இலங்கை பொருளாதாரம் உள்ளிட்ட விடயங்களில் முன்னோக்கி செல்ல வேண்டுமாயின், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் அமரர் அ.அமிர்தலிங்கத்தின் 90வது பிறந்தநாள் நினைவுகளுடான நினைவுப் பேருரையும், ‘இலட்சிய இதயங்களோடு’ என்னும் கருப்பொருளிலான நூல் வெளியீடும் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ். பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே கூட்டமைப்பின் தலைவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “இலங்கையின் ஒற்றுமையும், பாதுகாக்க வேண்டும் மற்றும் அது தொடர்பான மக்களுடைய இன ரீதியான மாற்றங்களை மக்கள் எற்றுக்கொள்ள கூடிய ஒரு அங்கீகாரம் வழங்கப்படவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் இணைந்து ஒரு மாநிலமாக மாறவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து மறைந்த முன்னாள் எதிர்கட்சித் தலைவர் அமிர்தலிங்கம் போன்றவர்கள் என்ன விதமான சேவையினை ஆற்றினார்கள் என்பதை மக்கள் அறிய வேண்டும்.
இதில் தந்தை செல்வாவினால் ஆரம்பிக்கபட்டு மறைந்த அமிர்தலிங்கத்துடன் தொடர்ந்து அதன்பின்னர் தற்போது எமது பாதை கடுமையான பாதையாக இருக்கின்றது. இப்பிரச்சினைகள் நாடு சுதந்திரம் அடைந்துக்கு முன்னர் தீர்க்கப்பட வேண்டிய நிலையில் இருந்து இருக்க வேண்டும்.” என்றுள்ளார்.
-puthinamnews.com