முடிச்சுக்கு மேல் முடிச்சு விழுந்த கெட்கோ சிக்கல் மெல்ல அவிழ்க்கப்படுகிறது! முதன் முதலில் கருப்பண்ணன் கம்பெனிதான், இந்த கெட்கோ விவகாரத்தில் முதல் முடிச்சைப் போட்டது; தொடர்ந்து அடுத்தடுத்து போடப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கும் பணி தற்பொழுது தொடங்கிவிட்டது.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கெட்கோ நில மேம்பாட்டுத் திட்டம் சம்பந்தப்பட்டப் பிரச்சினையில் நீண்டகாலத் துயில் கொண்டிருந்தாலும், தற்பொழுது அதிரடியில் இறங்கியிருப்பதால், கெட்கோ நிலக் குடியேற்றக்காரர்கள் தம் உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பிறக்க, விழிகளை அகல விரித்து ஆச்சரியம் மேலிட உற்று நோக்குகின்றனர்.
இந்தப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக இதில் தொடர்புடைய இரு டத்தோ-க்களை ஊழல் தடுப்பு ஆணையம் தடுத்து வைத்துள்ளது. முன்னதாக, கடந்த 18-ஆம் நாள் இதன் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து கெட்கோ தொடர்பில் முதல் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. 68 வயதான அவ்வாடவர்தான், இந்த நிலப் பரிவர்த்தனையில் தரகராக செயல்பட்டிருக்கிறார்.
அவரின் கட்டுக் காவல் நீடிக்கும் நிலையில் தற்பொழுது 54, 58 வயதுடைய இவ்விரு சகோதரர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கிள்ளான் பள்ளத் தாக்கில் பிரபலமான ஒரு குடும்ப நிறுவன குழுமத்தில் அடங்கியுள்ள இரு நிறுவனங்களின் தலைமை நிருவாக அதிகாரிகளாக சம்பந்தப்பட்ட இரு டத்தோக்களும் பணியாற்றும் நிலையில், இன்று சம்பந்தப்பட்ட இருவரும் புத்ராஜெயா நீதிமன்றத்தில் நேர்நிறுத்தப்படவுள்ளதாக நீதித் துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், இந்த நிலத்தை குடியேற்றக்காரர் மேம்பாட்டுத் திட்டமாக அறிவித்தபொழுது, 468 பேர் ஆளுக்கு 7,500 வெள்ளி வீதம் செலுத்தி இந்தத் திட்டத்தில் இணைந்தனர். இருந்தபோதும், கெட்கோ-வை நிருவகித்தவர்களின் நிர்வாகக் குளறுபடியால், இந்தத் திட்டம் தரை தட்டிய கப்பலின் நிலைக்கு ஆளானது. கரும்பு பயிரிடும் நிலத்திற்கு மூவாயிர வெள்ளி, ஓர் ஏக்கர் வீட்டு மனைக்காக மூவாயிர வெள்ளி, தண்ணீர் வசதி மற்றும் மேம்பாட்டுப் பணிக்காக 1,500 வெள்ளி யென்று ஏழாயிரத்து ஐந்நூறு வெள்ளி கட்டிய குடியேற்றக்காரர்களைக் பற்றியெல்லாம் கவலைப்படாத அன்றைய கெட்கோ நிருவாகம் யூ.ஏ.பி. மற்றும் நெதர்லாண்ட்ஸ் ஃபைனான்ஸ் கம்பெனி ஆகிய நிதி நிருவனங்களில் இருந்து பெற்ற மில்லியன் கணக்கான கடனைப் பற்றியும் கவலைப்படாமல் ஏறக்குறைய திவால் நிலைக்குக் கொண்டு சென்று, அப்படியே கைவிட்டு விட்டது.
அந்த சமயத்தில் கெட்கோ நிலத்தில் பராமரிப்புப் பணியை மேற்கொண்டிருந்த மராமத்து நிறுவனமான கருப்பண்ணன் டிரேடிங் கம்பெனி தனக்கு வர வேண்டிய இலட்சக் கணக்கான நிலுவைத் தொகைக்காக நிதிமன்றத்தை நாடி, கெட்கோவை திவால் நிறுவனமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கச்செய்தது.
இப்படிப்பட்ட நிலையில்தான் சிங்கம் & யோங் நிறுவனம் இதில் தலையிட்டது. தரகராக செயல்பட்ட இந்த நிறுவனமும், குடியேற்றக்காரர்களின் நலனைப் பற்றி அக்கறைப் படாமல், கெட்கோ நிலத்தை தற்பொழுது பராமரிக்கும் தாமரை குழுமத்திற்கு சந்தை மதிப்பிற்கு மிகவும் கீழான மதிப்பீட்டில் அடிமாட்டு விலையில் பரிவர்த்தனை செய்த செய்தி யெல்லாம் செம்பருத்தி வாசக பெருமக்கள் அறிந்ததுதான்.
மலேசிய இந்திய தோட்டப்பாட்டாளி சமூகத்தில் அண்மைய ஆண்டுகளாக மிகவும் சலசலப்பை ஏற்படுத்திய இந்தச் சிக்கல் குறித்து, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கடந்த ஆண்டு விசாரணையை முடுக்கிவிட்டது. ஊழல் தடுப்பு ஆணையத்தின் தலைமை ஆணையர் கெட்கோ குடியேற்ற மக்களை நேரில் சந்தித்தது, நெகிரி செம்பிலான் மாநில தலைமை அலுவலகம்-நெகிரி செம்பபிலான் மேம்பாட்டுக் கழகம, கணக்காய்வாளர் நிறுவனமான சிங்கம் & யோங்-தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம்- தாமரை ஹோல்டிங்க்ஸ் குழுமம் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றியது ஆகிய நடவடிக்கையில் அடிப்படையில் மிக அண்மையில் இந்த இரு டத்தோக்கள் கைதும் நடந்துள்ளது.
எது எவ்வாறாயினும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
நியாயம் ஒரு நாள் இறைவனின் காதுக்கும் எட்டும். குடியேற்றவாசிகளின் தலைவரின் காரை தீயிட்டுக் கொளுத்தினார்கள். வீட்டை நொறுக்கினார்கள். ரவுடிகளை வைத்து அடித்தார்கள். அடிவாங்கியவர்களை காவல்துறை கைது செய்து ஜெயிலில் அடைத்தார்கள்! ஆக, இதன் பின்னணியில் காவல்துறை, ம.இ.கா.வின் மாண்புமிகுக்கள் இன்னும் பலர் உள்ளனர். முழு அரசாங்கத்தின் பலத்தோடு இவர்கள் செயல்பட்டார்கள். ஊழல் தடுப்பு ஆணையம் என்ன செய்கிறது பார்ப்போம்.
ஒன்று பட்டால் சாமானியர்களும் சாதிக்க முடியும் ! பணம் பதவி பெற்றவர்களையும் அறவழியில் நீதியின் முன் நிறுத்த முடியும் ! என்பதை நிரூபித்து உள்ளனர் கெட்கோ நில குடியேற்ற காரர்கள் ! வாழ்த்துக்களும் ! பாராட்டுகளும் எமது வீர மக்களுக்கு ! NUPW வின் தோட்ட மாளிகை ! பிபி நாராயணன் ஹாஸ்டல் ! மற்றும் சில தோட்டங்கள் ! ஒரு சில நிறுவனங்கள் ! அண்ணா , அண்ணா என்று நாராயணனுக்கு துதி பாடி அவரை ஜெனோவாவிற்கு அனுப்பி வைத்த விடிந்தும் விடியாத காலை பொழுதில் நெட்ரியில் விளக்கை கட்டி கொண்டு கொசு கடியில் ! விஷ ஜந்துக்களுக்கு பயந்து ரத்தமும் வேர்வையும் சிந்தி உழைத்து உரு குலைந்த தோட்ட தொழிலாளர்கள் கொடுத்த ஒரு வெள்ளியில் உரு வானது !
இன்று அந்த நிறுவனங்களெல்லாம் அம்போ ! NUPW தோட்ட தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வாங்கி கொடுப்பதற்குள் மலேசியாவில் தோட்டங்கள் இல்லாமல் போய்விடும் ! அல்லது பங்களா தோட்ட தொழிலாளர் சங்கம் உருவாகி ! ஒரு பங்களா தலைவன் ஆகி விடுவான் ! மிச்சம் மீதி உள்ள தோட்டத்து தமிழன் அவனுக்கு அடிமையாக வேண்டியதுதான் !!
நாராயணன் தமிழ் தோட்ட தொழிலாளர்களை நன்றாக ஏமாற்றி மடையர்களாக்கிவிட்டான்– ஆனால் ஏன் ஒருவர்கூட அவனின் முகத்திரையை கிழிக்க வில்லை?
இதற்கு முதல் காரணம் கெட்கோ ம.இ.கா தலைவன் பாப்பையா என்னும் தெலுங்கன் . இதை பற்றி எந்த தெலுங்கனும் எழுவதில்லை ..
இந்த கெட்கோ விஷயத்தில் இந்த பாப்பையா எவ்வளவு வாங்கினான் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கொஞ்சம் விசாரித்ததால் நலம்
இந்த அவலங்களுக்கு காரணமாக இருந்த தே.தோ.தொ.சங்கமும் அதன் அதன் தலைவன் பி.பி.அண்ணா என்று அன்போடு அழைக்கப்பட்ட பி.பி.நாராயணனும்தான். இவர்கள் தொடங்கிய எதுவும் உருப்பட்டதாக வரலாறே இல்லை. த கிரேட் அலோர்னியஸ் ஒரு கம்பெனி ஆரம்பித்தார்கள். என் தாயாரும் அதில் இரண்டாயிரம் வெள்ளி முதலீடு செய்திருந்தார். எல்லாமே அம்பேல். பி.பி.நாராயணன் எனும் திருடனை இதுவரை யாரும் தோலுரித்து காட்டாததது வருத்தமளிக்கிறது. செம்பருத்தி அதனை செய்ய வேண்டும்.
கெட்கோ ! முடிச்சு மட்டும் அல்ல ! இந்த ஏழை சமுதாயம் தலைவர்களின் வீர வசனங்களில் மதி மயங்கி அரசியல் ரீதியாகவும் ! சமூக அமைப்புகளின் வாயிலாகவும் ! சுரண்ட பட்ட பல முடிச்சுகள் அவிழ்க்க படாமல் சுயநல முதலைகளின் வாயில் சிக்கி கொண்டு இருக்கிறது ! இருபது ஆண்டுகளுக்கு முன் அடிவாங்க உடலில் தெம்பு இருந்தது ! சமுதாயத்திற்கு குரல் கொடுத்து எதிர்த்து நின்றோம் ! இன்று பொக்கெட் காளி ! உடம்பில் தெம்பு இல்லை ! நடக்க வே தள்ளாடுகிறது ! ஜலான் மணியம் கையால் அடியெல்லாம் வாங்கமுடியாது ! திருடனாய் பார்த்து திருந்த விட்டால் திருட்டை ஒலிக்க முடியாது ! என்று MGR பாடலை ஈன சுரத்தில் பாடி விட்டு போய் சேர வேண்டியதுதான்! இளைய தலைமுறையே நீயாவது இந்த சமுதாயத்தின் அவலத்தை போக்க வீரம் கொண்டு எழுந்து வா ! பூமியில் இருந்தலும் ! மேலே இருந்தாலும் எங்கள் ஆசிர்வாதம் எப்போதும் உங்களுக்கு உண்டு !!