“நான் அறிந்த பெரியார்” – நேரலை நிகழ்ச்சி

மலேசியாவில் இயங்கிவரும் பெரியாரிய இயக்கங்களின் கூட்டமைப்பினைச் சார்ந்த இளைஞர்களின் ஏற்பாட்டில், தந்தை பெரியாரின் 143-வது பிறந்தநாளையும், சமூக நீதி நாளையும் முன்னிட்டு, “நான் அறிந்த பெரியார்” எனும் கருப்பொருளோடு, எதிர்வரும் 10 அக்தோபர் 2021, இரவு 8 மணி அளவில் முகநூல் நேரலையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்துகொள்ளவிருக்கின்றனர். மலேசியத் திராவிடர் இயக்கக் கூட்டமைப்பினைச் சார்ந்த இளைஞர்கள் மட்டுமின்றி, பல்கலைக்கழக மாணவர்கள், தொழில் முனைவர்கள், பொது மக்கள் என நாடெங்குமுள்ள, பெரியாரியல் கொள்கையால் ஈர்க்கப்பட்ட இளைஞர்களே இந்நிகழ்ச்சியில் பங்கெடுப்பர்.

ஒவ்வொருவரும் ஏறத்தாழ 3 நிமிடங்களில், தங்களின் படைப்புகளை, பேச்சாகவோ, கவிதையாகவோ வழங்குவர். மலேசிய மண்ணில், இளைஞர்கள் மத்தியில் பெரியார் இன்னும் வாழ்கிறார், இனியும் வாழ்வார் என்பதை உலகறியச் செய்வதோடு, பெரியாரியலினைப் பொது மக்களிடம் கொண்டு சேர்க்கப்பட வேண்டிய கடப்பாட்டினை உணர்ந்து இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியை, fb.com/myperiyar கருஞ்சட்டை இளைஞர் படை எனும் முகநூல் பக்கத்தில் நேரலையில் பார்க்கலாம்.

நிகழ்ச்சி குறித்த மேல் விவரங்களை அறிந்து கொள்ள, தோழர் ச.நாகேந்திரன் +60165910564, தோழர் ப.தமிழ் இனியன் +60124341474 என்ற எண்ணோடு தொடர்பு கொள்ளவும்.