மாட் சாபு : மலாக்கா முன்னாள் ஆளுநரின் ஆதரவு பிஎச்-க்கு நம்பிக்கை அளிக்கிறது

மலாக்கா பிஆர்என் | பக்காத்தான் ஹராப்பான் (பிஎச்) வேட்பாளருடன், முன்னாள் மலாக்கா யாங் டி-பெர்த்துவா நெகிரி முகமட் கலீல் யாகோப்பின் வருகை, அக்கூட்டணிக்குச் சாதகமான விஷயம் என்று அமானா தலைவர் முகமட் சாபு விவரித்தார்.

பாலாய் நெலாயான் தஞ்சோங் தாஹான், கோலா லிங்கி உள்ளிட்ட பிஎச் பிரச்சாரத்தில் முகமட் கலீலின் வருகை, இந்தச் சனிக்கிழமை வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக பிஎச் வேட்பாளர்களுக்கு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாக முகமட் கூறினார்.

முகமது கலீலின் ஆதரவு மறைமுகமாக பிஎச் மற்றும் அட்லி ஜஹாரி மீண்டும் மாநில அரசாங்கத்தை வழிநடத்த வழிவகுக்கிறது என்று அவர் தெரிவித்தார்.

“துன் ஆதரவுடன், மலாக்கா பிஆர்என் -ஐ பிஎச் வெல்லும்; அட்லி மீண்டும் முதலமைச்சராக வருவார் என்று நாங்கள் நம்புகிறோம்,” என்று முகமட் இன்று தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார்.