“எமது அரசியல் தலைமைகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு தமது வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாளை திங்கட்கிழமை பிறக்கவுள்ள 2018ஆம் ஆண்டினை முன்னிட்டு முதலைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “இன்று புதிதாக மலரும் 2018ஆம் ஆண்டு அனைத்து மக்களுக்கும் அமைதியையும் சமாதானத்தையும் வழங்குகின்ற ஒரு புதிய ஆண்டாக மிளிர வேண்டும் என வாழ்த்துகிறேன். எம்மிடமிருற்து விடைபெறும் 2017ஆம் ஆண்டை அன்புடன் வழியனுப்பி, 2018ஆம் ஆண்டை மகிழ்வுடன் வரவேற்போம்.
இப்புதிய ஆண்டில் எம்மிடையே காணப்படுகின்ற விரோத உணர்வுகள் அனைத்தும் அகலக் கடவதாக! எமது அரசியல் தலைமைகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு தமது வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்ப்பார்க்களாக! எமது மக்களின் சுகவாழ்வுக்கும் நிலைபேறான அரசியல் அந்தஸ்துக்குமான யாவரும் ஒன்றிணைந்து பாடுபட இப்புதிய புத்தாண்டு வழிவகுப்பதாக! 2018ஆம் ஆண்டு அனைவருக்கும் சுபீட்சத்தையும் சுக வாழ்வையும் மன அமைதியும் வழங்குகின்ற புதிய ஆண்டாக திகழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.” என்றுள்ளது.
-4tamilmedia.com