15வது பொதுத் தேர்தலில் தனித்தமிழர்களுக்கு இடம் வேண்டும்

இந்தச் செய்தியை பார்த்தவுடன் சிலருக்கு உடனே கொதிக்கும்.

இனவாதம், மதவாதம், சாதியம் என்றெல்லாம் அடம்பிடிப்பார்கள் என்னை சாடுவார்கள்!

அரசியலில் ஒர் இனத்துக்கு தொடர்ந்து Ðரோகம் என்றால் ஆள நினைக்கும் கட்சித் தலைவர்களுக்கு நம் நீயாயப்பூர்வ கோரிக்கையை முன் வைப்பது நம் உரிமையாகும்.

நாட்டில் 222 நாடாÙமன்றõ, 500க்கு மேற்பட் சட்டமன்றங்களில் தமிழர்கள் 5% மக்கள் தொகை சகிதத்தில் தமிழர்களுக்கு சீட் வழங்க நாட்டின் அரசியல் ஆளுமை கட்சிகளில் கொள்கை வகுக்க வேண்டிய காலம் வந்துவிட்டது.

மலேசிய இந்தியர்கள் பட்டியலில் 85% சதவிதம் தமிழர்கள் இருப்பதால் நாட்டை ஆளுமை செய்யும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தனித்தமிழர்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற இடங்களில் போட்டியிடும் கட்டாயக் கொள்கையை ஏற்படுத்த வேண்டும் என மலேசிய நாம் தமிழர் இயக்கத்தின் ஆலோசகரும் மலேசியத் தமிழர் தேசியத் தலைவருமான பொன் ரங்கன் வேண்டுகோளை முன் வைக்கிறார்.

நாட்டில் இந்தியர்கள் 6% அல்லது 7% சதவிதம் என்றெல்லாம் சொல்லப்படுகிறது.

தமிழர்கள் 5% சதவிதம் என்றே கணக்கில் எடுத்தாலும் நாடாளுமன்றத்தில் 222 சீட்டில் 10 சீட்டாவது தர வேண்டும். இதில் இரண்டு முனை கட்சி போட்டியானால் 20 சீட்டுகளும், மும்முனை போட்டியானால் 30 சீட்டுகளில் தமிழர்களை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதை கட்சிகள் உணர வேண்டும்.

அஃது போலவே சட்டமன்றங்கள் கட்சிகள் கணக்கில் குறைந்தது 100 சீட்டுகளுக்கு மேல் ஒதுக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் கட்சிகளுக்கு உண்டு.

தமிழர்களில் திறமையான அரசியல் தலைவர்கள், இளைஞர்கள் வெறுமென கட்சி கொடிகளை தூக்கித்திரிவதை காட்டிலும், 21ம் நூற்றாண்டுக்கு ஏற்ப மொழி, இனமான விவேக அரசியல் களத்தில் வாக்குகளை கோட்டை விடாமல் நாமும் கோட்டைகள் கட்ட வேண்டும்.

வெறும் வக்கலத்து அரசியல் செய்யாமல் பல்லின மலேசிய அரசியலில் பொன் முட்டைகள் போட முன்வர வேண்டும்.

நாட்டில் தமிழர்களின் வாக்குகள் குறைவாக இருந்தாலும், அந்த குறைந்த எண்கள் வித்தியாசத்தில்தான் கடந்த கால வேட்பாளர்கள் வென்றுள்ளார்கள் என்பது கடந்தக்கால தேர்தல் வரலாற்று ஆய்வாகும்.

2011-களில் முன்னாள் பிரதமர் நஜீப் அவர்கள் மலேசிய இந்தியர்களை 9 பிரிவினர்களாக பிரித்தார்.

தமிழர்களை இந்திய தமிழர்கள் என தவறான சொல்லில் சுட்டினார். இப்போது 4 அல்லது 5வது பரம்பரையில் மலேசியப் பாரம்பரையத்தில் மலேசித்தமிழர்காளாக் வாழ்கிறோம் என்பதுதான் சத்தியம்.

அதிகக் குறைவாகவுள்ள மலேசிய இந்து இந்தியர்கள் 80% வேட்பாளர்களாகிறார்கள் என்றால் யாருடைய கண்மூடித்தனம்?

நமது வாக்கில் வெற்றிக்குப்பின் இனபேத வித்தியாசத்தில் தமிழர்களின் அரசியல், அரசு,பொருளாதார மற்றும் கல்வி உரிமைகளில் இந்தியன் போர்வையில் தமிழர்களின் விகிதங்களை விழுங்கி விடுகிறர்ககள்.

தமிழர்களை எல்லாத்துறைகளிலும் மூழ்கடிக்கின்றனர் எனபதை நாம் காலம் கடந்தே உணரும் இனமாகிவிட்டோம்.

இந்த சதி நாச வேளைகளை அரசியல் ரீதியாக மாற்றான் திட்டமிட்டு செய்வது அரசியல் மேம்மட்ட சீன, மலாய்த் தலைவர்களுக்கும் தெரியாமலில்லை, சொன்னாலும் தெரியாதது போல முழிப்பார்கள்.
நாட்டில் இந்தியர்களை 9 தர இனமாக பிரித்து, ஊர் இரண்டுப்பட்டால் அரசியல் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது நஜீப் காலத்தில் நிதி ஒதுக்கீட்டில் இனம் மோசம் போய் இன்று வரை பேயாட்டம் ஓயவில்லை என்பது நிதர்சன உண்மையாகும்.

மலேசியத் தனித்தமிழர்களுக்கு, தலைவர்களுக்கு இது விளங்கினாலும் இந்தியன் ஓட்டு வியாபாரத்தில் வட்டிகள் போட்டு குட்டிகள் போட்டு முட்டைகள் தின்பதில் குட்டித்தலைவர்கள் மௌனிக்கிறார்கள்.

உரிமையில் வாழாத சலுகையில் வாழும் ஏமாளி இனமாக மலேசியத் தமிழ் இனம் இன்னலில் மூழ்கிக்கிடக்கிறது.

திட்டமிட்டு நடந்து, நகர்த்தி முடித்த செடிக், சீட், மித்தரா பொருளாதாரப் “பணச்சுருட்டல்” போரில் கூட தமிழர்களை காட்டிலும் இதர இந்தியர்கள் சுருட்டியதுதான் அதிகம் என்பேன்.

காரணம், 10 ஆண்டாக செடிக், தேசிய முன்னணி BN காலத்திலும் பிறகு பாக்காத்தான் அரப்பானின் மித்ரா காலத்திலும் கூட சாமார்த்திய சங்கங்களின் சாம்பவான்களான இதரவர்கள் கொள்ளையில் அள்ளிக் கொண்டார்கள் தமிழர்கள் கிள்ளிக்கொண்ட ஓடும் பிள்ளைகளாக ஓடினார்கள்.

இப்போது கணபதி ராவுக்கும் பொன் வேதமூர்த்திக்கும் நடக்கும் ஊடகப்போரில் அந்த ஆதன்களின் திருவிளையாடல்கள்தான் ஊஞ்சாலாடுகின்றன.

பொருளாதார பேய்த்தனத்தில்தான் அரசியல் ஓங்கார ஓசிகள் பிச்சை எடுக்கிறார்கள் என்பதால், ஒரு குறிப்பிற்கு அரசியல் பார்வையில் இக்கட்டுரையில் சம்பந்தமுள்ள சிக்கலை என் பேனாவால் குத்தி வைக்கிறேன்.

நன்றி,
பொன் ரங்கன்.
நாம் தமிழர் இயக்கம் மலேசியா