நம் இந்திய மக்கள் எதிர் நோக்கி கொண்டிருக்கும் அவலங்களுக்கு தீர்வு காண்பது யார்?

கோவிட்-19 நாட்டை உழுகிக்கிக் கொண்டிருக்கும் வேளையில் நாட்டு மக்கள் அதுவும் குறிப்பாக நம் இந்திய மக்கள் எதிர் நோக்கி கொண்டிருக்கும் அவலங்கள் எண்ணில் அடங்காதவையாக உள்ளது.

பொதுவாகவே வருமானம் இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிகப்படியாக செய்யக் கூடியது உணவு பொட்டலங்கள் வழங்குவதாகவே உள்ளது. இன்னும் எத்தனை நாட்களுக்கு உணவு பொட்டலங்களை மட்டும் வழங்கி கொண்டிருப்பது. இது மட்டும் தான் மக்கள் எதிர் நோக்கும் பிறச்சனையா வேறு பிறச்சனையே இல்லையா?

நிறைய இந்திய குடும்பங்களில் இணையம் வழி கல்வி கற்க வசதி  கூட இல்லாமல் கல்வி கற்கும் அடிப்படை உரிமையை இழந்து தவிக்கும் மாணவர்களுக்கு யார் பொறுப்பு?

வீட்டு வாடகை செலுத்த முடியாமல், மின்சார கட்டணம், நீர் கட்டணம்,  வங்கி கடன் என்று பல பிரச்சனைகளில் மாட்டி தவிக்கும் மக்களுக்கு உணவு பொட்டலம் மட்டும் போதுமா?

இந்திய மக்களுக்காக அரசாங்கம் ஒதுக்கிய 100 மில்லியன் இத்த கால சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு பயன்படுத்த முடியாதா? பல புலன தலங்களில் பொது மக்கள் 100 மில்லியன் என்னவானது என்ற  கேள்வியை தொடர்ந்து முன் வைத்து வருகின்றனர்.

ஆனால் அவர்களுடைய நியாயமான கேள்விக்கு யாரும் பொறுப்புடன் பதில்     சொன்னதாக தெரியாவில்லை?

100 மில்லியன் என்பது மக்களுடைய வரி பணம் என்பதை நாம் மறந்து விட கூடாது. கேள்வி கேட்கும் எல்லா உரிமைகளும் அவர்களுக்கு உண்டு. அதே வேளையில் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் சம்பந்த பட்டவர்களுக்கு உண்டு என்பதை வழியுறுத்த விரும்கிறேன்.

மித்ரா மாணியம் குறிப்பட்ட ஒரு சில தொகுதிகளுக்கு மட்டும் செலவழிக்க படுவதாகவும் தகவல்கள் கசிந்த வண்ணம் உள்ளது. இது உண்மையா என்பதை அறிந்து கொள்ள ஒவ்வொரு மலேசியர்களுக்கும் உரிமை உள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

குறிப்பிட்ட தொகுதிகளுக்கு மட்டும் 100 மில்லியன் மாணியம் செலவிடப்படுவது உண்மை என்றால் இதை விட பெரிய துரோகத்தை மலேசிய இந்தியர்களுக்கு செய்து விட முடியாது.

தற்போதய சூழ்நிலையில் உணவு பொட்டலம் மட்டுமே தீர்வு என்று அதை மட்டுமே விநியோகம் செய்யாமல், மக்கள் எதிர்நோக்கும் மற்ற முக்கிய பிரச்சனைகளுக்கும் அரசாங்க நிலையிலான தீர்வுகளை காண தலைவர்கள் முற்பட வேண்டும்.

கோவீட்-19 மரணங்கள் ஒரு புரம் இனி வாழ வழி இல்லை என்று தற்கொலைகள் மறு புரம். இதை எல்லாம் பார்த்து கொண்டும் ஒன்றுமே நடக்காது போல் அரசாங்கம் கண்டும் காணாதது போல் இருப்பது எந்த வகையில் நியாயம்?

இதற்கெல்லாம் தீர்வு காண போவது யார்? எதிர்க்கட்சியில் இருக்கும் நாங்களா, இல்லை அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர்களா?

தடுப்பூசி வரை லஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. தேசிய பேரிடர் காலத்தில் கூட மக்களுக்கு முக்கியத்துவம் வழங்காமல், அவரவர் அரசியல் லாபததிற்காக ஆமாம் சாமி போடுவது கேவலம். மக்கள் படும் பாட்டை உணர்ந்து அவர்களில் துயரத்தை சிறிதேனும் குறைக்க 100 மில்லியன் பயன்படுத்துவதுதான் சிறந்தது.

காமாட்சி துரைராசு

சபாய் சட்டமன்ற உறுப்பினர்

உதவி தலைவர் ஜ.செ.க பகாங்