சூரியா கேஎல்சிசி மாடியில் இருந்து விழுந்து இளம் பெண் உயிரிழந்தார்

கோலாலம்பூரில் உள்ள சூரியா கேஎல்சிசி வணிக வளாகங்கத்தில்   நேற்று முந்தினம் மாலை 23 வயது பெண் ஒருவர் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.

சிசிடிவி காட்சிகளில் அவர் விழும் முன் வணிக வளாகங்கத்தின் மத்திய  பகுதியியான 4வது தளத்தில் தனியாக நடந்து செல்வதைக் காட்டியுள்ளது  என்று, டாங் வாங்கி காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

வணிக வளாகங்கத்தில் ஒருவர் தவறி விழுந்து இறந்ததை சூர்யா கேஎல்சிசி நிர்வாகம் உறுதி செய்ததுள்ளது.

வணிக வளாகங்கத்தின் மேல் மட்டத்திலிருந்து விழுந்து ஒரு நபர் இறந்துவிட்டார் என்பதை மக்களுக்கு தெரிவிப்பது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது” இது ஒரு துரதிர்ஷ்டவசமான சம்பவம் என்பதை கேஎல்சிசி நிர்வாகம் உறுதிப்படுத்த வருந்துகிறது, என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அவர்கள் விசாரணை அதிகாரிகளுடன் நெருக்கமாக பணியாற்றி வருவதாகவும், அவர்களின் விசாரணையில் அவர்களுக்கு உதவ தேவையான அனைத்து ஆதாரங்களுக்கான அணுகலை அவர்களுக்கு வழங்குவதாகவும் சூரியா கேஎல்சிசி கூறியுள்ளது.

டாங் வாங்கி காவல் அதிகாரிகள்  விசாரணை நடத்தி வருவதை உறுதி செய்துள்ளனர்.

மன அழுத்தம், மன உளைச்சல் அல்லது உணர்ச்சிப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவர்களின் உதவியை நாட வேண்டும் அல்லது 03-7627 2929 என்ற எண்ணில் நண்பர்களை தொடர்பு கொள்ளவும்.

-FMT