சம் கணவருக்காக குரல் எழுப்புவார். அதைத்தான் திருமதி வேதாவும் செய்துள்ளார். அதற்காக அவரையும் தாக்கிவிட்டு, அவரின் தங்க ஆபரணத்தை அபகரிப்பது பெரும்போக்கிரித் தனமாகும். எல்லாவற்றுக்கும் மேலாக, வேதாவின் அலுவலகத்தில் ஏதோ கெட்ட திரவத்தை விசிறி அடித்து, அலுவலகச் சூழலைக் கெடுக்க முற்பட்டிருப்பதும் கண்டிக்கத்தக்கது.
அதேவேளை, இதைப்போன்ற தாக்குதல், ஆளுந்தரப்பை சேர்ந்தவர்களுக்கு எதிராக நடத்தப்படுமா? ஒருகாலும் நடத்தப்படாது என்பதுதான் நடுநிலையாளர்களின் பதில். காலம் என்னும் நல்லாசிரியனின் கவனத்தில் அனைத்தும் இடம்பெறும்.
மிஸ்டர் கீரன்! இது ஆரம்பமே, போகப் போகப் பாருங்கள். நாடோடி மன்னனும், வீரபாண்டிய கட்டபொம்மனும் போருக்கு தயாராகி விட்டார்கள். நாமெல்லாம் ரசிகர்கள். ரசிக்க வேண்டியதே நமது வேலை. understand ?,,,,,,,,,,,,,,,,,,அண்மையில் கோத்தா திங்கியில் துன் மகாதிமிர் கலந்துகொண்ட ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்தேன். அவரது கூட்டத்திற்கு பெல்டா மலாய்க்காரர்கள் ஜே ஜே என குவிந்துவிட்டார்கள். மலாய்க்கார்களிடையே நடக்கும் கூத்தை பார்த்து, ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். முன்பெல்லாம், ராமசாமிக்கும் குப்புசாமிக்கும் சண்டை என்றால், ராமசாமி போலீஸ் ஸ்டேஷன் சென்று குப்புசாமி மீது புகார் செய்யும்போது, போலீஸ் ராமசாமியை மேலும் தூண்டிவிட்டு, குப்புசாமிக்கு தூபம் போடுவான், அதேபோன்று குப்புசாமி புகார் செய்ய போலீஸ் ஸ்டேஷன் போவாரானால், “jangan lepas itu Ramasamy , banyak jahat punya orang ” என சொல்லி குப்புசாமியை குத்தி விடுவான். தற்போது நடப்பது, RECYCLE . Just dont bother .
பால்ய வயது நண்பரொருவர் அன்று சொன்ன வார்த்தைகள் எனது நினைவுக்கு வருகிறது. பணவிசயத்திலும், பெண்விசயத்திலும் அவ்வளவு சுலபமாக யாரையும் நம்பிவிட முடியாது. ஒருவர் இறந்தபின்பே அவர் இன்னாரென்று முத்திரைக்குத்த இயலும், என்றார். கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கையில், அவர் உரைத்ததிலும் பொருளிருப்பதாகவே உணர்கிறேன். அவ்வாறே, அரசியல்வாதிகளும் அப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களே ! காண்பதையும், கேட்பதையும், பத்திரிகைச்செய்திகளையும் முழுமையாக நம்புவதற்கில்லை. உலகளாவிய நிலையில் அரசியலில் அதர்மம் தைவிரித்தாடுகின்றது. உறுதிகொண்ட மனதோடு எவரும் செயற்படுவதில்லை. சந்தர்ப்ப-சூழ்நிலைக்கேற்பவே ஆட்டுவிக்கப்படுகின்றனர் !
மன்னிக்கவும் ! அதர்மம் தலைவிரித்தாடுகின்றது.
மக்களும் எத்தனை நாளைக்கு ஆரவார அரசியலை பார்த்து கொண்டிருப்பார்கள்.
அடிதடி அரசியலை பார்க்கணும்னு மக்களுக்கும் ஆவல் இருக்காதா ? என்ற எதிர்பார்ப்பை நஜிப் அரசாங்கம் நிறைவேற்றி இருந்தாலும் அம்னோவால் சோறு போட்டு வளர்க்கப்படும் ALI TINJU/JAMAL போன்றவர்கள் இந்த அடிதடி அரசியலில் அங்கம் வகிக்காதது நஜிப் அரசாங்கத்திற்கு ஒரு மைனஸ்.
எனது சிந்தனைக்கு இவர்களுக்கு எல்லாம் காரணம் ‘ காவல் துறையே ‘ என்பதாகும் . ஆரம்பம் முதலே இனம் , மதம் , ஆளும் கட்சி – எதிர் கட்சி என்று பேரம் பேசாமல் தன்னுடைய பொறுப்பை உணர்ந்து நடவடிக்கை எடுத்துஇருந்தால் , நாட்டில் தற்போது நடைபெறும் சகலவிதமான பொறுப்பற்ற வன்முறைகளுக்கும் குறிப்பாக குண்டர் கும்பல் அசம்பாவித நடவடிக்கை அனைவற்றிகும் வழிகண்டு தீர்க்கப்பட்டிருக்கலாம் .
ஐயா T .Sivalingam அவர்களே– இந்த நாட்டில் 1970 ல் இருந்து எல்லா துறைகளிலும் எப்படி ஆட்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர் ? எல்லாமே தோல் வழி. தகுதி திறன் பார்த்தா எடுத்தான்கள்? அப்போது எவனும் அதை பற்றி கேட்க வில்லை. நான் விமானப்படையில் சேர்ந்த போது தேர்வு எழுத வேண்டும்– எல்லா மலேசியர்களும் இருந்தனர். அப்போது பிரிட்டிஷ் விமானப்படை அதிகாரிகள் தேர்வு நடத்தினார்கள். அப்போது தோல் நிறத்திற்கு முக்கியத்துவம் கிடையாது. ஆனால் 1970 ல் 100 % எல்லாமே அந்த தோல் தான். மருந்துக்கு ஒரு மஞ்சளும் ஒரு கருப்பும் இருக்கும்-அவ்வளவுதான். காக்காத்திமிர் பதவிக்கு வந்த பின் பேருக்குத்தான் தேர்வு–ஆனால் விடைகள் யாவும் முதல் நாளே அவன்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தது. MAS தேர்வுக்கு மற்ற இனத்தவர்கள் கண்டுகொள்ளப்படவும் இல்லை -இப்படித்தான் எல்லா துறைகளிலும்– பிறகு எப்படி காவல் இருக்கும்? அதிலும் அரைவேக்காடுகள் – இருந்தும் அவர்கள் கடமைகளை ஒழுங்காக செய்ய முடியும் ஆனால் அந்த மனா நிலை கிடையாது- அரசே மூளை சலவை செய்து நம்மை எதிரிகளாக்கி இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது.
நாற்காலிகள் பறந்ததெல்லாம் எங்கள் ம .இ .கா வில் எப்போதோ நடந்து மலேசிய அரசியல் வரலாட்ரில் இடம் பிடித்து விட்டொம் ! இதெல்லாம் சகஜம் அப்பா !! நாங்கள் அடிக்காத கூத்தா ! தானை தலைவனே கோட்டை கழட்ட்றி விட்டு கோதாவில் இறங்குவார் ! தளபதிகளும் ! மாகாணத்திற்கு ஒரு மணியம் கோதாவில் குதிப்பார்கள் ! FRU வரவைத்து கூட்டம் நடத்துவோம் ! போலீசை வைத்து மக்களை அடக்குவோம் ! அப்போது இந்த மகா மனிதர் தானே பிரதமர் ! தானை தலைவனின் ஊட்டின கேக்கை வாய் பிளந்து உண்டவர்தானே !! இந்திய சமுதாயத்தில் ஏன் இவ்வளவு அவலம் ! தமது அமைச்சரவையில் தனக்கு கீழ் ஒரு மாபெரும் இனத்தின் தலைவன் ! அவனை கேள்வி கேட்க்கவோ ! ஆலோசனை வழங்க வோ இவருக்கு உரிமை இல்லையா அல்லது அக்கறை இல்லையா ! இந்த இனம் எந்த கேடு கேட்டால் நமக்கு என்ன என்ற அக்கறை இன்மை !! சரித்திரம் திரும்பும் என்பார்களே அது இது தானோ !!
ரௌடிக்கிட்டையே வந்து ரௌடிசம் பண்ணாதிங்கனு சொல்லறது, வடிவேலுக்கிடடையே போயி காமிடி பண்ணாதிங்கன்னு சொல்றதுக்கு சமம் ! எந்த ஒரு ராஜ்யமும் அராஜகம் இன்றி வீழ்ந்தஇல்லை , மறந்து விடாதீர்கள் !