SPM தேர்வில் 10,109 மாணவர்கள் அனைத்து பாடங்களிலும் A தேர்ச்சி பெற்றுள்ளனர்

சிஜில் பெலஜாரன் மலேசியா SPM தேர்வில்  மொத்தம் 10,109 மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் A+, A மற்றும் A- சிறந்த தரங்களைப் பெற்றுள்ளனர் என்று கல்வி இயக்குநர் ஜெனரல் பிகாருட்டின் கசாலி  தெரிவித்தார்.

2022 ஆம் ஆண்டுக்கான SPM தேர்வு முடிவுகளை இன்று அறிவித்த அவர், தேசிய சராசரி கிரேடு (GPN) மதிப்பெண் 4.74, முந்தைய ஆண்டின் 4.86 உடன் ஒப்பிடும்போது பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

குறைந்த GPN மதிப்பு சிறந்த சாதனையைக் குறிக்கிறது.

373,974 பேர் தேர்வெழுதினர். 75,322 பரீட்சார்த்திகள் அனைத்து பாடங்களுக்கும் குறைந்தபட்சம் C தரத்துடன் சராசரி முடிவுகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறினார்.

 

-fmt