புதிய கோவிட்-19 நேர்வுகள் 6,000-ஐ தாண்டின

புதிய நேர்மறை கோவிட் -19 நேர்வுகள் 6,000 -ஐத் தாண்டியுள்ளன.

நேற்று 5,403 நேர்வுகளுடன் ஒப்பிடும்போது, இன்று பிற்பகல் நிலவரப்படி மொத்தம் 6,243 நேர்வுகள் பதிவாகியுள்ளன.

நவம்பர் 7, ஞாயிற்றுக்கிழமை, புதிய கோவிட் -19 நேர்வுகளின் எண்ணிக்கை 4,343, மே 16 முதல் 175 நாட்களில் குறைந்த எண்ணிக்கையிலான பதிவு ஆகும்.

சுகாதாரத் தலைமை இயக்குநர், டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா, முகநூல் பதிவில், சமீபத்திய வளர்ச்சி கடந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் தொற்று கண்டறியப்பட்டதில் இருந்து தற்போது மொத்த எண்ணிக்கையிலான நேர்வுகளின் எண்ணிக்கையை 2,522,498 -ஆகக் கொண்டு வந்துள்ளது என்றார்.