நீதி மன்றக் கூட்டம் மற்றும் 1எம்டிபி – இவை ஜோகூர் வாக்குகளை தீர்மானிக்குமா?

ஜோகூர் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் பதின்மூன்று நாட்களாக, மாநில அரசாங்கத்தை அமைக்க மற்றும் சில இடங்களில் வெற்றி பெற பல்வேறு கட்சிகள் போட்டியிடுகின்றன, இன்று நள்ளிரவில் பிரச்சாரம் முடிவடைவதால் இறுதி விறுவிறுப்பை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் தனித்து நிற்கும் ஒரு விஷயம் என்னவென்றால், எத்தனை கட்சிகள் பிளவு பட்டிருந்தாலும், பாரிசான் நேசனலுக்கு (பிஎன்) எதிராக ஓரளவிற்கு அணிதிரண்டு உள்ளன, BN-க்கு வாக்களிப்பது “நீதிமன்றக் கூட்டத்தை” ஆதரிப்பது போன்ற கருத்துக்களை முன்வைக்கிறது. நீதி மன்றக்கூட்டம் என்பது ஊழல் சார்பாக வழக்குகளை எதிர் நோக்கும் குறிப்பாக அம்னோ அரசியல் வாதிகளை குறிப்பிடுகிறது.

“நீதிமன்ற கூட்டம் ” என்பது நஜிப் ரசாக் மற்றும் கட்சியின் தலைவர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி உள்ளிட்ட முக்கிய அம்னோ தலைவர்களைக் குறிக்கிறது, அவர்கள் குற்றவியல் நம்பிக்கை மீறல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளில் விசாரணை, மற்றும் தண்டனை பெற்றுள்ளனர்.

பக்காத்தான் ஹராப்பான் (PH) தலைவர் அன்வர் இப்ராஹிம், பெரிகாத்தான் நேஷனல் (PN) தலைவர் முஹ்யிதின் யாசின் மற்றும் பெஜுவாங் தலைவர் டாக்டர் மகாதீர் முகமது ஆகியோரிடம் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும்,பிரச்சாரப் பாதையில் 1எம்டிபி அல்லது நஜிப்பின் குற்றங்களை முன்வைத்தனர், மேலும் பெக்கான் எம்.பி.யுடன் வாணிபம் செய்தனர்.

பிரச்சார கூட்டங்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் “சாதாரண” நிகழ்ச்சிகள் திரும்பத் திரும்பக் கூறப்படும் இந்தக் கதை, பிஎன் தலைவர்களின் உற்சாகத்தைக் குறைக்கவில்லை, ஜாஹித் மற்றும் நஜிப் அடிக்கடி மாநிலத்திற்கு பிரச்சாரம் செய்ய வந்துள்ளனர்.நஜிப், SRC இன்டர்நேஷனல் வழக்கில் அவர் மேல்முறையீடு செய்துள்ள வழக்கில் தண்டனை பெற்றிருந்தாலும், அவர் பிரச்சாரம் செய்த இடங்களிலெல்லாம், சீன சமூகத்தினரையும்,கூட்டங்களுக்கு ஈர்த்துள்ளார்.

2018 இல் பக்காத்தான் ஹராப்பான் வெற்றிக்கு பங்களித்த முக்கிய காரணிகளில் ஒன்றான 1MDB ஊழல் – ஜோகூர் மக்களை பாதிக்கும் பிரச்சனைகளில் இனி முன்னணியில் இல்லை என்று பல ஜோகூர் மக்கள் FMTயிடம் தெரிவித்தனர்.

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் அதிக வருமானத்தை ஈட்ட வேண்டிய அவசியம் போன்ற அவசர பிரச்சினைகளில்,தற்பொழுது அவர்கள் அதிக அக்கறை கொண்டுள்ளனர்.

1எம்டிபி தொடர்பான மற்ற தரப்பினரின் விவரிப்புகள் அவரிடம் எதிரொலிக்கின்றனவா என்று கேட்டபோது, “இது எனக்கு 50 விழுக்காடு  மட்டுமே பொருந்தும்” என்று ஜமாலுடின் எம்.டி நோர் கூறினார்.

PH நிர்வாகத்தின் 22 மாத கால ஆட்சியில் ஏமாற்றத்தை மட்டுமே வெளிப்படுத்தியது, கட்சிகளும் அவற்றின் வேட்பாளர்களும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகவும் முக்கியம் என்று எம்.டி நோர் கூறினார்.

70 வயதான மோய் சோக் சாம், “நீதிமன்றக் கூட்டம்” சொல்லாட்சியைப் பற்றி அறியாதவராக தோன்றினார், எந்தக் கட்சி அரசாங்கத்தை அமைத்தாலும் அவரைப் போன்ற குறைந்த வருமானம் பெறுபவர்களின் இக்கட்டான நிலை நீடிக்கிறது என்று அவர் புலம்பினார். நான் விரும்புவதெல்லாம், மக்கள் சமமாக நடத்தப்படுவதை உறுதிசெய்யும் நியாயமான அரசாங்கத்தை மட்டும் என்று கூறினார்

அகாடமி நுசாந்தராவின் அரசியல் ஆய்வாளர் அஸ்மி ஹாசன், கடந்த நவம்பரில் மேலாக்காவில் பிஎன் வெற்றியைத் தடுக்கத் தவறியது போல், ஜொகூரில் “நீதிமன்ற கிளஸ்டர் உத்தி” பலனளிப்பதைக் காணவில்லை என்று கூறுகிறார்.

அவர் FMT-யிடம் நஜிப் எங்கு சென்றாலும் கிடைத்த பதிலே இதற்கு சான்றாகும், வேலியில் அமர்வர்களுக்கு கூட இந்த கதையை பற்றி தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்று அஸ்மி கூறினார்.

சிங்கப்பூருடனான எல்லைகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்ற தனது தொடர்ச்சியான உந்துதலை அடிப்படையாகக் கொண்டு, ஜொகூருக்கு முதலிடம் கொடுக்கும் ஒரு தலைவரின் பேராற்றலைக் கொண்டிருப்பதால், பிஎன் இன் மந்திரி பெசார் வேட்பாளர் ஹஸ்னி முகமது கூட்டணியின் முக்கிய இழுக்கும் காரணிகளில் ஒருவர் என்றும் அஸ்மி கூறினார்.

ஜோகூரில் உள்ள 20க்கும் மேற்பட்ட மாநிலத் தொகுதிகளில் ஃபெல்டா குடியேறியவர்கள் இருப்பதால், கடந்த வாரம் ஹஸ்னி,மந்திரி பெசார் அறிவித்த இரண்டாம் தலைமுறை ஃபெல்டா குடியேறிகளுக்கு ஒதுக்கப்பட்ட 3,200 நிலங்கள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அஸ்மி கூறினார்.

யுனிவர்சிட்டி செயின்ஸ் மலேசியாவின் அஹ்மத் ஃபௌசி அப்துல் ஹமிட் பிஎன் ஆதரவின் மீதான “நீதிமன்ற கூட்டம்” தாக்குதல்களின் செயல்திறன் குறித்து இதேபோன்ற உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஹஸ்னி தனது குறுகிய காலத்தில் மாநிலத்தை வழிநடத்திச் சென்றதில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் சமமான நிதியை ஒதுக்குவதற்கான முடிவு உட்பட சில சாதனைகளைப் படைத்துள்ளார் என்று ஃபௌஸி கூறினார்.

“இது ஒட்டுமொத்தமாக ஜோகூர் மக்களிடையே ஒரு நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றது, ஏனெனில் இது பிரிப்பதற்குப் பதிலாக ஒன்று படுத்துகிறது. நாடு பல்வேறு பிரச்சினைகளால் சூழப்பட்டிருக்கும் கடினமான காலங்களில், எங்களுக்கு பிளவுபடுத்தும் அரசியல் தேவை இல்லை”.

முடிவில் பிஎன் ஆதரவு வாக்குகளாக மாறுகிறதா என்பது முற்றிலும் வேறு விஷயம். நாளை இரவு ஜோகூர் மக்கள் வாக்களிக்க சென்ற பிறகு இது தெரியவரும்.

  • -freemalaysiatoday