ஜோகூரில் பாரிசான் நேஷனல் எதிர்பார்ப்பை மீறி வெற்றி-பிரதமர்

நடந்து முடிந்த 15வது ஜோகூர் மாநில தேர்தலில் போட்டியிட்ட 56 இடங்களில் 40 இடங்களை கைப்பற்றியபோது, பாரிசான் நேசனல்  எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்பட்டது என்று பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

அதிகபட்சமாக 35 இடங்கள் என்ற தனிப்பெரும்பான்மையுடன் மட்டுமே பிஎன் வெற்றி பெறும் என்று பலர் எதிர்பார்த்ததாக அம்னோ துணைத் தலைவரான இஸ்மாயில் கூறினார்.

“ஜோகூர் வாக்கெடுப்பில்  வெற்றி பெற்றது பெரிய எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டது.

“மக்கள் இப்போது ஒரு ஒப்பீடு செய்யக்கூடிய நிலையில் இருப்பதாக நான் நம்புகிறேன், என்று பிரதமர் இஸ்மாயில் கூறினார்.

“நாட்டை 60 ஆண்டுகளாக பிஎன் ஆட்சி செய்ததால்,பிஎன் பலவீனங்களை மக்களால் பார்க்க முடிந்தது. அதனால் அவர்களால் மற்ற ஆட்சியுடன் ஒப்பிட முடியவில்லை”,என்று அவர் இன்று தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக்கில் ஒரு பதிவில் கூறினார்.

14வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE14), ஆட்சி அமைக்க வாய்ப்பு வழங்கப்பட்ட போதிலும், “மற்ற கட்சி” அதன் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறி விட்டது என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர், என்று அவர் கூறினார்.

“எது சிறந்தது என்பதை மக்களால் மதிப்பிட முடியும்,பிஎன் மக்கள் மீது அக்கறை கொண்டுள்ளது மற்றும் அவர்களுக்கு உதவுகிறது என்பது இதிலிருந்து நிரூபிக்கப்பட்டுள்ளது.

“இதனால்தான் நாங்கள் மலாக்கவிலும் வெற்றி பெற்றோம். இம்முறை ஜோகூர் தேர்தலில் மக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர், என்று பிரதமர் இஸ்மாயில் கூறினார்.

“மாநிலத்தை வழிநடத்த, பிஎன் மீது நம்பிக்கை வைத்ததற்காக ஜோகூர் வாக்காளர்களுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.”

அம்னோ மற்றும் பிற பிஎன் கூட்டு கட்சிகளின் தலைமைக்கும், பிஎன் வெற்றிக்குக் காரணமான அவர்களின் கடின உழைப்புக்கும் கட்சி பணி குழுவினருக்கும் தனது நன்றிகளை தெரிவிப்பதாக பிரதமர் இஸ்மாயில்  தெரிவித்தார்.

ஜோகூர் மக்கள் முடிவு செய்துவிட்டனர். அனைத்து தரப்பினரும் அதை மனதார ஏற்றுக் கொண்டு, இப்போது நடந்து முடிந்த போரை மறந்துவிட்டு, ஜோகூரை வளர்க்க ஒரு பெரிய மலேசிய குடும்பமாக ஒன்றிணைய வேண்டும், ”என்று அவர் கூறினார்.

ஜோகூரில் பிஎன் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையாக 40 இடங்களை வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது, பெரிகாட்டான் நேஷனல் வெறும் மூன்று இடங்களையும், பக்காத்தான் ஹராப்பான் 11 இடங்களையும், பிகேஆர் மற்றும் மூடா தலா ஒரு இடத்தையும் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

-freemalaysiatoday