I-25 என்ற இந்திய அமைப்புகளின் ஒன்றியம் பிரமரின் அறிவிப்பை வரவேற்கிறது

நேற்று (11.02.2023) மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்திய அரசியல் தலைவர்களுடனும் வணிகச் சமூகத்தினருடனும் சமய மற்றும் அரசு சாரா இயக்கங்களுடனான சந்திப்பு ஸ்ரீ பெர்டான, புத்ராஜெயாவில் நடைப்பெற்றது. அதில் அன்வார் வழங்கிய உரையில் இந்திய சமூக மேம்பாட்டுக்காக  அவர் வழங்கிய கருத்துக்களை i-25 ஒன்றியம் பெரிதும் வரவேற்கின்றது.

எவ்வகைப் பள்ளியாயிருப்பினும் சீர்கெட்ட நிலையிலிருக்கும் அனைத்துப் பள்ளிகளையும் எவ்வித வேறுபாடுமின்றி சீர்செய்யப்படும் என்பதனை வரவேற்கின்றது. இவ்வகையில், உடனடி சீரமைப்புக்கு  அடையாளம் கண்டுள்ள தமிழ்ப்பள்ளிகளின் பெயர் பட்டியலை தமிழ் அறவாரியம்  விரைவில் வழங்கும்.

அதோடு, தோட்டப்புறத்தில் வாழ்ந்த இந்தியர்களின் இடப் பெயர்ச்சியால், பல தமிழ்ப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளன. இப்பள்ளிகளை, இந்தியர்கள் மிகுதியாகக் குடியமர்ந்துள்ள, நகர் மற்றும் புறநகர் பகுதியில் இட மாற்றம் செய்யும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றது.

தேசியமொழியாகிய மலாய்மொழி, மற்றும் பிற மொழிகளான ஆங்கிலம், தமிழ் மற்றும் சீனம் ஆகிய மொழிகளை வளர்ப்பதோடு அதன் தரத்தையும் உயர்த்தும் எல்லா வகையான முயற்சிகளையும் வரவேற்கின்றது.

தொழிற்கல்வியை மேம்படுத்தும் முயற்சியில் தொழில் துறையினருடன் இணைந்து திட்டம் தீட்ட வேண்டும் என வளியுறுத்தினார். அதே வேளையில், தொழில் துறையினரின் ஆலோசனைகளையும் பெற்று, வேலை வாய்ப்புச் சந்தைகளை நிறைவு செய்யும் வகையில் கலைத்திட்டங்களை அமைய வேண்டும் எனும் பிரதமரின் கருத்தை i-25 ஒன்றியம் பெரிதும் வரவேற்கின்றது. அவ்வகையில், தொழில் கல்வியைத் தொடர விரும்பும் எல்லா மண்வர்களுக்கும் இவ்வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்துகின்றது.

 

மித்ரா மறுசீரமைக்கப்பட்டு தொடர்ந்து இந்திய சமுதாய மேன்பாடுக்கு செயலாற்றும் எனும் அறிவிப்பை இவ்வொன்றியம் முழு மனத்துடன் வரவேற்கின்றது.

பிரதமரின் இவ்வறிவிப்பை வறவேற்கும் அதே வேலையில் சமயம், கலை பண்பாடு, பொருளாதாரம், வறுமையொழிப்பு, வீட்டுடமை, சமூகம், இளைஞர், மகளீர், அரசு வேலை வாய்ப்பு மற்றும் அடையாள ஆவண, குடியுரிமை சிக்கல்கள் போன்ற கூறுகளையும் அலசி ஆறாந்து கவணிக்கப்பட வேண்டும் என (i-25) இந்திய அரசு சாரா இயக்கங்களின் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளரான எஸ்.பி. நாதன் கேட்டுக்கொண்டார்.