மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவையின் ஏற்பாட்டில், இரண்டாம் தமிழ்ச்சமய மாநாடு 2021, வருகிற 26.09.2021, ஞாயிற்றுக்கிழமை, காலை 9.00 மணிக்கு, இயங்கலை வழியாக (முகநூல் : தமிழ்ச்சமய பேரவை மலேசியா & வலையொளி : மலேசியத் தமிழ்ச்சமயம் பேரவை) எனும் முகவரி நேரலையில் நடைபெறவுள்ளது.
இம்மாநாட்டில், மலேசியத் தமிழர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டுமென மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த தமிழன் முனியாண்டி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழால், தமிழரால் மெய்யியல் கண்டு, உலக இயற்கையையும் அறிவியலையும் உணர்ந்து, பகுத்து, வகுத்து, எடுத்து, அமைத்து வைத்த, தமிழ்ச்சமயத்தின் உயர்ந்த வாழ்வியல் வழிமுறைகள், பண்பட்ட நெறிமுறைகள் மற்றும் தமிழர்களுக்கே உரிய உன்னத மரபுகளை நமது முன்னவர்கள், மூதாதையர்களால் கடைபிடித்து கற்பிக்கப் பட்டதை, வழி வழியே காத்து பற்றி அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்ல வேண்டிய தார்மீகக் கடமையில் மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவை களம் கண்டு வருகிறது.
அவ்வகையில் அறிவில் சிறந்த, இயற்கையில் இணைந்த, மெய்யறிவு பரந்த, இறைஞானம் நிறைந்த, தூய மாந்தநேயமும் ஆன்மநேயமும் அமைந்த தமிழ்ச் சமயத்தை காத்து, எங்கும் தமிழ்… எதிலும் தமிழ்… எல்லாவற்றிலும் தமிழ்… எனும் தமிழில் வழிபாடு என தமிழ்ச்சமயத் தொன்மையைப் பறைசாற்றுவதோடு, உலகலாவிய தமிழ்ச்சமயம் எனும் கருப்பொருளில் இம்மாநாடு அனைத்திற்கும் அறனாக நிற்கும்…
இம்மாநாட்டிற்குச் சிறப்பு அழைப்பாக, தமிழ் நாடு கோவை பேரூராதீனத்தின் கயிலைப்புனிதர் திருப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார், தமிழ்த் தேசிய பேரியக்கம் மற்றும் தெய்வத் தமிழ் பேரவை தலைவர் தமிழ் பேராசான் பெ.மணியரசனார், மலேசிய முதன்மை தமிழியல் பேரறிஞர் தமிழ்திரு இர.திருச்செல்வனார் மற்றும் மலேசிய சைவ நற்பணிக் கழக தலைவர் திருமறை செம்மல் ந.தர்மலிங்கனார் ஆகியோர் பேருரையுடன் சமய நிகழ்ச்சிகளும் மாநாட்டில் இடம்பெறும்.
எனவே, இலவசமாக நடைபெறவிருக்கும் இயங்கலை வழி தமிழ்ச்சமய மாநாட்டிற்கு நாட்டிலுள்ள தமிழர் தேசிய இயக்கங்கள், சங்கங்கள், அமைப்புகள், தமிழ்ச் சமய ஆர்வலர்கள், பற்றாளர்கள் மற்றும் உலகத் தாய் உறவுகள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம் என மலேசியத் தமிழ்ச்சமயப் பேரவையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு ஆனந்த தமிழன் முனியாண்டி கேட்டுக்கொண்டார்.
தமிழ்ச்சமயம் ஏற்போம்..!
தமிழ்ச்சமயம் காப்போம்..!
முகநூல் இணைப்பு :-
வலையொளி இணைப்பு :- https://youtu.be/w4vpyfYIUlo
நேரம் : –
மலேசியா – 9.00 காலை
இந்தியா – 6.30 காலை
இலங்கை – 7.00 காலை
அமெரிக்கா – 9.00 இரவு
ஆசுரோலியா – 11.00காலை
கனடா – 9.00 இரவு
இங்கிலாந்து – 2.00 அதிகாலை
தொடர்புக்கு :-
மு ஆனந்த தமிழன் (+6590370527) , வீ பாலமுருகன் (+60143099379)