இதே நாளில் அன்று

அக்டோபர் 31, 1984
முன்னாள் பிரதமர் இந்திரா: உ.பி., மாநிலம், அலகாபாதில், ஜவஹர்லால் நேரு — கமலா தம்பதிக்கு, 1917, நவ., 19ல் பிறந்தார். நேரு மறைவிற்கு பின், நாட்டின் மூன்றாவது பிரதமராக, 1966ல் பதவியேற்றார். 1969 ஜூலையில், வங்கிகளை தேசியமயமாக்கினார். 1971ல், கிழக்கு பாகிஸ்தானில் கலவரம் ஏற்பட்டது. அப்போதைய பிரதமராக இருந்த இந்திரா, இந்திய படைகள் உதவியுடன், பாகிஸ்தானிலிருந்து பிரிந்து, வங்கதேசம் என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்தார்.கடந்த, 1984 ஜூனில், சீக்கியர்களின் புனிதத் தலமான பொற்கோவிலுக்குள், பயங்கரவாதிகள் முகாமிட்டனர். கோவிலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த, ராணுவத்திற்கு அனுமதி வழங்கினார், அப்போதைய பிரதமர், இந்திரா. ராணுவ தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல், பயங்கரவாதிகள் வீழ்ந்தனர். டில்லியில் உள்ள தன் வீட்டில், மெய்காப்பாளரால், 1984, அக்., 31ல், இந்திரா சுட்டு கொல்லப்பட்டார். அவர் மறைந்த தினம், இன்று.