தமிழின் நிலை வேதனையானது; தமிழ் உயர்நிலைப்பள்ளி தேவையற்றது!

நமது நாட்டில் தமிழ் உயர்நிலைப்பள்ளி அமைக்கப்படுமா? படாதா? கூடாதா? முடியாதா? இந்தக் கேள்விகளுக்குமுன்,  தேவையா? தேவையில்லையா? என்ற கேள்விகளுக்கு முதலில் விடை காண வேண்டும்.

தமிழ் ஆரம்பப்பள்ளிகளே அவலநிலையில் அரசாங்கத்தின் மானியத்தை நம்பி நடை போட்டு கொண்டிருக்கின்றன! கல்வி என்பது மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் ! மாநில ரீதியாக இருந்தால் அது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அழிந்து போகும் ! நமது நாட்டின் கல்வி கொள்கையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும் !

தமிழ் உயர்நிலைப்பள்ளியாக இருந்தாலும் தேசிய மொழியும் ஆங்கிலமும்தான் பிரதான மொழியாக இருக்கும் ! தமிழ் ஒரு படமாகத்தான் இருக்கும் ! அதையும் நமது மாணவர்கள் படிக்கவும் மாட்டார்கள் ! தமிழ் சோறு போடாது என்று நமது அருமை தமிழன் புறக்கணித்து விடுவான் !

ஆறு வருடம் தமிழ்ப்பள்ளியில் தமிழ் பயின்ற தமிழன் தமிழைப் பயன்படுத்துகின்றானா?

இடை நிலைப்பள்ளிகளிலும் உயர் நிலைப்பள்ளிகளிலும் நமது தமிழின் போதனை முறை எந்த நிலையில் இருக்கிறது ! POL என்ற இடை நிலைப்பள்ளியின் தமிழ் போதனா முறையை மேம்படுத்தினாலே, தமிழ் மேலும் மெருகுடன் வளரும் வாய்ப்பிருக்கிறது.

நம் நாட்டில் தமிழின் பயன்பாடு எந்த நிலையில் இருக்கிறது?  இந்தியர்களின் வியாபார நிறுவனங்களிலும்  கடைகளிலும் ஆங்கிலம்தான் முதன்மை பெருகிறதேயொழிய  தமிழைக் காணவில்லை! லிட்டெல் இந்தியா என்று எழுதி விட்டு தமிழை காணவில்லை!

வேருக்கு நீர் விடுங்கள் மலர்கள் தானாக மலரும்.

டிவி தீகா தமிழ் படம் ஒளிபரப்பவில்லை என்று முறையிட்டோம் ! தமிழனுக்கு சினிமாவை தவிர வேறு ஏதும் கேட்கத்   தெரியாது என்றார் சாதனைத் தலைவன்.

சினிமாவை கேட்கவில்லை. எங்கள் தமிழ் உரிமையை வலியுறுத்தினோம். பல்கலை கழகங்களில் நமது இந்திய மாணவர்களின் எண்ணிக்கை   குறைகிறது என்றோம். நாமே பல்கலைக்கழகம் அமைத்துக்கொள்வோம் என்று தானைத் தலைவன் தானும் தன் சந்ததியும் சம்பாதிக்க ஒரு பல்கலைக்கழகம் அமைத்து கொண்டார்.

தமிழ் உயர்நிலைப்பள்ளி அமைக்க அரசாங்கம் அனுமதி தந்தாலும் அது நமது தலைவர்கள் பணம் பண்ணும் நிறுவனமாகத்தான் உருவெடுக்கும்! சாமான்ய தமிழனுக்கு எந்த பயனும் விளையாது!

  • மணியம்