மின்வணிக தளங்களில் விற்கப்படும் போலி சமையல் எண்ணெய் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம், நெகிழி பைகளில் விற்பனை செய்யப்படும் போலி 1-லிட்டர் சமையல் எண்ணெய் குறித்து மக்கள்  எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

சமூக ஊடகங்கள் அல்லது மின் வணிக தளங்கள் மூலம் சமையல் எண்ணெயை வாங்க முயற்சிக்கும் போது மோசடி செய்யப்பட்டதாகக் கூறும் நுவாகர்வோரிடம் இருந்து பல புகார்கள் கிடைத்துள்ளதாக அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சமையல் எண்ணெய் பைகள் மானிய விலையான 2 ரிங்கிட் 50 சென்-ஐ விட குறைவாக விற்கப்படுவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளை கண்காணிக்கவும், தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அமலாக்கப் பிரிவின் கீழ் ஒரு சிறப்புப் பிரிவை அமைத்துள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“மலிவான சமையல் எண்ணெய் வழங்கும் விளம்பரங்கள் மோசடிகளாக இருக்கலாம் என்பதால் நுகர்வோர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

“கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் மானியம் வழங்கப்படும் பொருட்களை தவறாகப் பயன்படுத்துவதில் ஈடுபட்டுள்ள எந்தவொரு தரப்பினருடனும் அமைச்சகம் சமரசம் செய்யாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

 

-fmt