தமிழரை கொன்ற பார்ப்பனர்களின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்தனை இழிவு????*
பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான் நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்
தீபாவளி
இன்று தமிழ்நாட்டில் விறுவிறுப்பாகக் கொண்டாடப்பெறும் திருவிழா தீபாவளி. நகர்ப்புறம் சார்ந்ததாகவும் துணி என்ணெய் மாவு பட்டாசு ஆகிய பெருந்தொழில்களின் பொருளாதாரம் சார்ந்ததாகவும் இத்திருவிழா கொண்டாடப்படுகிறது. தகவல் தொடர்புச் சாதனங்கள் தரும் பகட்டான விளம்பரங்களால் இது தமிழர்களின் ‘தேசிய திருவிழா’ போலக் காட்டப்படுகிறது. ஆயினும் தைப்பொங்கல் திருவிழா போல மரபுவழிப் பொருளாதாரம் சார்ந்ததாகவும் ஒரு திருவிழாவிற்குரிய உள்ளார்ந்த மகிழ்ச்சியோடும் சடங்குகளோடும் கொண்டாடப் பெறுவதாகவும் தீபாவளி அமையவில்லை. தைப்பொங்கல் சமய எல்லையினைக் கடந்து நிற்கும் திருவிழா. இது பழந்தமிழரின் அறுவடைத் திருவிழா. எனவே தான் இன்று ரோமன் கத்தோலிக்கத் தேவாலயங்களில் கூடத் தைப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழாவாக அமைகிறது.
தமிழர் திருவிழா – இந்துக்களின் திருவிழா என்ற வேறுபாட்டினை எவ்வாறு பிரித்தறிவது? பழைய வழிபாட்டு முறைகளோடு கூடிய தொல் சமய வழிபாடுகள் இவற்றின் சாரத்தையும் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்த சைவம் வைணவம் ஆகியவையே தமிழர்களின் பழைய மதங்களாகும். இவை காட்டும் திருவிழாக்களான கார்த்திகைத் திருவிழா திருவாதிரைத் திருவிழா தைப்பூசத் திருவிழா மாசிக்களரி எனப்படும் சிவராத்திரித் திருவிழா பங்குனி உத்திரம் சித்திரைப் பிறப்பு வைகாசி விசாகம் ஆடிப் பதினெட்டாம் பெருக்கு ஆகியன சைவமும் வைணவமும் பெருஞ்சமயங்களாக நிலைபெறுவதற்கு முன்னரே தமிழர்கள் கொண்டாடிய திருவிழாக்களாகும். பக்தி இயக்கத்தின் வளர்ச்சியில் இவை சைவ வைணவ மதங்களாலும் அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டன.
தீபாவளி தமிழ்நாட்டின் மரபுவழிப் பொருளாதாரத்தோடும் பருவ நிலைகளோடும் சடங்குகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழா. பார்ப்பனியத்தின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் விலகி நிற்கிற சிற்றூர்களில் தீபாவளி கொண்டாடப்படுவதில்லை. தீபாவளியின் அடையாளமான வெடி அதன் மூலப்பொருளான வெடிமருந்து ஆகியவை தமிழ்நாட்டிற்குப் பதினைந்தாம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். விளக்குகளின் வரிசை எனப் பொருள்படும் தீபாவளி (தீபூஆவளீ) என்னும் வட சொல்லுக்கு நிகரான தமிழ்ச் சொல்லும் புழக்கத்தில் இல்லை. தமிழர்களின் விளக்குத் திருவிழா என்பது திருகார்த்திகைத் திருவிழாவே. உண்மையில் இத்திருவிழா பார்ப்பனிய மதத்தின் திருவிழாவேயன்றித் தமிழர் திருவிழா ஆகாது.
‘நரகனைக் கொன்ற நாள் நல்ல நாள் விழாவா’ என்று பாரதி தாசன் பாடுவதும் இங்கே நினைவுக்குரியது.
மானமில்லா மக்களே தீபாவளி கொண்டாடுகிறார்கள்
இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். தீபாவளி என்பது பார்ப்பனர்களின் பண்டிகை தமிழர் திருவிழா அல்ல என பல தமிழ் அறிஞர்களும் தலைவர்களும் சொன்னவற்றின் சில குறிப்புகள் பின்வருமாறு:
மறைமலை அடிகள் சொன்னது:
1. ‘ஆரியப் பார்ப்பனர்கள் கட்டுவித்த கற்பனைக் கதையே தீபாவளி’ – ‘தமிழர் மதம்’ என்ற நூலில்
2. ‘ஆரியரின் இத்தகைய வெறியாட்டு வேள்விகளை அழித்துவந்த சூரன் இராவணனன் முதலான நிகரற்ற தமிழ் வேந்தர்களே ஆரியர்களால் அரக்கர் என்று இகழ்ந்து பேசப்படு வராயினர்.’
இராமகிருஷ்ண பரமகம்சரின் சீடர் விவேகானந்தர் சொன்னது:
1.தென்னிந்தியாவில் இருந்த மக்களே இராமாயாணத்தில் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்’
பி.டி.சி சீனிவாசய்யங்கார் சொன்னது:
இராமன் காலத்தில் தென் இந்தியா தஸ்யூக்கள் இராட்சதர்களுக்குச் சொந்தமாயிருந்தது. இவர்கள் ஆரிய முனிவர்கள் செய்து வந்த யாகத்தை எதிர்த்தார்கள். இருந்தாலும் வட இந்தியாவிலிருந்து வந்த ஆரியர்களைப் போலவே இந்த இராட்சதர்கள் என்பவர்களும் நாகரிகமடைந்திருந்தார்கள்.’
முனைவர் தொ.பரமசிவன் ‘அறியப்படாத தமிழகம்’ நூலில்:
1. தீபாவளி தமிழ் நாட்டின் மரபு வழிப் பொருளாதாரத்தோடும் பருவநிலைகளோடும் தொடர்பில்லாத ஒரு திருவிழாவாகும்.
2. தீபாவளியைக் குறிக்கும் வெடி அதன் மூலப்பொருளான வெடி மருந்து ஆகியவை தமிழ் நாட்டிற்கு 15ஆம் நூற்றாண்டு வரை அறிமுகமாகவில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
3. நரகாசுரன் என்னும் அரக்கன் கிருஷ்ணனால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் தீபாவளிக் கதை திராவிடப் பண்பாட்டோடு தொடர்புடையதன்று. மாறாக இன்று பிராமணிய மதத்தின் சார்பாக எழுந்த கதையாகும்.
4. இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தகாரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த(இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார். ஆகவே பிராமணிய மதத்தின் பழைய எதிரிகளான சமணர்களும் தீபாவளிச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். எனவே நரகாசுரன் அழிந்ததாக பிராமணியத் தீபாவளிக் கதைகள் குறிப்பிடுவது மகாவீரர் இறந்த நாளையே ஆகும்
5. விஜய நகரப் பேரரசான இந்து சாம்ராஜ்யம் தமிழ்நாட்டில் நுழைந்த கி.பி. 15ஆம் நூற்றாண்டு தொடங்கியே தீபாவளி இங்கு ஒரு திருநாளாகக் கொண்டாடப்படுகிறது
பெரியார் சொன்னது:
இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை அவனது தலைமைக்கு அடிமை மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.
“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன் அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.
தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)
1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.
2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.
3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கல்வி செய்ய ஆசைப்பட்டது.
4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.
5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.
6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.
7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.
8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.
9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.
10. இந்த மகிழ்ச்சியை (நரகாசுரன் இறந்ததற்காக) நரகாசுரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.
எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால் எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!
தீவாளியா? – பாரதிதாசன் பாடல்:
நரகனைக் கொன்றநாள் நல்விழா நாளா?
நரகன் இறந்ததால் நன்மை யாருக்கு?
நரகன் என்பவன் நல்லனா? தீயனா?
அசுரன்என் றவனை அறைகின் றாரே?
இராக்கதன் என்றும் இயம்புகின் றாரே?
இப்பெய ரெல்லாம் யாரைக் குறிப்பது?
இன்றும் தமிழரை இராக்கதர் எனச்சிலர்
பன்னு கின்றனர் என்பது பொய்யா?
இவைக ளைநாம் எண்ண வேண்டும்.
எண்ணா தெதையும் நண்ணுவ தென்பது
படித்தவர் செயலும் பண்பும் ஆகுமா?
வழக்கம் என்பதில் ஒழுக்கம் இல்லையேல்
கழுத்துப் போயினும் கைக்கொள வேண்டாம்.
ஆயிரம் கோடி ஆண்டு செல்லினும்
தூயது தூயதாம் துரும்பிரும் பாகாது!
‘உனக்கெது தெரியும் உள்ளநா ளெல்லாம்
நினத்து நடத்திய நிகழ்ச்சியை விடுவதா?’
என்று கேட்பவனை ‘ஏனடா குழந்தாய்!
உனக்கெது தெரியும் உரைப்பாய்’ என்று
கேட்கும்நாள் மடமை கிழிக்கும்நாள் அறிவை
ஊட்டும்நாள் மானம் உணருநாள் இந்நாள்.
தீவா வளியும் மானத் துக்குத்
தீ-வாளி ஆயின் சீஎன்று விடுவிரே!
தமிழரை கொன்ற வடவரின் வெற்றியை தமிழர்களே கொண்டாடுவது எத்துணை இழிவு. இறப்பை தமிழர்கள் ஒருபோதுமே கொண்டாடுபவர்கள் இல்லை.
எதற்காக தீபாவளியை கொண்டாடுகின்றீர்கள்? என கேட்டால் எம் முன்னோர் கொண்டாடினார்கள் அதனால் கொண்டாடுகின்றோம் என கூறுகிறார்கள்.
பண்டை தமிழர்கள் தீபாவளி கொண்டாடிய வரலாறு இல்லை. சுமார் சில நூறு ஆண்டுகள் மட்டுமே தெள்ளு தமிழுக்கு ஏற்பட்ட தாழ்ச்சியின் விளைவாக கொண்டாடுகிறோம்.
கார்த்திகை விளக்கீடு வேறு. தீபாவளி வேறு.63 நாயன்மார் காலத்திலும் 12 ஆழ்வார் காலத்திலும் கொண்டாடப்படாத தீபாவளி இன்று தமிழர்களால் கொண்டாடப்படுவது ஏன்?
தமிழர்களின் திரு நாள் தை திரு நாள். தீபாவளி தமிழர் பண்டிகை அல்ல என்பதற்கும் அப்பால் தீபாவளி தமிழர்களை இழிவு படுத்தும் ஒரு விழா என்ற உண்மையை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். விழாக்களை கொண்டாடுவதற்கு முன்பு எதற்கு கொண்டாடுகின்றோம் என ஆய்ந்து அறிந்து கொண்டாட வேண்டும்.
அன்புடன்- தமிழவன்
பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
நாங்கள் ஆடு வெட்டி சமயத்திட்கு எதிராகவே கொண்டாடுகிறோம்,மலேசியாவிலுள்ள ஆளும் வர்க்கத்தால் உழைக்கும் வர்காட்டுக்குள் திணிக்கப்பட்ட ஒரு விழா. இன்று சீக்கிய சமூகம் அதை கொண்டாடுவது குறைவு.
ஐயா இந்த உண்மைகளை எல்லாம் ,ம .இ .கா .சுப்ரமணியிடம் சொல்லி நஜிப்பிடம் பேசி தீபாவளி பொது விடுமுறையை அரசாங்க பதிவிலிருந்து அகற்ற சொல்லுங்கள் ! ஒரு திருநாளை முன்னிட்டு ஒரு பொது விடுமுறையை அங்கீகரித்து ! இந்திய சமுதாயம் இந்த நாளிலாவது அணைத்து துன்பங்களையும் மறந்து சந்தோசமாக இருந்து விட்டு போகட்டுமே ! நமக்கு எதை எடுத்தாலும் முரண் பாடான கருத்துக்கள் தான் ! சொல்வதுபோல் மானங் கேட்ட தமிழன் தான் தீபாவளியை கொண்டாடுவான் என்றால் ! மலேசியா தமிழன் எல்லாம் மானங் கெட்டவன் என்று சொல்ல வருகிறீரோ ! தீபாவளிக்கு திறந்த இல்ல உபசரிப்பு செய்பவனெல்லாம் மானங் கெட்டவனா ! சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துபவர்கள் மானங் கெட்டவர்களா ! டிவி 3 ! rtm ! thraga ! மானங் கேட்ட நிறுவனங்களா !! சும்மா கெடந்த சங்கை ஊதி கெடுத்தானாம் ஆண்டி !!
#பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் மகாவீரர் இறந்ததை தான் நரகாசுரன் அழிந்ததாக கொண்டாடப்படுகிறது என வரலாற்று வழி ஆதாரங்கள் மற்றும் மரபு வழிப்பட்டும் விளக்குகிறார்#
இதற்கு ஆதாரம் எங்குள்ளது?
#ஆனால் தீபாவளி தமிழரின் திருவிழாவாக அமையாமல் இந்துக்களின் திருவிழாவாக அமைகிறது.#
“இந்து” என்பதற்கான விளக்கம் மற்றும் வரையரை யாது? ‘இந்து’ என்பதை வரையறுத்துக் கூறும் நூல் யாது?
#இந்த நாள் பிராமணிய மதத்தின் எதிரியான சமண மதத்தின் 24ஆம் தீர்த்தகாரரான வர்த்தமான மகாவீரர் வீடுபேறடைந்த(இறந்த) நாளாகும்.தான் இறந்த நாளை வரிசையாகத் தீபங்களை ஏற்றிக் கொண்டாடுமாறு மகாவீரர் தம் மதத்தவரைக் கேட்டுக் கொண்டார்.#
மகாவீரர் இறந்த காலம் எப்பொழுது? வடக்கே புராணக்கதைகளின் அடிப்படையில் தீபாவளி கொண்டாடத் துவங்கியது எப்பொழுது?
பூனை புலியைப் பார்த்துத் தனக்குச் சூடு போட்டுக் கொண்டது போல வடபுல வைணவர்களைக் கண்டு சமணரும் தீபாவளி என்றொரு நாளைக் கொண்டாட விரும்பி அவர் தமக்கு ஒரு கதையை ஏற்படுத்திக் கொண்டனரா?
#“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன் அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.#
அப்படியானால் மலேசியாவில் வாழும் ஏறக்குறைய 99% தமிழர்கள் மானமில்லாதவர்களா அல்லது பகுத்தறிவு இல்லாதவர்களா?
#எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும் வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால் எப்படி – யார் – எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து அவளிடம்#
அப்படியானால் மலேசியாவில் வாழும் 99% தமிழர் தாசிகள் என்றும் தேவடியான்கள் என்றும் கூற வருகின்றாரா கட்டுரையாளர்? என்ன ‘அசால்ட்டாக’ கட்டுரை வரைந்திருக்கின்றார் கட்டுரையாளர்!
இதுவும் பதிவிற்கு ஏற்றதாக செம்பருத்தி ஆசிரியர் கருதுவாரேயானால் இவ் இணையத்தளத்தின் தரம் தாழ்ந்து போகும்.
மணியம், தேனீ ஆகிய இருவரின் பத்தாம்பசலி விதண்டாவாதங்கள் நகைப்புக்கு உரியவை.
தமிழர்கள் கண்டதே காட்சி கொண்டதே கோலம் என வாழும் திடாக்பா மனோபாவத்தால்தான் ஆரிய பாதம் வருடும் கேவலம் தொடர்கிறது. நால்வேதமும் படிங்க. பார்ப்பனத்தி அல்லாத எல்லா வர்க்கப் பெண்களும் ஆரியனின் வைப்பாட்டிகளே எனப்பட்டிருப்பது புரியும். கட்டுரையாளர் தர்க்கம் செய்வது உங்கள் குடும்பப் பெண்களுககும் சேர்த்துதான். அது வேண்டாம் என்கிறீரோ?!
Excuse me for writing in English. the writer seems to have done some real research. We may have lost our understanding by indoctrinations. But the truth can never bi hidden forever. In time the truth will surface. When the truth surfaces, due to extreme absence of it for a long time, great demand will be required to prove the truth which have been suppressed by lies. Darkness will have flee when light comes. In light we can see only shadows. It is surely healthy to discuss in media such as this. The Author stated the behaviour of the youth with that of prostitutes just as an example and I am sure he never meant all our women are prostitute. It is not good to twist the writer’s notion just because one cannot accept the writer’s point. A lot of our history has to unearthed so that our identity will be revealed. As more informations are unearthed, our false identity will give rise to some but will also put away the falsehood which have clouded the truth.until than. Thank you. God Bless All.
ஆரியர்கள் என்றும் ! பார்ப்பனர்கள் என்றும் நமது நாட்டில் தமிழர்கள் பிரிந்து வாழ்வதாக தெரியவில்லை ! தமிழர்கள் இந்துக்கள் இல்லையென்றால் இந்த நாட்டில் இந்திய வம்சாவளியில் தமிழர்கள் நிறைந்துள்ள நமது நாட்டில் ஏன் இத்துணை இந்து கோவில்கள் ! தைப்பூசம் எதற்க்கு ! மாரியம்மன் கோவில் ! முருகன் கோவில் ! வினாயகர் கோவில் ! சிவன் கோவில் எதற்க்கு ! நம் தமிழர்கள் தானே இத்துணை கோவில்களிலும் வழி படுகிறோம் ! ” மானமில்லா மக்களே தீபாவளி கொண்டாடுகிறார்கள் ” இன்றளவும் மானமில்லா மக்களே தீபாவளியை கொண்டாடிவருகின்றனர் ” தீபாவளி என்பது பார்ப்பனர்களின் பண்டிகை தமிழர் திருவிழா அல்ல ! கட்டுரையாளரின் இந்த வரிகள் இந்த நாட்டில் வாழும் ஒட்டு மொத்த தமிழனையும் அவமான படுத்துவதாகும் ! இவன் யார் தமிழனை கேவலப்படுத்துவதர்க்கு ! 100 ஆண்டுகளுக்கும் மேல் காலம் காலமாக இந்தநாட்டில் தீபாவளி கொண்டாடும் ,படித்தவன் ! படிக்காதவன் ! பணம் படைத்தவன் ! பாமரன் ! அணைத்து தமிழனும் மாணமில்லாதவனா ! அங்கங்கே பல சபைகளும் ! சங்கங்களும் ! மானமில்லா ஜாதி சங்கங்களிலும் உங்களின் வேதத்தையும் ! விளக்கத்தையும் வைத்து கொள்ளுங்கள் ! கல்வியிலும் ! பொருளாதாரத்திலும் ! நாகரிகத்திலும் ! கலாச்சாரத்திலும் ! தமிழன் முன்னணி வகிக்க வேண்டும் என்று ! ஜாதி ! மதம் ! இனம் ! கடந்து ! ஓரினமாய் உயர்த்த நிலையில் தமிழன் வாழ வேண்டும் என்ற வேட்க்கையில் வாழும் எங்களிடம் வேண்டாம் !! செம்பருத்தி ஆசிரியர் அவர்களே இதை போன்ற மக்களை குழப்பும் குப்பைகள் நமக்கு வேண்டாம் ! மானம் மரியாதையோடு வாழும் மலேசியா தமிழனை ! மானமில்லா தமிழன் என்று சப்பை கட்டும் இதை போன்ற குப்பைகளை இனியும் வெளியிட்டு இந்த இதழின் தரத்தை குறைத்து கொள்ளாதீர்கள் !!
பாவம், வாய் இருக்கிறதே என்று வடை சுட்டு வித்து கொண்டிருக்கிறார்கள் ! தீபாவளி இந்து சமூகத்தினரின் ஒரு முக்கிய பண்டிகை ! இதில் இந்து தமிழனான நான் கொண்டாடுவதில் எந்த சிறுமையும் இல்லை ! எனக்கு தீபாவளியில் நினைவுக்கு வருவது கிருஷ்ணா பரமாத்மாவின் உயர்ந்த குணம் ! அது கடவுளின் நிலை ! இதோ உங்களுக்காக : 16 ,000 பெண்களை கடத்தி வந்து வலுகடடாயமாக மணந்து கொள்கிறான் நரகாசுரன் ! அவனை கொன்றவுடன் , அப்பெண்கள் தங்கள் நிலையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடன் முறையிடுகின்றனர் ! அப்பெண்கள் தங்களை, தங்கள் சுற்றம் இனி ஏற்று கொள்ளாது , எப்படி இனி பெண்மையின் உடம்பில் வாழ்வது என்று கேட்க, ஸ்ரீ கிருஷ்ணரும் ஒன்றுமே தெரியாதது போல் , சரி உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன் என்றார். எங்கோ ஒரு குரல் திருமணமான முக்தி என்று கூறவே, அதே நிமிடம் மாயவன் 16 000 அவதாரமாக மாறி அப்பெண்களை மணந்தும் ஒரு பாடல் …. அப்பாடலில் பெண்கள் கிருஷ்ணனை துதித்து போற்றுகின்றனர் ! பாடல் முடியும் தருவாயில் , அப்பெண்களுக்கு முக்தி. அதாவது , அப்பெண்களை தன் 16 000 உருவங்களுடன் ஒன்றாக்கி , தானே யாதுமாகினார் ! சொல்லவே எவ்வளவு பிரமாதமாக உள்ளது இங்கே ! எங்கே 16 000 விதவைகளுக்கு ஒரே நேரத்தில் இந்த ‘வாயாலே வடை சுடும் சங்க தலைவர்’ பொன் ரங்கன் சமூக பிரச்சனைகளை களைந்து முக்தி நிலை அடைய வழி சொல்லட்டுமே ….அவர் ஜாலராக்கள் ? அல்லது மற்ற அறிஞர் பெருமக்கள் ?
நாங்க நான்கு வேதங்களும் இரு இதிகாசங்களும் படித்தாய்ந்து எழுதுகிறோம். நீங்க எப்படி மணியம், டிலிப் இன்னபிறர்? மாங்கல்யம் தந்துனானே மந்திரத்தின் பொருளாவது தெரியுமா? கண்டதே காட்சி கொண்டதே கோலமென வாழ்ந்து விட்டவர்களையும் தமிழனின் தீபாவளி மயக்கத்தில் கொழுக்கும் ஊடக வியாபாரிகளையும் நீங்க மேற்கோள் காட்டும்போது தெரிகிறது, உங்க அதிமேதாவித்தனம். தமிழின மானத்தைக் காக்க போராடுபவர்களை அடா புடா என்கையில் தெரிகிறது, உங்க பிராமணன் அடிவருடும் குணம். பிராமணன் அல்லாத எல்லா இந்துப் பெண்களுமே (உங்க… உட்பட) பிராமணனின் தாசி என வேதம் சொல்வதை நீங்க ஏற்றுக் கொண்டால், நீங்க இந்துதான் ஆனால், இனமானமற்ற தமிழன் என ஒப்புக் கொண்டு ஒதுங்கிக் கொள்கிறோம்.
ஒரு சந்தேகம் நண்பா, ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதத்தில் நீங்க எந்தப் பிரிவு? அல்லது Rojak?
தீபாவளி இந்துக்கள் பண்டிகைதான். தப்பேதுமில்லை. ஆனால், ஆதிசங்கரர் வகுத்த ஷண்மதத்தில் எவரது பண்டிகை இது? அல்லது ஆதிசங்கரரையும்…
இந்து எனப் பூரிக்கும் தமிழன், வேதம் அவன் வீட்டுப் பெண்களைப் பிராமணனின் கீப் என்கிறதே – இதை ஏற்பானா?
போய் முதலில் வேத ஸ்லோகங்களைப் படித்து, முக்தி பெறும் முன்பு தன்மானப் புத்தி பெறுங்கள் அய்யா!
“பூமியைப் பாயாய்ச் சுருட்டி கடலுக்குள் ஒளித்தான்” — சரி, பூமியே சுருட்டப்பட்ட பிறகு கடல் எங்கிருந்து வந்ததாம்? அதிநவீன காலத்திலுமா அறிவழிந்து கிடக்கிறார்கள் ஆரிய பாதம் வருடிகள்? பார்ப்பனியன் அடிமையாக எத்தனை கதைகள்தான் சொல்வீர்கள் ஒற்றைப் பண்டிகைக்கு!
கட்டுரையாளர் முருகனாக வந்தாலும் சரி கிருட்டிணனாக வந்தாலும் சரி சொல்ல வரும் கருத்தை நாகரிகமாகச் சொல்ல வேண்டும் என்பதற்காகவே எமது கருத்தைப் பதிந்தேன்.
நாம் சொல்லும் கருத்து பிறர் ஏற்க வேண்டுமானால் அவர்தம் வழியில் சென்று அறிவிக்க வேண்டும்.
தீபாவளிக்குப் பொருள் புரியாது கொண்டாடுபவர்களே இந் நாட்டுத் தமிழர்களில் அதிகம்.
இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை என்பது அவரவர் வசதிக்காக வெவ்வேறு கதைகளைப் புனைந்து கொண்டு கொண்டாடுகின்றனர்.
இந்துக்கள் என்பார் மட்டும் தீபாவளியைக் கொண்டாடவில்லை. சீக்கியர்களும், சமணர்களும், பௌத்தர்களும் தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். இதற்கு இவர்களும் வெவ்வேறு கதைகளை ஏற்படுத்திக் கொண்டனர்.
சமணர் மாவீரர் நிர்வாணம் அடைந்த நாள் என்றும், பௌத்தர் எள் நெய் கண்டுப் பிடித்த நாளில் அரசன் மக்களை நல்லெண்ணையைக் கொண்டு தீபங்களை வரிசையாக ஏற்றி கொண்டாடிய நாள் என்றும், சீக்கியர் அவர்தம் தங்க கோயில் கட்டிய நாள் என்றும் கதை கூறிக் கொண்டு இந் நாளை விழாவாகக் கொண்டாடுகின்றனர்.
வடபுல சைவர் குமரன் நரகாசுரனை வதம் செய்த நாள் என்றொரு புராணக் கதையை ஏற்படுத்தி விழாவாகக் கொண்டாட, வடபுல வைணவர் அவர்தமக்கு ஒரு புராணக் கதையை ஏற்படுத்திக் கொண்டு அந் நாளை விழாவாகக் கொண்டாடுவாராயினர்.
இதைத்தான் பூனை புலியைப் பார்த்துச் சூடு போட்டுக் கொண்டது என்று கூறினோம்.
ஒவ்வொரு மதத்தவரும் இந்நாளை விழாவாகக் கொண்டாடி அவர்தம் மக்கள் மகிழ்ந்து வாழ வழி வகை செய்யப்பட்டதே அதற்காக கூறப்படும் கதைகள்.
இதில் புதிதாக முத்தி ‘மத்தி’ என்ற கதையெல்லாம் சேர்த்து சொல்வது அவர்தம் கதைகளுக்கு மெருகூட்டுவதேயன்றி வேறொன்றுமில்லை.
இந்த கிருட்டிணன் கதை வடமொழி சிவ மகாபுராணத்தில் வேறு விதமாகக் கூறுவதின் காரணமென்ன?
அடிமுடி தேடிச் சென்ற கதையில் கிருட்டிணன் பூமாதேவியைப் புனைந்து பெற்றவனே நரகாசுரன் என்பதாகும். அவனை குமரன் அழித்த நாள் தர்மம் அதர்மத்தை வென்ற நாளாகக் கொண்டாடுவது வடபுல சைவர் மரபு.
ஆனால் வடபுல வைணவ வடமொழி பாகவத புராணத்தில் வேற்றொரு கதையைச் சொல்லி கிருட்டிணன் 16,000 பெண்களைப் புனைந்து தன்னுள் ஐக்கியமாக்கிக் கொண்டு மோட்சம் அளித்தார் என்பது அவர்தம் வழிபடு தெய்வத்தை உயர்த்திச் சொல்ல வடமொழி சைவ புராணத்திற்கு பிற்பாடு எழுந்த புராணக் கதையாகும்.
இப்படி ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டுக் கொண்டு 2,500 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப் பட்டவைதாம் இப்புராணக் கூற்றுகள் எல்லாம்.
இவை வடபுல மக்களிடையே அக்காலத்தில் இருந்த மத காழ்புணர்ச்சியால் எழுந்த கதைகளாகும்.
உண்மையை இவ்வாறு பகுத்தறிந்து கொண்டா இந்நாட்டுத் தமிழர் ‘தீபாவலி’யைக் கொண்டாடுகின்றனர்?
தீபாவளி என்றால் மது அருந்தி நரமாமிசம் சாப்பிட்டு நாசகார நரகாசுரனுக்கு நிகரான செயலைச் செய்வதென்றால் அவ்விழாவால் நாம் பெறும் “இன்பம்” அறிவீனமானது அல்லவா? இத்தகைய விழா நமக்குத் தேவையா?
மற்றொரு புறமோ தமிழர் பணத்தை நீராக வாரி இறைக்க உதவுகின்றது இவ்விழா. எல்லாம் ஒரு நாள் கூத்துக்காக!
இந்த தமிழரில் எத்தனைப் பேர் நாம் மகிழ்வாக இருக்க இன்னும் பல ஏழைத் தமிழர் இன்னலில் சிக்குண்டு துன்பத்தில் ஆழ்திருக்கின்றார் என்பதை அறிந்துள்ளனர்? இவ்விழாவையொட்டி நாம் ஊதாரித்தனமாகச் செய்யும் செலவில் ஒரு சிறிய பங்கேனும் வறியவருக்குக் கொடுத்து உதவி செய்ய எண்ணம் கொண்டுள்ளனரா என்றால் இல்லை என்பதே பெரும்பாலோரின் பதிலாக இருக்கும்.
அப்புறம் இத்தகைய பொருளற்ற விழாவால் தமிழர் பெறும் பட்டிப்பினை யாது? அல்லது பிறருக்குப் புகட்ட விரும்பும் படிப்பினை யாது? அறிவுக்கு உதவாத தீபாவளிக்காகவா நம்மிடையே இவ்வளவு பெரிய ஆர்பாட்டம்?
அறிவார்ந்த தமிழர் திருந்த வேண்டிய கால கட்டமாகும் 21ஆம் நூற்றாண்டு. இன்னமும் திருந்த மாட்டோம் என்றால் அழிவுக்கு நம்மை தயார்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்பதே பொருளாகும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா”.
தீபாவளி இந்துக்கள் பண்டிகை ஆகவே இருக்கட்டும்– விரும்புவார்கள் அதை கொண்டாடட்டும் -விரும்பாதவர்கள் கொண்டாடவேண்டாம்- பொங்கல் தமிழர்களின் திருநாள்- எந்த பண்டிகையும் யாரும் கொண்டாடலாம்– ஆனாலும் அது எவ்வளவுக்கு அறிவு பூர்வமானது என்று இருந்தால் நான்றாக இருக்கும்– அத்துடன் எந்த ஒரு பண்டிகையும் உயர்வு தாழ்வு மத ஜாதி வேறு பாட்டுடனும் கொண்டாடப்படுவது இந்த 21 வது நூற்றாண்டில் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. குறைகள் இருந்தாலும் பண்டிகைகள் ஒற்றுமையுடன் மற்றவர்களை மட்டம் தட்டாமல் கொண்டாடவேண்டும். ஆரியர்கள் நம்மை மட்டம் தட்டி இழித்து கூறி இருந்தாலும் அதை எல்லாம் தூக்கி எரிந்து விடுவதே நல்லது காரணம் பிரித்து ஆண்டு சுகம் கண்ட மடையர்களை கண்டுக்காமல் இருப்பதே நல்லது. சொல்வது சுலபம் என்றும் எனக்கு தெரியும். என்னுடைய நிலைப்பாடு- பகுத்தறிவுக்கு ஓவ்வாததை ஏற்றுக்கொள்வதில்லை.அதிலும் தமிழுக்கும் உடன் பிறப்புகளுக்கும் உண்மையாகவே இருப்பேன்– நல்ல உடன் பிறப்புகளுக்கு. துரோகிகளுக்கும் காட்டிக்கொடுக்கும் ஈனங்களுக்கும் ஜாதி உயர்வு தாழ்வு பார்க்கும் ஈனங்களுக்கும் சாக்கடை மரியாதைதான். எதையும் பெரிய மனதோடு பகுத்தறிவோடு சம நிலையில் எதையும் பார்க்க வேண்டும். முருகன் அவர்களே நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை- என்னைப்பொறுத்தமட்டில் தீபாவளி நல்லது தீயதை வென்றதற்கு கொண்டாடலாம். ஆனாலும் மடத்தனமான காரணங்களை கண்டுக்கொள்ளவேண்டாம். இது என்னுடைய தாழ்மையான கருத்து.
இந்த தீபாவளி திருநாளை ஒரு விவாதமாக வைத்து கொண்டு நாம் ஒரு சில முரண்பாடான கருத்துகள் சொல்வது நல்லது அல்ல. முதலில் இதற்கு இந்து சங்கம் ஒரு சரியான விளக்கம் கொடுக்கலாம். இங்கு கூட பாருங்கள் இந்த இந்து சங்கத்திற்கு (இந்து) என்றுதான் உள்ளது. தமிழர் சங்கம் என்று ஒன்று இல்லை. அரசாங்கம் மானியம் கொடுக்கும் போது அந்த இந்து சங்கத்திற்கு (இந்து) கொடுக்கபடுகிறது. மலேசியாவில் அரசியல் சட்டம் 1957 வகுக்கும் சமயத்தில் எந்த திருவிழாவிற்கு விடுமுறை கொடுக்கலாம் என்ற ஒரு சில கேள்விகள் எழுந்து இருக்கலாம். அப்போது இங்கு தமிழர்கள், தெலுங்கர்கள், மலையாளிகள், சிங்களவர்கள் இன்னும் சில இந்து மதத்தினருக்கு ஒரே விடுமுறை என்று வகுத்து அதுதான் தீபாவளி என்று நினைத்து இருக்கலாம். இன்று நமக்கு தமிழர்களுக்கு உடன்பாடு இல்லை இந்த தீபாவளி திருநாளை கொண்டாட. அனால் அன்றைய தமிழர்கள் 1957 விடுதலை சமயத்தில் கேள்விகள் எழுப்பினர்கள என்று தெரியவில்லை. அப்படி இருக்கையில் நாம் என்ன செய்வது. நாம் பொங்கல் திருநாளை தமிழர்கள் தேசிய திருநாளாக கொண்டாட அரசாங்க அனுமதி கேட்கலாம். பொங்கலுக்கு தேசிய பொது விடுமுறை கேட்கலாம் யார் கேட்பது. தீபாவளி என்பது பொதுவான ஒரு இந்து திருவிழா முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நன்றி
யோவ் என்னையா நியாயம் இது ? தீபாவளி தமிழர்கள் பண்டிகை அல்ல என்று தலைப்பு இருக்கிறது, அதை வெட்டி நான் அதில் இருக்கும் தருமத்தை போதிக்கிறேன், உடனே ஒருவர் போய் அதை படி அல்லது இதை படி என்கிறார் ! இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் , இவர்கள் குறிப்பிடும் ஒரு வரியை படிக்க வேண்டும் என்றால் , எதற்குமே வழக்காட முடியாது. மேலும் அடுத்தவனின் மனைவியின் குறைகளை நீ சொல்லாதே , காரணம் உன் மனைவியின் குறைகளை பிறகு அவன் சொல்வான் என்று , கவியரசர் கண்ணதாசன் சொல்கிறார். எனவே , நானும் தமிழர்களின் மறைநூல் என்று போற்றப்படும் திருக்குறளை , இருக்கும் கோளாறுகளை விவரிக்கவா ? மேலும் தமிழ் கிறிஸ்துவர்கள் , தமிழ் முஸ்லிம்கள் , தமிழ் இயற்கைவாதிகள் , தமிழ்நாத்திகவாதிகள் , தமிழ் வாயாலே வடை சுடும் சங்கத்தவர்கள் கொண்டதுதான் தமிழ் இனம் ! இதில் பாகு பாடு காட்டிட இயலாது ! எனவே அடுத்தவனை கெட்டவன் என்று கூறுவதாலேயே ஒருவன் நல்லவன் ஆகிவிட முடியாது . முருகன் இது உங்களுக்கு !
#இங்கு கூட பாருங்கள் இந்த இந்து சங்கத்திற்கு (இந்து) என்றுதான் உள்ளது. தமிழர் சங்கம் என்று ஒன்று இல்லை.#
“இந்து” என்பதற்கான விளக்கம் மலேசிய சைவ சமயப் பேரவை நாளேடான ‘சிவனருள்’ இதழில் சில மாதங்களுக்கு
முன் யாகியிருந்தது. அதைப் படித்துப் பார்த்தவருக்குத் தெரியும் “இந்து” என்ற பெயரில் ஒரு மதமில்லை மாறாக வைதிக மதத்தை முன் நிறுத்தி ஆங்கிலேயன் நமக்கு இட்ட பெயர் “இந்து” என்பதாகும்.
இந்த உண்மையைக் கூட தமிழர் அறியாமல் வாழ்வதால்தான் இதுவரை “இந்து” என்ற பெயரில் தமிழர் மீது வைதிகப் பண்பாடுகளை ஏத்தி சுகம் கண்டு வந்தனர் பிராமணியத்தைப் போற்றுவோர்.
இன்று தமிழர் தம்மை தமிழர் என்று சொல்லிக் கொள்ள “இந்து” என்ற அடைமொழி தேவைப்படவில்லை. எப்படி “திராவிடர்” என்ற அடைமொழி ஒழிந்ததோ அதுபோல “இந்து” என்ற அடைமொழி தமிழரிடையே அழிந்தால்தான் தமிழர் இந்த நூற்றாண்டில் உருப்படுவோம்.
தமிழர் அல்லாதவர் தமிழருக்கு அறிவுரை கூற புக வேண்டாம்.
மலாயா சுதந்திரம் பெற்ற காலத்தில் அரசாங்கத்தில் உயர் அதிகாரிகளாகப் பணியாற்றிவர் குஜாராத்தி மற்றும் சீக்கிய இந்தியரே. அவர் கொடுத்த வாக்குமூலத்தால்தான் ‘தீபாவளி’ பொது விடுமுறையாக அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அன்று தோட்டப்புறங்களில் வாழ்ந்த தமிழர் அவர்தம் பண்பாட்டையொட்டிய பொங்கலை விடுமுறை நாளாகப் பெற முடியாது போயிற்று.
இன்றோ தமிழரின் அரசியல் ஒற்றுமையின்மைக் காரணமாக எதையும் சாதிக்க இயலாமல் தடுமாறுகின்றோம். இது இன்றைய தமிழரின் பரிதாப நிலையாகும்.
தேனியின் விளக்கம் அருமை பாராட்டுகள்.
தேனீயின் விளக்கம் அருமை. பாராட்டுகள்.
Dilip 2 -இன் பாமரத்தனம் பரிதாபக்குரியது. நால்வேதம் ஒருவரியா? அய்யகோ! செம்மையாய் (சைவநெறி) வாழ்ந்த தென்னவரை அழிக்க / தமக்கடிமை ஆக்கிட ஆரியர் அறங்கேறறிய பற்பல சூழ்ச்சிகளில் ஒன்றே தீபாவளி. அண்மைய சூழ்ச்சி சித்திரை 1 தமிழ்ப் புத்தாண்டு ஆனது. THR வியாபாரம் ஆக்கியது. மின்னல் FM தன்மானம் காத்தது.
நான் நால்வேதமும் இரு இதிகாசங்களும் கற்ற பின்பே வெளியேறி தமிழர் திருமணம் செய்தேன்.
தமிழ்ச்சங்கம் இல்லை, தமிழர் சங்கம் இல்லை, மானியம் இல்லையென்பதெல்லாம் இருண்மை.
தமது பாரம்பரிய மேன்மை அறியாத் தமிழர் தம்மை ஹிந்து என்று சொல்லி தீபாவளி கொண்டாடட்டும். ஆனால், அதைத் தமிழர் பண்டிகை என விதண்டாவாதம் செய்தல் இனத்துரோகம். வரலாறு கண்டிக்கும்.
சுய தரிசனம் கூட இல்லாத ஓர் இனம் – பல கலப்புக்களைத் தன்னகத்தே கொண்டு இன்று ஓர் ஒன்று பட்ட இனமாக காட்சி தரும் ஓர் இனம் – ஒரு மொழிக்குரிய அடையாளம் எதுவுமே இல்லாமல் உலக மொழிகள் பல வற்றிலிருந்தும் சொற்களை களவாடியும் இரவல் பெற்றும் தன் மொழியே உலக மொழிகளில் சிறந்தது, மூத்தது என்று சொல்லிக்கொள்ளும் ஓர் இனம் இன்று உலக அரங்கில் தனியிடம் பெற முயலுகிறது என்றால் அதற்கு அங்கே நிலவும் ஒற்றுமையே காரணம்.
ஆனால் பழம்பெருமைகள் பல உள்ள பண்டைத் தமிழ் இனம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் நம் இனத்தையும் மொழியையும் அழிக்க முயல்வோரைக் கண்டும் ஏதும் செய்ய இயலாமல் இருப்பதற்கு காரணம் நம்மிடையே ஒற்றுமை இல்லாதது.
இப்போது தீபாவளையை ஒரு பிரச்சினையாக முன் வைத்து ‘கருத்தரங்கம்’ நடத்திக் கொண்டிருக்கிறோம். இதற்கு பல சான்றுகளை அள்ளித் தெளிக்கிறோம். அப்படி அந்த ‘சான்றோர்’ சொன்ன சான்று எப்படியோ தெரியாது. ஆனால் எனக்கு ஒரே ஒரு கேள்வி மட்டும் தான். ஒரு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து மட்டுமே ஏதோ ஒரு காரணத்துக்காக தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவதாக வைத்துக்கொள்வோம். அது தவறா? அட காரணமே இல்லாமல் கொண்டாடுவதாகவே இருக்கட்டுமே. அது தவறா? அப்படி ஒரு திருநாளை தமழர்கள் கொண்டாடுவதால் யாருக்கு என்ன நஷ்டம்? இதுவரை அதை ஒரு பண்டிகையாகக் கொண்டாடியவர்கள் எல்லாம் முட்டாள்களா? அப்படி அவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு ‘முற்றி’ விட்டதா?
இறுதியாக… தீபாவளி என்றால் என்ன பொருள் (அர்த்தம்) என்று கண்டறியுங்கள் அறிவில் சிறந்தோரே…அப்படி அதற்கான அர்த்தம் கண்டறிந்த பின்னரும் தீபாவளியை நாம் (தமிழர்கள்) கொண்டாடுவது தவறுதான் என்று அறிவுடையோரின் இறுதியும் அறுதியுமான கருத்து இருக்குமானால் முதலில் உங்கள் வீட்டில் தீபாவளியை தடை செய்யுங்கள் பார்ப்போம்…
கோயிலுக்கு போவது கூடாத செயல், அறிவுடைய செயல் அல்ல என்று ஊருக்கு உபதேசம் செய்தி விட்டு தமது மனைவி மக்களை கோயிலுக்கு போகாமல் தடுக்க துணிவில்லாதவர்களின் உபதேசம் போல இந்த ‘கருத்தரங்கம்’ ஆகிவிடக்கூடாதல்லவா…!
Dilip 2 அவர்களே, திருக்குறள் கோளாறுகளை விவரிக்கும் அளவுக்கு யாப்பிலக்கணம், சங்கத்தமிழ் ஆற்றல் கொண்ட உங்களை எண்ணி வியக்கிறேன். நமது தர்க்கம் தீபாவளி பற்றி. இதில் திருக்குறள், முகம்மதியம், கிருஸ்த்தவம் இன்னபிறவற்றை ஏன் பிராண்டுகிறீர்?
அதிருக்கட்டும். திருக்குறள் தர்க்கத்திற்கு யாருடைய பொழிப்புரையைக் கைக் கொள்கிறீர்? அடுத்துக் கெடுக்கும் ஆரியனையா, தனித்தமிழறிஞரையா?
ஹிந்து சங்கம் ஹிந்து மதத்தவர்க்கு. தமிழர்ச் சங்கம் தமிழ் இனத்தவர்க்கு.?
தேனீ அவர்களே, நான் தமிழன் ! பாரதி கண்ட புதுமை தமிழன் ! இந்து என்ற ஒரு வார்த்தை இல்லை என்று தங்கள் வாதிட்டால், இருந்து விட்டு போகட்டுமே, அதனால் என்ன வந்து விட்டது இப்போது ? தமிழ் தமிழ் தமிழ் என்று அடித்து கொள்கிறீர்கள், தமிழ் ஒன்றும் சுயமாக தோன்றிய மொழியில்லை ! அதன் பிறப்பிலும் சந்தேகம் உள்ளது ! தமிழனின் தந்தை கிராந்தம் என்று நான் வாதிடுவேன் ! சமஸ்கிருதமும் தமிழும் அண்ணன் தம்பி என்பேன். இருவருக்கும் கிராந்தம் தந்தை ஆனால் தாய் வேறு வேறு என்பேன் ! இப்படி பல விஷயங்களை என்னாலும் கூறிட முடியும் ! வெறும் 7 % இருக்கும் இந்தியர்கள் மத்தியில் இந்த பிளவுகள் வேண்டாம்! நீங்கள் பிளவுகள் ஏற்படுத்த நினைத்தால் , நான் ஒட்டு மொத்த இனத்திற்கும் சங்கு உதிவிடுவேன் ! அதிக மாக மலாய் சமூகம் இருக்கும் ஒரு நாட்டில் எதற்கு இந்தியர்கள் என்பேன் ! எங்கிருந்து வந்தார்களோ , அங்கே திரும்பி போகட்டும் என்பேன் ! ஈழத்தமிழர்கள் 53 லட்சம் கடந்த 60 ஆண்டுகள் பரிதவித்துபோல் , ரோஹிங்கிய இந்துக்கள் 22 லட்சம் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பியது போல் , மலேஷியா 30 லட்சம் இந்துக்களும் ஒற்றுமையாக இல்லாவிடில் திருப்பி அனுப்ப வேண்டும் என்பேன் ! தமிழை போற்ற எவ்வளவோ நல்ல வழிகள் உண்டு ! ஒரு உதாரணத்திற்கு : தமிழில் அன்றாதி என்று ஒன்று உண்டு. இது ஒரே வரிசையில் வரும் எழுத்துக்களை வைத்து கூறுவது. கககா கிகி குகு கககே …இப்படி தமிழின் பெருமையை சொல்லாமல் , இந்து என்ற வைதீக மதத்தில் அதில் இல்லை , இது இல்லை என்று புலம்புவதே ஒரு வேலை ! நிறுத்தமையை உமது ஒப்பாரியை !
50 களிலும் 60 களிலும் தமிழர் திருநாள் விமரிசையாக கொண்டாடப்பட்டது பெரும்பாலான தோட்டங்களில் -தோட்டங்கள் துண்டாடப்பட்ட நிலையில் நம்மவர்கள் சிதறிவிட்டனர். தமிழர் திருநாளும் மறைந்து விட்டது– தமிழ் முரசு -கோ சாரங்கபாணி -முன்னின்று இதற்கு செயல் பட்டார். நான் பலகாலமாக தீபாவளியை கொண்டாடுவது கிடையாது. இங்கு பொங்கல் அவ்வளவாக கொண்டாடப்படுவதில்லை. முன்புபோல் தமிழர்கள் அதிகமாக ஓரிடத்தில் இருந்தால் கொண்டாடுவது சுலபமாக இருக்கும்– ஆனாலும் தீபாவளி கொண்டாடப்படுவது போல் பொங்கலும் கொண்டாடப்படுவதில்லை அவ்வளவு சிரமம் இருப்பதாக தெரிய வில்லை– சிங்கப்பூரில் பொங்கல் கொண்டாடப்படுகிறது .
இங்கு நாம் ஒன்றை நினைவு கூற வேண்டும்– சம்பந்தன் பிராமணச்சியை மனைவியாக கொண்டிருந்த காரணத்தினால் MIC வழி தீபாவளியே முதன்மை ஆக்கப்பட்டு அதற்க்கு விடுமுறை கொடுக்கப்பட்டு இருந்தது. தமிழர் திருநாள்/பொங்கல் நாத்திகர்கள் கொண்டாடுவர் என்ற ஒரு மடத்தனமும் இருந்தது அப்போது– அதை யார் முன்னின்று நடத்தினர் என்று நான் கூற தேவை இல்லை.
#ஒரு சில நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்து மட்டுமே ஏதோ ஒரு காரணத்துக்காக தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவதாக வைத்துக்கொள்வோம். அது தவறா? அட காரணமே இல்லாமல் கொண்டாடுவதாகவே இருக்கட்டுமே. அது தவறா? அப்படி ஒரு திருநாளை தமழர்கள் கொண்டாடுவதால் யாருக்கு என்ன நஷ்டம்? இதுவரை அதை ஒரு பண்டிகையாகக் கொண்டாடியவர்கள் எல்லாம் முட்டாள்களா? அப்படி அவர்கள் எல்லோரும் முட்டாள்கள் என்று சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு ‘முற்றி’ விட்டதா?#
பதில்:
ஒர் ஆராய்ச்சியாளர் ஒரு நாயின் தன்மையை ஆராய வேண்டி அதற்கு தினமும் மாலை ஏழு மணிக்கு மணியடித்து உணவிட்டார். இப்படியே ஒரு மாதத்திற்கு மேல்
அச்செயலை தொடர்ந்து செய்து மாலை மணி ஏழுக்கு மணியடித்ததும் தமக்கு உணவு கிடைக்கும் என்ற பழக்க வழக்க குற்றத்தின் காரணமாக முன் வந்து நிற்கும் அந்நாய்.
மற்றொரு நாள் அவ்வாராய்ச்சியாளர் அந்த நாயை சோதிக்க வேண்டி மாலை ஐந்து மணிக்கு மணிடியத்தார். என்ன ஆச்சரியம்! அந்த நாய் மணியோசை கேட்டவுடன் முன் வந்து நின்றது.
இதிலிருந்து அந்த ஆராய்ச்சியாளர் கண்ட முடிவு பின்வருமாறு:
1) மணியடித்தால் உணவு கிடைக்கும் என்று அந்த நாய் அறிந்து வைத்திருந்தது;
2) இது ஒரு பழக்க வழக்கத்தின் காரணமாக ஏற்பட்டதே அன்றி அந்த நாய் பகுத்தறிந்து செயல்படவில்லை என்பதை உணர்த்தியது.
அதுபோல்தான் நம் மூதாதையரும் நாமும் (இன்றுவரை) தீபாவளி பண்டிகை என்பதை ஒரு பழக்க வழக்கத்தின் அடிப்படையில்தான் செய்து வருகின்றோமே ஒழிய அதன்
காரணத்தை அறிந்தோ அல்லது நன்மை தீமை அறிந்தோ அல்லது அதன் அவசியத்தைப் பகுத்தறிந்தோ செய்து கொண்டு வரவில்லை. .
எவ்வொரு பழக்க வழக்கம் நம்மை அறியாமைக்கு இட்டுச் செல்லுகின்றதோ அல்லது அச்செயலால் நமக்குப் பயன் ஏதுமில்லை என்றாலோ அல்லது அச்செயலால் தமிழர் அயலாரின் கருத்துச் சிந்தனைக்கு உட்படுத்தப் படுகின்றோம் என்று அறிந்தாலோ நாம் நமது பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளலாம். அது தவறாகாது.
ஆனால் ஒரு செயலால் தமிழர் அவர்தம் சுய சிந்தனையிலிருந்து மடைமாற்றம் செய்யப் படுகின்றார் என்று அறிந்தும் அப்பழக்க வழக்கத்தை நாம் மாற்றிக் கொள்ளாமல் இருந்தோமானால் தாங்கள் கூறியது நிச்சயமாக நடைபெறும். அவ்வாறு நம் மூதாதையர் பகுத்தறிந்து வாழாமல் போனதால்தான் தமிழர் இனம் தங்கள் வாயால் சொன்ன இழிச்சொல்லுக்கு இன்று ஆளாகியுள்ளது:
#சுய தரிசனம் கூட இல்லாத ஓர் இனம் – பல கலப்புக்களைத் தன்னகத்தே கொண்டு இன்று ஓர் ஒன்று பட்ட இனமாக காட்சி தரும் ஓர் இனம் – ஒரு மொழிக்குரிய அடையாளம் எதுவுமே இல்லாமல் உலக மொழிகள் பல வற்றிலிருந்தும் சொற்களை களவாடியும் இரவல் பெற்றும் தன் மொழியே உலக மொழிகளில் சிறந்தது, மூத்தது என்று சொல்லிக்கொள்ளும் ஓர் இனம்#
தன்மானமில்லாத ஒரு தமிழனின் வாயிலிருந்து இத்தகைய கடுஞ்சொற்கள் வந்திருக்குமானால் அவன் எத்தகு அளவிற்கு அயலாரின் சிந்தனையில் மூழ்கி நனைந்திருக்க வேண்டும்?
இதுதான் சுயமரியாதை வேண்டும் மானத் தமிழனுக்கும் அந்த மானத்தை அயலாருக்கு விற்று விட்டு அடிமைத்தன வாழ்க்கை வாழும் தமிழனுக்கும் உள்ள வேறுபாடு.
பதில் எழுதி மேலும் எம்மைச் சீண்டிப் பார்க்க வேண்டாம்.
#தமிழ் ஒன்றும் சுயமாக தோன்றிய மொழியில்லை ! அதன் பிறப்பிலும் சந்தேகம் உள்ளது ! தமிழனின் தந்தை கிராந்தம் என்று நான் வாதிடுவேன்#
தமிழின் தந்தை கிரந்தம் என்று சொன்னதிலிருந்து தங்களின் தமிழ் மொழி அறிவு எந்த அளவுக்கு ஆழமாக உள்ளது என்பது தெளிவாகின்றது.
வடக்கே இருந்து தெற்கே வந்த சமணர் பௌத்தர் பிராகிருத மொழியைப் பயன்படுத்தினார். அம்மொழி தமிழருக்கு அயல் மொழி என்பதால் அதனை விடுத்து பல்லவர் ஆட்சியில் பயன்படுத்தப் பட்டத் தமிழ் கிரந்த எழுத்துக்களைக் கொண்டு சமசுகிரத மொழியைப் பயன்படுத்தினார். அதுபோலவே கி.பி. மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி பல்லவர், சாளுக்கியர், விஜயநகர் மன்னர் ஆட்சி என்று தொடர்ந்த காலத்தில் தமிழ் கிரந்தம் உருமாற்றம் பெற்று ‘தமிழி’ என்ற வடிவம் பெற்று இன்றைய தமிழ் எழுத்துக்கள் உள்ள நிலையில் உள்ளன.
இத் தமிழ்கிரந்த (தமிழி) எழுத்துக்கள் சோழ நாட்டில் கி.பி. 10ஆம் நூற்றாண்டு ஆட்சியில் பயன்பாட்டிற்கு வந்தது. பாண்டிய நாட்டில் ஏறக்குறைய கி.பி. 12ஆம் நூற்றாண்டு முதல் பயன்பாட்டிற்கு வந்தது.
அதற்கு முன் பாண்டிய நாட்டில் தமிழ் வட்டெழுத்துக்களே பயன்பாட்டில் இருந்து வந்திருக்கின்றன.
சும்மா எல்லாம் தெரிந்த மாதிரி ஏதாவது ஒரு இணையக் குப்பையைப் படித்து விட்டு அதுவே ஆதாரமென்று பதிய வேண்டாம்.
மானங்கெட்ட தமிழன் அயலாரின் சிந்தனையில் முழுமையாக மூழ்கி தமிழின் சுய தன்மையைக் கேள்வி எழுப்பினால் தன் தாயின் கற்பின் மீது சந்தேகம் ஏற்படுத்துவது போலாகும்.
நல்ல வேளை இக்கருத்து தமிழ் நாட்டுத் தமிழறிஞர் பங்குகொள்ளும் இணையத்தளங்களில் பதிவு செய்யாமல் போனது. அப்படி ஒன்று அவர் முன்னிலையில் நடந்திருந்தால் இந்நேரம் குளவிக் கூண்டில் கை விட்ட மாதிரி இருந்திருக்கும்.
தயவு செய்து ஆராய்ச்சியும் ஆதாரமுமில்லாத இத்தகைய கருத்துக்களைப் பதிவிட்டு தமிழையும் தமிழரையும் கொச்சைப் படுத்த வேண்டாம்.
இன்னும் தான் “தமிழன்” என்ற வீர வசனம் வேறு!
சமஸ்கிருதமும் தமிழும் அண்ணன் தம்பி என்பேன். இருவருக்கும் கிராந்தம் தந்தை ஆனால் தாய் வேறு வேறு என்பேன் !
ஒருவனுக்குப் பிறந்ததால் தமிழ் இந்திய கண்டத்திற்கு தாய் மொழியாகும்.
En thaai thamizh அவர்களிடமிருந்து புதியதோர் ஆதாரம். நன்றி.
உலகச் செம்மொழியாம் தமிழ்மொழி எல்லா மொழிகளுக்கும் தாய் என மேனாட்டாராலேயே ஒப்புக் கொள்ளப்பட்ட பிறகு Dilip 2 என்னவெல்லாமோ உளறுகிறாரே ரத்தக் கொதிப்பு வந்தவர் போல. மேடை நாடக சர்வாதிகாரி போல பிதற்றுகிறாரே. உண்மையில் யார் இவர்? இவருக்கு என்னவாயிற்று? ஏன் இப்படி ஆகிவிட்டார்?
மலைநாடு எனப் பொன்விளையும் பூமிக்குப் பெயரிட்ட தமிழன் ராஜேந்திரசோழன் தொடங்கி இங்கே கோட்டை விட்டவற்றைப் பட்டியலிட்டால், இவர் என்னத்துக்கு ஆவாரோ!
தீபாவளி ஒன்றுக்கே இப்படி ஏதேதோ மீதெல்லாம் விழுந்து கடிப்பவர்…அப்புறம்…!?
——தன்மானமில்லாத ஒரு தமிழனின் வாயிலிருந்து இத்தகைய கடுஞ்சொற்கள் வந்திருக்குமானால் அவன் எத்தகு அளவிற்கு அயலாரின் சிந்தனையில் மூழ்கி நனைந்திருக்க வேண்டும்?
இதுதான் சுயமரியாதை வேண்டும் மானத் தமிழனுக்கும் அந்த மானத்தை அயலாருக்கு விற்று விட்டு அடிமைத்தன வாழ்க்கை வாழும் தமிழனுக்கும் உள்ள வேறுபாடு.
பதில் எழுதி மேலும் எம்மைச் சீண்டிப் பார்க்க வேண்டாம் —-
இந்த நூற்றாண்டின் ஒரே சிறந்த தமிழன்..அனைத்தும் அறிந்த தமிழன்…நீராகவே இருக்கட்டும். ஆனால் அடுத்தவனை தன்மானமில்லாதவன் என்று நீர் சொல்ல நினத்த போதே நீர் தன்மானத்தைப் பற்றிப் பேசவும்…உன் மானத்தைப் பற்றிப் பேசவும் எந்த அருகதையும் இல்லாத ஜென்மம் என்பதை நீரே புரிந்து கொண்டிருக்க வேண்டும். புரிந்துகொள்ளவில்லை. நாங்கள் புரிந்து கொண்டோம்.
மனிதர்கள் இங்கே விவாதித்துக் கொண்டிருக்கும் போது வளர்ப்புப் பிராணியைப் பற்றியும் அதன் பகுத்தறிவு பற்றியும் காட்டியது நல்ல உதாரணம் என்று மார் தட்டிகொள்ள வேண்டாம். மணி அடிப்பதை மட்டும் மேற்கோள் காட்ட வேண்டாம். நீர் தமிழில் சொல்வதை உமது வீட்டு அந்த வளர்ப்புப் பிராணி அப்படியே விளங்கிக் கொள்வதைப் பார்த்திருக்கிறீரா? வீட்டு உறுப்பினர்களை இவர் அப்பா, இவர் அம்மா, அவன் அண்ணன், இவன் தம்பி என்று உறவுமுறையை சொல்லிக் கொடுத்த பின் அந்த உறவுமுறையை அப்படியே அது பின்பற்றுமே அதைப் பார்த்திருக்கீறீரா? உணவை தட்டில் வைத்து விட்டு ‘நான் சொல்லும் வரை சாப்பிடாதே.’ என்று வாயால் இட்ட உத்தரவை அது கடைபிடிப்பதைப் பார்த்திருக்கிறீரா? நீர் உன் பாஷையில் சொல்வது அதற்குப் புரிகிறது. ஆனால் அது தன்னுடைய பாஷையில் சொல்லும் ஒரு வார்த்தையாவது உமக்குப் புரியுமா? இப்போது சொல்லும் அதற்குப் பகுத்தறிவு இல்லையா அல்லது உமக்கா?
மனிதர்கள் விவாதிக்கும் போது வளர்ப்புப் பிராணியை உதாரணம் காட்டும் உம்மிடம் இனி என்னைப் போன்ற மனிதர்கள் எவரும் விவாதிப்பதில் அர்த்தம் இல்லை. நல்ல மிருகக்காட்சி சாலையில் கொண்டு போய் சேர்க்கலாம்.
தேனீ , அதென்ன ஒரு நாயை நம் இனத்தவர்களுடன் ஒப்பிடுவது ? ஒருத்தர் 7 மணிக்கு மணியடித்து பழகியதால் , நாய் அப்படி இருக்கும் ஆனால் மனிதர்கள் அப்படி யல்ல ! கண்ணதாசன் அழகாய் பாடுவார் : சிந்தனை தோன்றி அறிவு வளர்ந்தது இன்றல்ல நேற்றல்ல , தன்னை திருத்தி கொல்லாமல் எதோ வாழ்ந்தவர்கள் ஒன்றல்ல இரண்டல்ல ….அறியாமையை கௌரவமாக விறக்குவார் ! தேனீ அவர்களே , முதலில் ஒன்றை புரிந்து கொள்வோம் . இந்த உலகத்தில் எந்த ஒரு மனிதனும் ஒரு மொழிக்கோ , அல்லது இனத்திற்கோ அடிமையானவன் அல்ல ! ஒவொருவனும் சுதந்திர புருஷன் ! அப்படி இருக்க தமிழன் என்பவன் இதைத்தான் செய்ய வேண்டும் , இதை செய்ய கூடாது என்று சொல்ல நீ யாருமய்யா ? தமிழன் தீபாவளி கொண்டாடடும் , சீன பெருநாள் கொண்டாடடும் , இதனால் உன் வீடு சாம்பாரில் என்னையா பிரச்சனை ? இதில் அடுத்த வீட்டு பெண்களை பன்றி வேறு பேச்சு உனக்கு ! கிறிஸ்துவ தமிழனும் தமிழனே ! இஸ்லாமிய தமிழனும் தமிழனே ! உம்மை போன்ற சைவ சிந்தாந்தியும் தமிழனே ! இதில் மற்றவனை என்னய்யா சீண்டராய் ? அவன் நம்பிக்கை அவனது வாழ்வு ! உன்எ நம்பிக்கை உன்து வாழ்வு ! தமிழர்கள் அவர்களுக்கு பிடித்த பண்டிகைகளை கொண்டாட அவர்களுக்கு உரிமையுண்டு ! அதை தவறு என்று சொல்ல எந்த கபோதிக்கும் உரிமை இல்லை ! ஆனால் வாயிலே வடை சுட எல்லோருக்கும் உண்டு , உண்மை போன்று !
கரு. தமிழ்ச்செல்வனின் கருத்து
1) சுய தரிசனம் கூட இல்லாத ஓர் இனம்;
2) பல கலப்புக்களைத் தன்னகத்தே கொண்டு இன்று ஓர் ஒன்று பட்ட இனமாக காட்சி தரும் ஓர் இனம்
3) ஒரு மொழிக்குரிய அடையாளம் எதுவுமே இல்லாமல் உலக மொழிகள் பல வற்றிலிருந்தும் சொற்களை களவாடியும் இரவல் பெற்றும் தன் மொழியே உலக மொழிகளில் சிறந்தது, மூத்தது என்று சொல்லிக்கொள்ளும் ஓர் இனம்
4) இன்று உலக அரங்கில் தனியிடம் பெற முயலுகிறது என்றால் அதற்கு அங்கே நிலவும் ஒற்றுமையே காரணம்.
இவர் கருத்திலிருந்து பெறப்பட்டவை:
தமிழர் சுய தரிசனம் இல்லாதவர்!
தமிழர் என்பது பல கலப்புக்களைக் கொண்டு காட்சி தரும் இனம்!
ஒரு மொழிக்குரிய அடையாளம் இல்லாதது தமிழ் மொழி!
உலக மொழிகள் பலவற்றிலிருந்து சொற்களை களவாடியும் இரவல் பெற்றும் வாழ்வது தமிழ் மொழி!
தன் மொழியே உலக மொழிகளில் சிறந்தது என்று சொல்லிக் கொள்ளும் ஓர் இனம் தமிழர் இனம்!
இத்தகையோர் தமிழராக ‘இருந்தால்’ இது மல்லாந்து படுத்துக் கொண்டு வானத்தை நோக்கி எச்சில் துப்புவது ஆகாதா?
சுய அறிவுடைய தமிழன் இவ்வாறு எழுதுவானா?
ஒரு மொழியில் மற்ற மொழிச் சொற்கள் கலப்பு என்பது இயல்பு. இது அனைத்து மொழிகளிலும் நடப்பது. இதைக்கொண்டு “மொழிக்குரிய அடையாளம்” இல்லாதது தமிழ் மொழி என்று கூறுவோருக்கு உலக இயல்பு என்னவென்று தெரியாது போயிற்றா?
உலக இயல்பை அறியாதவரால் எப்படி தமிழையும் தமிழரையும் அறிய முடியும்? பெயரில் மட்டும் “தமிழ்” இருந்தால் போதாது. அதை தமிழுக்கும் தமிழருக்கும் அந்நியமானோரும் சூட்டிக் கொண்டு தமிழையும் தமிழரை இழிவாகப் பேசலாம்.
இதுதான் கரு. தமிழ்ச்செல்வன் என்றொரு பெயரில் செம்பருத்தியில் எழுதுவோராவார் என்றால் இவருக்கு மரியாதை என்ன வேண்டிக் கிடக்கு? மரியாதைக் கொடுத்து மரியாதை வாங்க பழகிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே எமது மறுமொழியை பதிந்தேன்.
ஓர் ஆய்வாளர் செய்த கருத்தைக் கொண்டு விளக்க வேண்டிய விடயத்தைப் பதிந்தேன். ‘கரு. தமிழ்செல்வன்’ என்பாரால் தமிழ் தமிழருக்கு இழைக்கப்பட்ட இழிவை விட எமது உவமை இழிவானதா? பகுத்தறிய தெரியாதவருக்கு அது இழிவாகட்டும்.
இனி, செம்பருத்தி தமிழர் இந்த கரு. தமிழ்ச்செல்வன் எத்தகைய மனம் படைத்தோன் என்பதை புரிந்து கொள்வார்.
#அப்படி இருக்க தமிழன் என்பவன் இதைத்தான் செய்ய வேண்டும் , இதை செய்ய கூடாது என்று சொல்ல நீ யாருமய்யா?#
#தமிழனின் தந்தை கிராந்தம் என்று நான் வாதிடுவேன் ! சமஸ்கிருதமும் தமிழும் அண்ணன் தம்பி என்பேன். இருவருக்கும் கிராந்தம் தந்தை ஆனால் தாய் வேறு வேறு என்பேன்!#
தமிழை ஒர் அப்பனுக்கும் இரண்டு தாய்க்கும் பங்கு போட்டு தமிழின் கற்பைச் சூரையாடுவதற்கு கருத்து சுதந்திரம் இருக்கும் பொழுது அறிவுடைய தமிழருக்கு அறிவுரை சொல்வது எப்படி குற்றமாகும்? உமக்கு எப்படி கருத்துச் சுதந்திரத்தை செம்பருத்தி கொடுக்கின்றதோ அதே சுதந்திரத்தை எமது கருத்திலும் காணலாம். இதில் நீயென்ன? நானென்ன?
#தமிழர்கள் அவர்களுக்கு பிடித்த பண்டிகைகளை கொண்டாட அவர்களுக்கு உரிமையுண்டு ! அதை தவறு என்று சொல்ல எந்த கபோதிக்கும் உரிமை இல்லை ! #
இப்படி எது தமிழர் பாரம்பரியம் எது அயலார் பண்பாடு என்று தெரியாது வாழ்ந்த தமிழரை இன்று கபோதியாக்கியது அயலார் சிந்தனை கொண்ட கபோதிதான்.
தேனீ எழுதியதில் எந்தத் தப்பும் இல்லை. மனோவியல் மேதை C. Skinnner ஆராய்ச்சி முடிபு இது. நாய்படுமோ நரிபடுமோ எனப்பாடினானே மாகவி பாரதி, அதுவும் தப்பா? என்றைக்கு மிளகை விட்டு/விற்று மிளகாய் உண்டானோ அன்றுதான் தமிழன் அறிவில் மாபெரும் தொய்வு ஏற்பட்டு இன்றைய இழிநிலைக்கு ஆளானான் என்கிறார், விஞ்ஞானி ரவி. பண்டைய தமிழருக்கு இன்றைய Tidak apa தமிழருக்கும் மிகப்பெரும் இடைவெளி விழுந்தது இதனால்தான் என்கிறார். அதனால்தான் மொழிப்பற்றோ இனமானமோ இன்றி சப்பைக்கட்டு கட்டுகிறார்கள். முகம்மதியன் தீபாவளி கொண்டாடுவானா? சீனன் தைப்பொங்கல் வைப்பானா? தமிழன் என்ன கொண்டாடினால் உமக்கென்ன என்பது உன்மத்த உளறல் இல்லையா? தமிழர் நாகரீக பண்பாட்டை மெல்ல மெல்ல சாகடிக்கும் கீரைப் புழுக்கள்! மாமா வீடு தூரம் என்பதால் சித்தப்பா வீட்டில் பெண் எடுப்பாரோ, ஏதோ ஒரு மதம் அனுமதிப்பதால்?
கபோதி கபோதி என்று இன்கு பலர் கதறக் கேட்டதுண்டு. ஆனால் கருத்துக் குருட்டுக் கபோதி என்பதும் இபோது நிரூபணம்…
அட அவசரக் குடுக்கையே
1) சுய தரிசனம் கூட இல்லாத ஓர் இனம்;
2) பல கலப்புக்களைத் தன்னகத்தே கொண்டு இன்று ஓர் ஒன்று பட்ட இனமாக காட்சி தரும் ஓர் இனம்
3) ஒரு மொழிக்குரிய அடையாளம் எதுவுமே இல்லாமல் உலக மொழிகள் பல வற்றிலிருந்தும் சொற்களை களவாடியும் இரவல் பெற்றும் தன் மொழியே உலக மொழிகளில் சிறந்தது, மூத்தது என்று சொல்லிக்கொள்ளும் ஓர் இனம்
4) இன்று உலக அரங்கில் தனியிடம் பெற முயலுகிறது என்றால் அதற்கு அங்கே நிலவும் ஒற்றுமையே காரணம்.
இவர் கருத்திலிருந்து பெறப்பட்டவை:
தமிழர் சுய தரிசனம் இல்லாதவர்!
தமிழர் என்பது பல கலப்புக்களைக் கொண்டு காட்சி தரும் இனம்!
ஒரு மொழிக்குரிய அடையாளம் இல்லாதது தமிழ் மொழி!
உலக மொழிகள் பலவற்றிலிருந்து சொற்களை களவாடியும் இரவல் பெற்றும் வாழ்வது தமிழ் மொழி!
தன் மொழியே உலக மொழிகளில் சிறந்தது என்று சொல்லிக் கொள்ளும் ஓர் இனம் தமிழர் இனம்!
மேலே உள்ளதில் எங்கேயாவது தமிழ் என்றோ தமிழ் இனம் என்றோ குறிப்பிட்டது உண்டா?
குருதி தலைக்கேறி பித்தமும் அதிகமானதால் மேலோட்டமாக மட்டும் பார்த்து விட்டு (படித்து விட்டு) கருத்தெழுத வந்ததால் வந்த வின்மை இது. உண்மைதானே?
எம் இனத்தையும் பழம்பெருமைகள் பல கொண்ட எம் மொழியையும் தூற்ற வேண்டிய நிலை எமக்கில்லை.
அடுத்த பத்தியில் நான் எழுதிய:-
ஆனால் பழம்பெருமைகள் பல உள்ள பண்டைத் தமிழ் இனம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் நம் இனத்தையும் மொழியையும் அழிக்க முயல்வோரைக் கண்டும் ஏதும் செய்ய இயலாமல் இருப்பதற்கு காரணம் நம்மிடையே ஒற்றுமை இல்லாதது.
இதைப் படித்த பிறகுமா புரியவில்லை தமிழ் மொழியை தமிழ் இனத்தை குறிப்பிடவில்லை என்று?
பண்டைத் தமிழ் இனம் என்ன
சுய தரிசனம் இல்லாத ஓர் இனமா? – பல கலப்புக்களைத் தன்னகத்தே கொண்டு இன்று ஓர் ஒன்று பட்ட இனமாக காட்சி தரும் ஓர் இனமா தமிழ் இனம்? – தமிழ் மொழி என்ன ஒரு மொழிக்குரிய அடையாளம் எதுவுமே இல்லாமல் உலக மொழிகள் பல வற்றிலிருந்தும் சொற்களை களவாடியும் இரவல் பெற்றும் உலா வருகிறதா? தன் மொழியே உலக மொழிகளில் சிறந்தது, மூத்தது என்று சொல்லிக்கொள்ளும் ஓர் இனம் தமிழ் இனமா? ஏற்கனவே உலகதோரால் செம்மொழி என ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி இனிதான் உலக அரங்கில் தனியிடம் பெற முயல வேண்டுமா? சரி இதையெல்லாம் கூட விடுமய்யா….
‘அதற்கு அங்கே நிலவும் ஒற்றுமையே காரணம்’.
எனும் வரிகள் கூடவா உமக்கு நான் சொல்ல வந்த இனமும் மொழியும் ‘என்னது’ (என்னுடையது) இல்லை…உண்மையில் நான் சொல்ல வந்தது என்னது (என்ன அது)
என்று புரியவில்லையா? அதைக்கூட கவகக் குறைவு என்று விடலாம். ஆனால் பழம்பெருமைகள் பல உள்ள பண்டைத் தமிழ் இனம் என்று சொல்லிக்கொள்ளும் நாம் நம் இனத்தையும் மொழியையும் அழிக்க முயல்வோரைக் கண்டும் ஏதும் செய்ய இயலாமல் இருப்பதற்கு காரணம் நம்மிடையே ஒற்றுமை இல்லாதது.’
இந்த வரிகள் கூடவா உமக்கு உண்மை உணர்த்தவில்லை?
சரி சரி…நாய்க்கு மணி அடித்தால் சோறு காட்டுபவராச்சே…கோபித்து என்ன ஆகாப்போகிறது?
தமிழன், மின்சார உற்பத்தி அதன் பயனீடை கண்டு பிடிக்க வில்லை ! அதன் பரிணாம வளர்ச்சியை கண்டு பிடிக்கவில்லை ! தொலை தொடர்பு , கம்பி இல்ல இணைப்பு , தூரநோக்கு இணைப்பு என்று ஆரம்பித்து இன்று இருக்கும் கணினி வரை ஒன்றும் செய்ய வில்லை. அடுத்தவர்கள் செய்த கண்டுபிடிப்புகளை மெறுகேன்றியிருக்கலாம்! அவ்வளவே ! சிவா அய்யாதுரை கூட FOTRON எனும் ஆங்கிலேயர்கள் வகுத்த மொழியில் தான் EMAIL எனும் சிஸ்டம் செய்தார் ! அதற்கு முன்னமே PNEUMATIC INTRA MAIL சிஸ்டம் இருந்தது. இன்று இப்படி அதிக உலக சாதனங்களை பயன் படுத்தி கொண்டு , கண்டு பிடித்தவர்களையே கெட்டவன் என்பது , வாயாலே வடை சுடும் சங்கத்தின் வேலை ! மலேசியாவில் 2012 ஆம் ஆண்டுவரை இந்துக்களின் விவாகரத்து எணிக்கை 56464 என்று புள்ளி விவரம் கூறுகிறது ! இதை எப்படி சரி செய்வது என்று எந்த அறிவார்ந்த விவாதமும் இல்லை ! ஆனால் தீபாவளியை தமிழன் கொண்டாடுவதனால் எல்லாத்தையும் இழந்து விடடான் என்பது வேடிக்கையாக உள்ளது ! ஒன்றும் செய்யாமலே எல்லாவற்றயும் இழந்து விட்டொம் என்பது , நகைப்புக்குரியது ! முதலில் செய்ய வேண்டும் ! பிறகு தன் இனத்தவர்களுக்கு அதை சொல்லி தரவேண்டும், பொறாமையில் அடுத்தவன் மீது பழியை போடுவதனால் , எல்லாம் இவர்கள் கண்டு பிடித்து விட்டது போல் ஆகி விடாது ! எனவே தீபாவளியை பிடித்தவர்கள் கொண்டாடுங்கள் , பிடிக்காதவர்கள் ஒதுங்கி கொள்ளுங்கள் ! ஏன் உங்கள் தவறான சிந்தனையை , அடுத்தவன் ஏற்று கொள்ள வேண்டும் என்று அடம் பிடிக்கிறீர்கள் ?
Dhilip 2 சரியான நெத்தியடி கொடுத்தீர்கள்.
‘அவன்’ கண்டுபிடிப்புக்கு தூய தமிழில் பெயர் வைக்க ஒரு கூட்டம் நான் நீ என்று முந்திரிக் கொட்டையாய் முந்தியடிப்பதை விட்டு விட்டீர்களே..
அறிவையும் ஆற்றலையும் பயன்படுத்தி ‘அவன்’ கண்டுபிடித்தது அவன் இட்ட பெயரிலேயே இருப்பதில் என்ன குறை கண்டதோ இக்கூட்டம்? நாம் ‘கண்டுபிடித்த’ இடியாப்பத்தை இடியாப்பம் என்று அவன் சொல்வதில் தானே நமக்கும் பெருமை? மாறாக அதை -Thundercake- மொழிபெயர்த்தால் நமக்கு கோபம் வரத்தானே செய்யும்? ஊஹும் . சிலதுகளுக்கு வரவே வராது. அதிரசத்தை -telinga keling- என்று பிறர் சொல்வதைக் கேட்டும் நாம் ஊமையாகத்தானே இருக்கிறோம். மேலும் ஆடை அணியக்கூட தெரியாத இனத்தவன் நாளை புடவை அணிவதும் வேட்டி அணிவதும் கூட எங்கள் கலாச்சாரம் தான் என்று சொன்னால் கூட நாம் என்ன மறுத்துப் பேசவா போகிறோம்?
#இன்று உலக அரங்கில் தனியிடம் பெற முயலுகிறது என்றால் அதற்கு அங்கே நிலவும் ஒற்றுமையே காரணம்.#
சொல்லுவதைத் திருந்தச் சொல்லுக. “அங்கே” என்றால் எங்கே?
குற்றம் தன்னிடையே வைத்துக் கொண்டு அதை புரிந்து கொள்ளத் தெரியவில்லை என்று கூறுவது முதலில் தன் பதிவில் எவரைக் குறித்தது என்று தைரியமாகச் சொல்லலாமே.
அதைச் செய்யாமல் பிறரை வைவதை நிறுத்தி விட்டு தீபாவளி கொண்டாடுவதால் என்ன பயன் என்று தன்னைத் தானே கேட்டுக் கொண்டு தாங்கள் முன் வைத்த கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல்லலாம்.
தீபாவளியையொட்டி ஐயா திரு. நா. தர்மலிங்கம் அவர்களின் பதிவும் வந்துள்ளது. அதையும் கவனித்துப் பின் தீபாவளியை ஒட்டி எமது கருத்தையும் பதிவோம்.
#தீபாவளித் திருநாள் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கும் அன்பர்கள், குறிப்பாக சைவ நெறியாளர்கள் இதைப்பற்றி சிந்தித்துப் பார்ப்பதில் தவறில்லை.#
இது ஐயா நா. தர்மலிங்கம் அவர்களின் கருதுகோள்களை மேற்கோள் காட்டி ஞாயிறு நக்கீரன் பதிந்த இறுதி சொற்றொடர்.
முஸ்லிம், கிறித்துவரென்று இந்நாட்டில் பண்டிகைகள் கொண்டாடும் பொழுது அதற்கான காரணத்தைச் சொல்லி விழா எடுக்கின்றார். தமிழர் தீபாவளிக்கு என்ன காரணத்தைச் சொல்லி விழா கொண்டாடுவது.
வடக்கே வாழ்ந்த மக்கள் ஆளுக்கொரு காரணத்தைச் சொல்லி விழா கொண்டாடினால் தமிழரும் மூக்கணாங் கயிறு கட்டிய பசு மாதிரி பின் போவதா அல்லது அர்த்தமில்லாத விழாவை விட்டு நீங்கி உள்ள இருளை நீக்கும் விழாவாக கார்த்திகை தீப நாளை சிறப்பான நாளாக முன்னெடுத்து நடப்பதா? அல்லது இயற்கை அன்னையைப் போற்றும் பொங்கலை முன்னெடுத்துக் கொண்டாடுவதா?
நம் முன்னோர்கள் தீபாவளியின் காரணத்தை அறியாது மற்றோரைப் பின் பற்றிப் போனால் இன்று நல்வழி தெரிந்து அவர்களை வழி நடத்துவதான் தமிழரின் அறிவுத் தெளிவு என்பது. இதுவே தமிழருக்குச் சிறப்பானதொரு தலைமைத் துவத்தை இந்நாட்டில் ஏற்படுத்தும்.
தமிழருக்கு நல்வழி காட்டுவோரை அடையாளங் கண்டு பின்பற்றிப் போனால் உண்டு வாழ்வு இல்லையேல் அனுபவி ராஜா அனுபவி என்று அறியாமையில் வாழ்ந்து வீழ்வதுதாகட்டும்.
இப்போது உண்மை புரிந்து விட்ட போதிலும், நக்கீரனார் நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்று தற்காத்துக் கொண்டதைப் போல விரல் நீட்டுவது புரிகிறது.
குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டிவில்லையோ..(மீசை இருந்தால் ஒட்டும்)
சூசகமாக சொன்னால் புரியும் என்று எண்ணியது தவறே…நம்மில் இன்னும் பலர் பாலர் வகுப்பினரே என்பதும் புரிகிறது. இதுவும் சூசகம் தான். நம்மில் என்று சுட்டியது நம் தமிழ் இனத்தை அல்ல…மாறாக இங்கே வாதிடுவோரை. புரிந்தால் சரி.
எனக்கு தீபாவளியில் நினைவுக்கு வருவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் எனும் பரமாத்மாவின் உயர்ந்த குணம் ! 16 ,000 பெண்களை கடத்தி வந்து வலுகடடாயமாக மணந்து கொள்கிறான் நரகாசுரன் ! அவனை கொன்றவுடன் , அப்பெண்கள் தங்கள் நிலையை பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடன் முறையிடுகின்றனர் ! அப்பெண்கள் தங்களை, தங்கள் சுற்றம் இனி ஏற்று கொள்ளாது (போன் ரங்கன், தேனீ போன்றோர்கள் வாயாலே எங்கள் மீது வடை சூடுவர்), எப்படி இனி பெண்மையின் உடம்பில் வாழ்வது என்று கேட்க, ஸ்ரீ கிருஷ்ணரும் ஒன்றுமே தெரியாதது போல் , சரி உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறேன் என்றார். இங்கே கவனிக்க வேண்டியது யாதெனில்: கலங்கபட்ட -கற்பிழந்த ஒரு பெண்ணுக்கு அந்த சூழலில் வாழ்க்கை தருவது என்பது கடவுளால் மட்டுமே சாத்தியம். (மலேசியாயாவில் உள்ள 56464 விவாகரத்து வாங்கிய பெண்களுக்கு , போன் ரங்கன் அவர்கள் மறுவாழ்வுக்கு வழி சொல்லட்டும் ! )
அங்கே ஒரு குரல்: “திருமணமான முக்தி” என்று கூறவே, அதே நிமிடம் மாயவன் 16 000 அவதாரமாக மாறி அப்பெண்களை மணந்தும் ஒரு பாடல் …. அப்பாடலில் பெண்கள் கிருஷ்ணனை துதித்து போற்றுகின்றனர் ! பாடல் முடியும் தருவாயில் , அப்பெண்களுக்கு முக்தி. அதாவது , அப்பெண்களை தன் 16 000 உருவங்களுடன் ஒன்றாக்கி , தானே யாதுமாகினார் ! கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்கிறார் : “எனக்கு வர்ணாஸ்ரமத்தில் அதிகம் பிடித்தவர்கள், அதிகம் நான் இரக்கம் கொள்பவர்கள் சூத்திரனும், பெண்களுமே ” – என்கிறார் ! சொன்னதை அப்படியே செய்கிறார் ! 16 000 விதவைகளுக்கு ஒரே நேரத்தில் திருமணமான முக்தி நிலை ! தீபாவளியை கொண்டாட எனக்கு இந்த காரணம் போதுமே ! திரேதா யுகத்தில், சீதையை சீண்டியதாலே, ராவணனின் புகழ் அழிந்தது ! துவார யுகத்தில், பாஞ்சாலியை சீண்டியதாலே, கெளறவர்கள் புகழ் அழிந்தது ! கலியுகத்தில் , நம் இன பெண்களை காப்பாற்றாமல் , எந்த இலக்கையும் அடைய முடியாது என்பது என் கருத்து ! இப்ப சொல்லுங்க , எப்படி தீபாவளியை பயன் படுத்தி சமூக பிரச்சனையை களைவது என்று !
சரியோ தவறோ நம்மில் பலரிடேயே ஆழப்பதிந்துவிட்ட இந்த தீப விழாவை மாற்றுவது நிறுத்துவது கடினம் .ஆனால் இந்த விழாவை நம் சமுதாயத்தின் ஒற்றுமை தினமாக கொண்டாடி நம்மில் வரியவரை தூக்கி விட நாம் எல்லோரும் ஒன்றுபட்டு செயல்பட்டால் அந்த தினம் நம் இனத்திற்கு பயனுள்ளதாக அமையும் .வீர வசனங்களும் ,கோபக்கனல்களும் விழலுக்கு இறைத்த நீராகும் .
ஒரு பெண்டாட்டியை வைத்துக் கொண்டு கஷ்டப்படுவதே பெரிய காரியம். இதில் நரகாசுரன் 16,000 பெண்களைக் கடத்தி வந்தானா? அவனுக்கு வேற வேலை வெட்டியே இல்லையா? நல்ல புராணம் இயற்றினார்கள் போங்கள். நாசமா போன புராணம்.
நமது நாட்டின் துணை பிரதமர் கபார் பாபா அவர்கள் ஒரு முறை மனம் திறந்து கூறினார் ” சிறு வயதில் எங்கள் குடும்பத்தில் வருடத்தில் ஒரு முறைதான் டாகிங் ( அதாவது மாட்டு இறைச்சி சாப்பிடுவோம் ) ” ஹரி கோர்பான் அன்று அதுவும் இலவசமாக கிடைக்கும் அதனால் தான் என்றார் ! பின்னாளில் அவர் கோடீஸ்வரனாக வாழ்ந்தது வேறு கதை .அதைப்போல் தீபாவளி அன்று மட்டும் வயிறார நல்ல உணவும் ! புது துணிகளும் ! காணும் பாமரர்கள் ! ஏழைகள் ! நமது இந்திய சமுதாயத்தில் எத்துணை பேர் ! இன்று பொது இயக்கங்களும் தங்களால் முடித்த உதவிகளையும் தீபாவளி அன்று நிறையவே செய்கிறார்கள் ! அரசாங்கமும் வருடம் ஒரு முறை தீபாவளி அன்று இந்தியர்களும் இந்த நாட்டு பிரஜைகள் t தான் என்ற பச்சாதாபத்தில் பல நிகழ்ச்சிகளும் நடத்துகிறது ! விளம்பரத்திற்கு செய்கிறார்கள் என்பது வேறு கதை ! இந்த தீபாவளி நாளிலாவது நாம் இந்த நாட்டில் வாழ்கிறோம் என்பதை அரசாங்கமும் ! மற்ற இனத்தாரும் அங்கீகரிக்கிறார்களே என்ற சந்தோஷத்துடனும் ! பெருமையுடனும் இந்த தீப திரு நாளை ! கொண்டாடுவதில் எந்த முரண் பாடும் இருப்பதாக தெரியவில்லை ! புராணங்களையும் ! இதிகாசங்களையும் ! கரைத்து குடித்திருக்கும் எமது பகுத்தறிவால் அருமை நண்பர்களே ! அன்றாட காட்சியாக பொண்டாட்டி பிள்ளைகளோடு வாழ்க்கையை சுமையுடனும் ! வெறுமையுடனும் ! வறுமையுடனும் ! விரக்தியுடன் கழிந்து கொண்டிருக்கிறானே என் அருமை தமிழன் ! நம் சகோதரன் ! அவன் வருடத்தில் ஒரு நாள் இந்த தீபாவளி திரு நாளிலாவது மகிச்சியுடன் இருக்கட்டுமே !பகுத்தறிவுக்கு முரணான இதிகாசங்களையும் !புராணங்களையும் மேற் கோல் காட்டி தமிழா உனக்கு தீபாவளி கிடையாது இந்தநாளிலும் உனக்கு கஞ்சி தான் என்று அவனை ஏன் குழப்புகிறீர்கள் ! வறுமையிலும் ! இல்லாமையிலும் ! வாடும் இந்தியனுக்கு ! தமிழனுக்கு ! பகவான் ஸ்ரீ கிருஷ்ணனையும் தெரியாது ! ராவணனையும் தெரியாது ! சீதை ! பாஞ்சாலி இவர்களையும் தெரியாது ! ஏழை தமிழனுக்கு . அவனுக்கு தெரிந்ததெல்லாம் தன் பொண்டாட்டி ,பிள்ளைகள் இந்த நாளிலாவது வயிறு நிறைய நல்ல சாப்பாடு சாப்பிட வேண்டும் ! புது உடை உடுத்த வேண்டும் அது மட்டும் தான் ! வேறு ஏதும் தெரியாது ! திலிப் அவர்களின் அற்புதான கேள்வி ! ” எப்படி தீபாவளியை பயன் படுத்தி சமூக பிரச்சனைகளை களைவது ” இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் இதை ஆழமாக சிந்திக்க வேண்டும் ! தீபாவளி யரால் வந்தது ! யாருக்காக வந்தது ! எதற்க்காக வந்தது இந்த வேதாந்த விதண்டா வாதங்கள் தேவையற்றவை ! நரகாசூரன் என்ற அரக்கன் செத்தான் ! தீயவன் அழிந்தான் ! தீயவைகள் அழிந்தன ! மக்கள் மகிழ்ச்சி அடைந்து ! தீப ஒளி ஏட்றி இன்னல்கள் ஒளிந்து மகிழ்ச்சி பொங்கிய இந்தநாளை சிறப்புடன் கொண்டாடினர் ! கொண்டாடுகிறோம் ! கொண்டாடு ஓம் ! முரண்பாடுகள் தேவை இல்லை !அரசாங்கம் இந்தியர்களுக்கென்று அங்கீகரித்த பொது விடுமுறை நாள் ! பண்டிகை நாள் ! மலேசியர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் ஒற்றுமை விழா !! அரசாங்கம் நமக்கு அளித்த மாபெரும் அங்கீகாரம் !
தேனீ அவர்களே, தமிழில் கூடத்தான் இப்படி நடைமுறைக்கு ஒவ்வாத கதைகள் இருக்கு ! அதை குறிப்பிட்டு கூறி விட்டால் , உடனே நான் சொல்வது சரி என்று ஆகிவிடுமா ? என்னைய இது மூடத்தனமாக இருக்கு ? இப்படி வாயில் வடை சுடுவதைத்தான் நாங்கள் எதிர்க்கிறோம் ! தமிழில் ஐம்பெரும் காப்பியங்கள் உள்ளது. சிலப்பதிகாரம் , சீவகசிந்தாமணி , மணிமேகலை , குண்டலகேசி , வளையாபதி . இப்பொழுது நான் அதை பிரித்து மேயவா ? குண்டலகேசி யில் மொட்டை அடித்த ஒரு புத்த பிச்சு (ஒரு பெண்) மொட்டை அடித்த பின் வளர்ந்த முடிகள் செங்குட்டாக வளர்ந்தது ! புவி ஈர்ப்பு உள்ள உலகில் நடப்பதற்கு சாத்தியமில்லை ! இருந்தாலும் நாம் அந்த மாதுவின் கடின பிரம சரிய விரதத்தை போற்றவில்லையா ? தேனீ அவர்களே , அடுத்தவனை குறை சொல்வதை நிறுத்தும்மைய ….
தமிழரைச் சமயத்தின் வழி ஒரு காலத்தில் ஆண்ட கடவுள் மறுப்பு கொள்கையுடைய சமண பௌத்த ஓலைச்சுவடிகள் அழியாமல் எஞ்சியிருந்தன. அதை உ.வே.ச. அவர்களின் தயவால் அச்சேற்றி இன்று தமிழ் மொழியின் தொன்மையைக் காட்டும் காப்பியங்களாக் காண்கிறோம்.
அதை தாங்கள் எப்படி வேண்டுமானாலும் பிச்சிப் பீராயலாம். அதனால் தமிழருக்கு அயலார் மதமாகிய சமண பௌத்த மதங்களின் அவலட்சணம் புரியும் வண்ணம் நன்றாகவே எழுதுங்கள். அவ்வாறு எழுதும் பொழுது கோவலன் கண்ணகியின் மதம் யாதென்றும் கண்டு பிடித்து எழுதுங்கள். அவர்கள் தீபாவளி கொண்டாடினார்களா என்பதையும் கண்டுப் பிடித்து எழுதுங்கள்.
அவர்கள் வைதிக மதத்தை எங்ஙனம் தூற்றினார்கள் என்பதை சிலப்பதிகாரமும், மணிமேகலையும் வெட்டவெளிச்சமாகக் கூறுகின்றது. அவற்றையும் கண்டுப் பிடித்து எழுதுங்கள். செம்பருத்தி வாசகர் பலருக்குத் தித்திக்கும்!.
எதற்காக தீபாவளி கொண்டாட வேண்டுமென்று தமிழருக்கு தெரியாது! அப்புறம் எதற்கு கொண்டாட வேண்டும்? காரணமில்லாமல் ஒரு பண்டிகை? ஒரு நாள் கூத்துக்கு மீசையை வைத்தால் போதும்!. மீதம் 364 நாட்கள் கஞ்சி குடித்தாலும் பரவாயில்லை. இதுதான் தீபாவளி என்றால் அந்த வலி எதற்கு?
பணம் படைத்தவனுக்குத் தினமும் தீபாவளி. ஏழைக்கு ஒரு நாள் மட்டும் தீபாவளி என்றால் அத்தகைய தீபாவளி எதற்கு? இந்த ஏழை அந்த ஒரு நாள் கூத்துக்கு எவ்வளவு பாடுபடுகின்றான் தெரியுமா?
அதனை இன்பமாக கொண்டாட முடியாமல் அவன் வருந்துவதை யார் அறிவார்?
மதுவைக் குடித்து மாமிசத்தை உண்பதே தீபாவளியின் முக்கிய அங்கமாகத் தெரிகின்றது பணம்படைத்த இளையோருக்கு! தமிழனம் இப்படி குடித்துச் சீரழிந்து போக நமக்கு ஓரு திருவிழா தேவையா? தமிழர் சிந்திக்கவே கூடாது. தமிழரைத் திருந்தவிடவே கூடாது என்பது அயலாரின் எண்ணமென்றால் திருந்தி வாழுங்களென்று தமிழருக்குக் கூறுவது கூட தப்பாகி விடுகின்றது அயலாரில் சிலருக்கு!
ஐயா அறிவு ஜீவிகள, உங்களை நான் ஒன்றும் அறியாமல் இல்லை! இது வழக்கமாக நடை பெறுவதுதான் ! தமிழில் உள்ள குறைகளை சுட்டி காட்டினாள், எழுதியவன் எங்க ஆளு இல்லனு பிளேட்ட திருப்பரது ! ஆனா தைரியமா அதனை ஒதுக்கறது இல்லை ! இன்னமும் தமிழர்களின் பொக்கிஷமாக இந்த 5 காப்பியங்களும் போற்ற படுகின்றது ! எனக்கு அதில் முரண்பாடில்லை ! நான் மிகவும் ரசித்து ருசித்து படித்தது சீவகசிந்தாமணி ! சீவகனின் தந்தை மன்னராக இருந்தும் நாட்டை கவனிக்காமல் ராணியின் மீது உள்ளாகாதலால் அமைச்சரிடம் நாட்டை இழக்கிறான். புஷ்பக ரக விமானத்தில் ஏறி ஒரு சுடுகாட்டில் இறங்கி , தன் குழந்தையை பெற்றடுக்கிறாள் அரசி. அவன்தான் சீவகன் ! பின்னாளில் 8 மனைவிகளை திருமணம் செய்தாலும் நாட்டின் மீது இருந்த கடடப்பாடில் இருந்து வழுவாமல் , நல்லாட்சி தருகிறான். இதில் இருந்து எனக்கு என்ன புரிகிறது என்றால் : இந்து தர்மங்களில் , 11 வது தர்மமான ராஜா தர்மத்தை சரிவர செய்திருக்கிறான் சீவகன் ! இதை சரியாக செய்யாத நாடுகள் இன்று அல்லோல படுகின்றன !இது போதும் எனக்கு ! கரும்பில் வரும் சாட்ட்ரை பருகி சக்கையை எரிந்து விடடேன் ! இப்படி தீபாவளியை அதன் உட் பொருள் புரிந்து கொண்டால் போதுமானது ! இதில் பக்கத்துக்கு வீட்டுக்காரன் குடிக்கிறான் என்று அங்களைப்பது என்பது, காலத்திடம் கேளுங்கள் , எவன் இதனை கண்டு பிடித்து , மக்கள் பயனீட்டில் விட்ட்து என்று !