சுங்கை பூலோ, தேசிய வகை சரசுவதி தமிழ்ப்பள்ளி, 72 ஆண்டுகளாக பீடு நடை போட்டுக்கொண்டிருக்கிறது, இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் கல்விமான்களாகவும் தொழில் முனைவர்களாகவும் உயர்ந்து நிற்கின்றனர், ஆனால், இப்பள்ளியின் முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைக்க கழகம் ஒன்று இல்லை என்பது வருத்தத்திற்குரிய செய்தியாகும்.
பலரும் பல வழியில் முயற்சித்திருக்கிறார்கள், ஆனால் அந்த முன்னெடுப்புகள் தோல்வியிலேயே முடிந்திருக்கிறது. முன்னாள் மாணவர் கழகம் இல்லாததால் அப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் குழாம் (Bath) தங்களால் முடிந்த உதவிகளைப் பள்ளிக்குச் செய்துக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 6.3.19ஆம் நாள் சுங்கை பூலோ சரசுவதி தமிழ்ப்பள்ளியின் முன்னாள் மாணவர் கழகத்தை இயக்கப் பதிவுத் துறையில் 89,96,97,99 குழாம் முன்னாள் மாணவர்களால் பதிவுச் செய்யப்பட்டது.
அடுத்து, முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைப்பதற்காக, வருகின்ற 1.12.2019ஆம் நாள் பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 4 மணி வரை, முன்னாள் மாணவர் கழகத்தின் புதிய உறுப்பினர் பதிவுக்கான நிகழ்ச்சியை, கழகம் ஏற்பாடு செய்திருக்கிறது.
இதுவரை பள்ளிக்கு தனித்தனியாக உதவிச் செய்துக்கொண்டிருந்த முன்னாள் மாணவர்களை, இக்கழகத்தில் இணைந்து, அமைப்பாக செயல்பட நாங்கள் அழைக்கிறோம்.
இம்முன்னாள் மாணவர் கழகத்தில் இணைய 1.12.19ஆம் நாள், அடையாள அட்டை நகலும் கடப்பிதழ் அளவுக்கொண்ட 2 படங்களும் உடன் கொண்டு வரவும். அதோடு, பதிவுக் கட்டணமும் ஆண்டுக் கட்டணமும் செலுத்த வேண்டும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.
அவ்வப்போது தகவலுக்கு https://www.facebook.com/alumnisaraswathysgbuloh/ முகநூல் தளத்திலும் மேலும் தகவல் அறிய செயலாளர் திரு மணிராச் 012-2243159 அல்லது தலைவர் திரு தமிழகரனை, 016-4196429 என்ற எண்களில் தொடர்புக்கொள்ளுமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.