இந்தியர்கள் ஆதிக்கம் செலுத்தும் துறைகளில் ஆள் பற்றாக்குறைக்கு!  பிரதமர் விரைவில் தீர்வு காண்பார்

    நாட்டில்  இந்தியர்களின் ஆளுமையில் இருக்கும் 3 துறைகளில் ஆள்பற்றாக் குறை நிலவுவதை நாம் அறிவோம்.

முடி திருத்தும் துறை, ஜவுளித்துணிக்கடைகளில் ஆள்பற்றாக்குறை, நகைசெய்யும் தொழிலில் நிலவும் ஆள் பற்றாக் குறை என இம்மூன்று துறைகளுக்கும் ஆட்கள் வேண்டுமென்று அத்துறை சார்ந்த முதலாளி மார்கள் பலகாலமாக விண்ணப்பம் செய்து வந்துள்ளனர்.

இதனால் அத்துறைகளின் வாயிலாக கொணரப்படும்  பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது

2009க்கு முன்பு 5 துறைகள் முடக்கப்பட்டிருந்தன. நான் மனித வள அமைச்சராக இருந்த 22 மாத காலக்கட்டத்தில்  பாதிக்கப்பட்ட துறை சார்ந்த  பலருடன் பல முறை பேச்சி வார்த்தைகள் நடத்தினேன்.  அதன் பயனாக உலோக மறுசுழர்ச்சி துறைக்கு  முதலில் தற்காலிக  தீர்வு காணப்பட்டது. மற்ற துறைகளுக்கு  தீர்வு காணும் முன்பே ஆட்சி கலைக்கப்பட்டது.

அப்போதைய   உள்துறை அமைச்சர் டான் ஸ்ரீ முகிடினுடன் இது குறித்து பேச்சு வார்த்தை  நடத்த பல முறை முயன்ற போதும் அவர் மறுத்துவிட்டார்.

கடந்த இரண்டு வாரங்களாக இந்த பிரச்சனை மீண்டும் தலை தூக்கியிருப்பதால் நான் இதனை நேரடியாக  பிரதமர் அவர்களின் கவனித்திற்கு கொண்டு சென்றேன்.

கடந்த திங்கட்கிழமை நான் ,நமது பிரதமர் மாண்புமிகு டத்தோ ஸ்ரீ அன்வார் அவர்களை சென்று சந்தித்து இது குறித்து நீண்ட விளக்கமளித்தேன்.

பிரச்சனையைக் கேட்டறிந்த  பிரதமர் , நிச்சயமாக  இதற்கொரு  தீர்வு காண்படும்   என்ற உறுதிமொழியை வழங்கியுள்ளர் .

எல்லா மலேசியர்களும் சமமாக பயன் பெற வேண்டும் என்ற மலேசியா மதானி கொள்கைக்கேற்ப பிரதமர் அவர்கள் நமது கோரிக்கைகளுக்கு  செவி  சாய்ப்பார் என்று நம்புவோம்.

மு குலசேகரன்- ஈப்போ பாராட் எம் பி