விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனின் நிழல்படம் மற்றும் தமிழீழ தேசியச் சின்னங்களைக் கொண்ட தபால் முத்திரைகள் பிரான்ஸ் நாட்டின் தபால் அமைச்சின் அங்கீகாரத்துடன் வெளிவந்துள்ளன.
தலைவரின் படத்துடன் வெளிவந்துள்ள முத்திரைகளுடன் தமிழீழத் தேசியக்கொடி, தேசியப்பூ, தேசிய மிருகம், தேசியப் பறவை, தேசிய மரம் ஆகிய சின்னங்களைக் கொண்ட முத்திரைகளும் அடங்குகின்றன.
பிரான்ஸில் வசிக்கும் தமிழர்கள் கடிதங்களையும் பொதிகளையும் அனுப்புவதற்கு இந்த முத்திரைகளைப் பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.
இந்த முத்திரைகளைப் பயன்படுத்துவதன் மூலம் தமிழர் அடையாள சின்னங்களை உலகம் முழுவதும் சென்றடையவைத்து, தமிழினத்தின் பெருமையையும் வரலாற்றுச் சிறப்பையும் அழியாது காப்பது ஒவ்வொரு தமிழர்களினதும் வரலாற்றுக் கடமையாகும் என்கின்றனர் இவ் முத்திரை வெளியீடு காண்பதற்கு ஏற்பாடு செய்தவர்கள்.