மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைப்பு?

பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,   மார்ச்  இறுதியில்,    அரசாங்கம்   புதிய   தேர்தல்   எல்லைகள்மீதான  அறிக்கையைத்     தாக்கல்   செய்த   மறுவாரம்,  நாடாளுமன்றத்தைக்  கலைக்கக்கூடும்   என  த   ஸ்டார்   அறிவித்துள்ளது.

“நாடாளுமன்றம்  கலைக்கப்படும்   தேதி   கிட்டத்தட்ட   நிச்சயமாகி  விட்டது.  மார்ச்  28,  29   அல்லது  30-இல்  கலைக்கப்படலாம்.  அதற்கான   அறிகுறிகள்   தெரிகின்றன”,  என்று   ஸ்டார்  மீடியா  குழுமத்தின்  நிர்வாக    இயக்குனரும்   தலைமைச்   செயல்   அதிகாரியுமான  வொங்  சுன்  வாய்   பதிவிட்டிருக்கிறார்.

தேர்தல்   தொகுதிகள்  திருத்தி  அமைக்கப்பட்டதுமீதான     தேர்தல்  ஆணையத்தின்   அறிக்கை   அடுத்த    திங்கள்கிழமை,  மார்ச்   19க்குள்  எம்பிகளுக்கு  வழங்கப்படும்    என  எதிர்பார்க்கப்படுகிறது.

துணைப்    பிரதமர்     கூறியுள்ளதுபோல்    ஒரு  சாதாரண  பெரும்பான்மையைக்  கொண்டு    அதை    நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றி  விடலாம்,  அதை  மேலவைக்குக்  கொண்டுசெல்ல  வேண்டிய     அவசியமில்லை.