SPM தேர்வில் சினிமா நடிகர் சிவக்குமாரின் குடும்பத்தைப் பற்றி கேள்வி கேட்கும் அளவிற்கு, சினிமா அவ்வளவு முக்கியமாக மலேசிய தேர்வு ஆணையத்திற்கும் தென்படுகிறதோ? என்று தைப்பிங்கைச் சேர்ந்த திரு.சின்னப்பன் என்பர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த ஆண்டு SPM தமிழ் மொழி கேள்வித்தாள் இரண்டில், பக்கம் 8-ல் இப்படியொரு அவலம் நிகழ்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
“மலேசியாவில் எத்தனையோ இந்திய தலைவர்களும் சாதனையாளர்களும் இருக்கும்போது இந்தியாவில் இருக்கும் ஒரு சினிமா நடிகரின் குடும்பத்தைப் பற்றி கேள்வி கேற்கும் அவசியம் என்ன? அதற்கு பதிலாக அமரர் துன் சம்பந்தன், சிம்மக்குரலோன் திரு.பட்டு, மக்கள் தொண்டன் வி.டேவிட் மற்றும் அணைத்துலக கராத்தே போட்டிகளில் பதக்கங்களை வாரிக் குவிக்கும் பொன்னையா/அறிவழகன் குழுவினரப் பற்றி கேள்வி கேட்டிருக்கலாமே,” என்றார் சின்னப்பன்.
“மலேசிய தேர்வு ஆணையத்தின் இச்செயல் மிகவும் வருத்தத்திற்குறியது. எதிர்காலத்தில்
இதுபோன்ற தவறுகளை மலேசிய தேர்வு ஆணையம் செய்யக் கூடாது” என்று புக்கிட் கந்தாங் மக்கள் நீதிக் கட்சியின் இந்திய பிரிவின் ஒருங்கிணப்பாளருமான திரு.சின்னப்பன் மலேசிய தேர்வு ஆணையத்திற்கு அறிவுறுத்தியுள்ளார்.