அரசாங்கம் – முதலாளி பேச்சுவார்த்தை, குறைந்தபட்ச சம்பளம் RM1,500!

அரசாங்கம் குறைந்தபட்ச சம்பளமாக RM1,500 நிர்ணக்க முதலாளிகளுடன் பேசி வருகிறது அது இயலும் என்கிறார் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப்.

இந்த நோக்கத்திற்காக, மனித வள அமைச்சு, பொதுச் சேவையில் உள்ள ஊழியர்களின் சங்கங்கள் (Cuepacs) மற்றும் முதலாளிகள் உட்பட சம்பந்தப்பட்ட சங்கங்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி வருகிறது.

இந்த குறைந்தபட்ச சம்பளத்தில் நாங்கள் அனைத்து முதலாளிகளையும் ஈடுபடுத்துகிறோம், இதை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் உள்ளன, ஆனால் மிகவும் சிறிய அளவிலாளன நிறுவனங்களால் ஏற்க இயலாத சூழலில் அவர்கள் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்வார்கள். இதனால் வேலையின்மை எண்ணிக்கை அதிகரிக்கும்.

“நாங்கள் முதலாளிகளைப் பாதுகாக்கவில்லை, எங்கள் நலன் ஊழியர்களே… பணியாளர்களுக்கு குறைந்தபட்ச சம்பளம் ரிம1,500 ஆக உயர்த்தினால் அதுவே சிறந்தது” என்று JaminKerja Keluarga Malaysia Career Carnival 2022 தொடங்கிய பின்னர் செய்தியாளர்களிடம்  கூறினார் பிரதமர்.

புதிய குறைந்தபட்ச சம்பளம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்பு, முதலாளிகளுடன் நடத்திய விவாதங்களின் முடிவுகளை அமைச்சரவையிடம் மனித வள அமைச்சு முன்வைக்கும் என்று அவர் கூறினார்.

தற்போதைய வாழ்க்கைச் செலவு குறித்து அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது, ஆனால் அதே நேரத்தில் புதிய குறைந்தபட்ச சம்பளத்தை அமல்படுத்துவது தொடர்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) மற்றும் குறுந்தொழில் நிறுவனங்கள் சிரமங்களை எதிர்கொள்வதை விரும்பவில்லை என்றும் பிரதமர் கூறினார்.

“ஊழியர்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம், ஆனால் முதலாளிகளால் அவர்களின் சம்பளத்தை வழங்க இயலாவிடில் அவர்களை பணிநீக்கம் செய்வர். எனவே ஒட்டுமொத்த பரிசீலனைகள், கேட்க விரும்புகிறோம்,” என்று அவர் கூறினார்

மனிதவளத்துறை அமைச்சர் எம்.சரவணன் சமீபத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்த ஆண்டு இறுதிக்குள் புதிய குறைந்தபட்ச சம்பளம் RM1,500 அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

தற்போதைய குறைந்தபட்ச சம்பளம் RM1,200 ஆகும்.