நாடாளுமன்ற உறுப்பினர்களை வாங்கும் படலம் உடனடியாக  நிறுத்தப்பட வேண்டும்! –  குலசேகரன்

“நானும் என்னுடைய  அரசியல் செயலாளர் ஜெரமி சுவாவும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால்  நான் கொடுத்த புகாரின் பேரில்   விசாரண நடத்தப்பட வேண்டி அழைக்கப்பட்டிருந்தோம்.  ஜெரமியுடன் ஊழல் தடுப்பு ஆணையம்  4 மணி நேரம் விசாரணை நடத்தியது. அவருடைய  கைத்தொலைபேசியும்  ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டது.நான் ஒரு மணி நேர  விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன் . அப்பொழுது  இந்த  புகாரவை  தீவிரமாக  விசாரிக்க வேண்டுமென  அந்த ஆணையத்தைக் கேட்டுக் கொண்டேன். பணம் கொடுத்து  நாடாளுமன்ற  உறுப்பினர்களை  விலை பேசுவது  ஜனநாயகத்தை  படுகொலை  செய்வதற்கு சமமாகும் என்பதால் இதன் முக்கியத்துவத்தை ஆணையிடம் எடுத்துக்  கூறினேன்”, என்கிறார் இந்த முன்னாள் மனிதவள துறை அமைச்சர்.

இவரின் முழுயான செய்தி வருமாறு:

“பணம் , பதவி மற்ற சலுக்கைகள்  இவற்றை கொடுத்து  நாடாளுமன்ற  உறுப்பினர்களை பெரிக்காத்தான் அரசுக்கு ஆதரவு  கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி  முஹியாடின் ஆட்சியை  தக்க வைக்க கடுமையான சதி ஒன்று  தீட்டப்பட்டுள்ளது என்பது  மட்டும் தெளிவாக  தெரிகிறது.

இந்தச் சதித் திட்டம்  வெற்றிபெறுமானால், இது நாட்டிற்கு  பேரழிவை ஏற்படுத்தும் என்பது மட்டும் உண்மை.. இதன் பின்னால் இருந்து  செயல்படும் அந்த  மர்மக் கைகள்  உடனடியாக அடையாளம் கண்டு  தக்க நடவடிக்கை எடுக்கவில்லையென்றால்  நாடு  திவாலாகும் நிலைமைக்கு  வந்துவிடும். அந்த மர்மக் கைகள் யாருடையது அதை யார்  பின்னாலில்  இருந்து இயக்குகிறார்கள என்பதை   கண்டுப்பிடிக்க வேண்டியதுதான் இப்பொழுதைய  முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கவேண்டும் .ஊழல் தடுப்பு ஆணையம் ஒன்றே இதனை முழுமையாக  செய்ய முடியும் என்று  நான் நம்புகிறேன்.

இது போன்ற  ஊழல்கள் உடனடியாக  தடுத்து நிறுத்தப்பாடவெனில்  அது நம் நாட்டிற்கும் நாம் கடைபிடிக்கும் முறைமைக்கும் கேடு விளைவிக்கும். வெளிநாட்டு  முதலீட்டாளர்கள்  மலேசியாவில்  முதலீடு செய்யத் தயங்குவார்கள., பங்குச் சந்தையில்  வெளிநாட்டு பணம் முதலீடு செய்வதில் தடை ஏற்படும் , மக்கள் அரசாங்கத்தின்  மீது நம்பிக்கை இழப்பார்கள. அரசாங்கம் போடும் திடங்களையும்  ,ஆலோசனைகளையும் மக்கள் ஏற்க தயங்குவார்கள். சட்ட ஒழுங்கு  சீர்குலையும், வெளி நாட்டு உதவிகள்  நின்று போகும். இவை அனைத்துமே  நிஜமாகவே  நடை பெறக்கூடிய சாத்தியங்கள் உள்ளன .இன்றைய நாளில்   இந்த வட்டரத்திலேயே  மலிவான நாணயமாக    ரிங்கிட்   கருதப்படுகிறது என்பது மேலும் இதனை உறுதிப்படுத்துகின்றது.

இது வரையில்  டி ஏ பி கட்சியில் இருந்தும் , கெடிலான் கட்சியில் இருந்தும்  தலா ஐவருக்கு இந்த   மில்லியன் ரிங்கிட் பெறுமான   பேரங்கள் பேசப்பட்டுள்ளன. நிச்சயமாக இவை எல்லாம் பெரிக்கத்தான் அரசாங்கத்திற்கு ஆதரவு தரவேண்டும் என்ற கட்டாயத்துடனேயே  நடை பெற்ற பேரங்கள்.

இவர்களைத் தவிர்த்து மற்ற  நாடாளுமன்ற  உறுப்பினர்களிடமும்  பேரங்கள் பேசப்பட்டிருக்கும் என்று நான் நம்புகிறேன் .இவர்கள் வெளியில் வந்து அது குறித்து பேசாததற்கு  பல காரணங்கள்  இருக்கலாம். இது போன்று பேரம் பேசி ஊழலில் ஈடுபடுபவர்கள்  , புற்று நோய்க்கு  ஒப்பானவர்கள. இது இன்னும் ஆழமாக  புரையோடுமுன்னே  இவர்களை  ஒழிக்க வேண்டும். நடப்பு  பெரிக்காத்தான் அரசாங்கத்திற்கு இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க அரசியல் தைரியம்  இருகின்றதா என்று அறிய  விரும்புகின்றன் . மலேசிய  உழல் தடுப்பு ஆணையம் இதனை  வேரோடு  களையெடுக்க தகுந்த நடவடிக்கைகளை  விரைந்து எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.”

மு.குலசேகரன், ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர்,தேசிய உதவித் தலைவர் ஜனநாயக செயல் கட்சி