தகாத நிதியுதவி இளைஞர்களின் சிந்தனையை பாதிக்கும் – கணேசன்

பள்ளி நிகழ்வுகளுக்கு மதுபானம்,புகையிலை, சூதாட்டம் நிறுவனங்களின் நிதியுதவி இளைஞர்களின் சிந்தனையை பாதிக்கும் என்கிறார் உரிமை கட்சியின் பகாங் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன். அவரது பதிவு:

மதுவிற்பனை, புகையிலை/சிகரெட் மற்றும் பல்வேறு விதமான சூதாட்டங்கள் மூலம் கிடைக்கும்  வருமானத்தின் ஒரு குறிப்பிட்ட தொகையை சில  நிறவணகள் பள்ளிகளுக்கு நிதியாக கொடுத்து உதவக் கூடாது என்ற கருத்து சமீபகாலமாக ஒரு பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது.ஆனால் அதே வேளையில் மற்றோன்றையும் பதிவு செய்ய விரும்புகிறேன்.

மேற்கண்ட வணிகம் வழி  கிடைக்கும் நிதியின் ஒரு பகுதியைப் பள்ளிகள் பெறுவதன் மூலமாக சூதாட்டம், புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்களின் அடையாள சின்னங்கள், பள்ளியில் அமர்ந்திருக்கும் இளைஞர்களின் சிந்தனையில் ஆதிக்கம் செலுத்தும் என்ற கருத்தை சில தரப்புகள் முன் வைக்கின்றனர் , ஆனால் அது மட்டுமே இளைஞர்களின் சிந்தனையை பாதிக்கிறதா என்பதையும் சற்று கவனத்தில் கொண்டு பார்ப்போம் !

நம் சமூகத்தில் நிறைய பெற்றோர்கள் பிள்ளைகள் முன்பு புகைபிடிப்பது, மது அருந்துவது, சூதாட்டம் போன்ற பழக்க  வழக்கங்களை கொண்டுள்ளனர். ஒரு குழந்தையின் சிந்தனை மாற்றதிக்கு மிக முக்கிய காரணம் பெற்றோர்களே என்றால் மிகையாகாது.

பெற்றோர்களும் மேற்கண்ட பழக்க வழக்கங்களை விட்டொழிக்க வேண்டும். பள்ளிகளில் மட்டுமே இதை தடுப்பதினால் எந்த மாற்றமும் வந்து விடாது. ஏறக்குறைய  20 ஆண்டுகளுக்கு  முன்பு  நம் நாட்டில் மதுபான விளம்பரங்களை தொலைக்காட்சியில் சர்வசாதாரணமாக ஒளிபரப்பினார்கள். இன்றும்கூட தொலைக்காட்சியில்  திரைப்படங்களில் மதுபானம், புகையிலை காட்சிகள் இடம்பெறுகின்றன.

இந்திய சமுதாயத்தின் சிந்தனை பெரும் அளவுக்கு உடல் ஆரோக்கியமற்ற பழக்க வழக்கங்களுக்கு தங்களை ஈடுபடுத்தியதுக்கு இந்த விளம்பரங்களும்,திரைப்படங்களும்

ஒரு காரணம். இன்று மதுபானம் , புகையிலை என்பது பெரும்பாலான இந்தியர்களின்  வாழ்கைக்கு அடிப்படை தேவை போல் ஆகிவிட்டது.

நல்லதை தேடுவதிலும்,  நல்லதுக்கு பணத்தை செலவு செய்வதிலும்  நம் சமூகம் பெரும்பாலும்  ஆர்வம் காட்டுவதில்லை. மதுபானதிற்க்கு செலவு செய்யும் நம் சமூகம்       1.70( ஒரு வெள்ளி  எழுபது காசு) கொடுத்து தமிழ் நாளிதழ்களை வாங்கி படிப்பதில்லை , நல்ல சிந்தனை தர கூடிய புத்தகங்களையும் வாங்கி வாசிப்பதில்லை.

இன்று அரசியலில்கூட, இதே நிலைமைதான், அரசியல் கட்சிகள், தேர்தல் பரப்புரைக்கு மக்களை வரவழைக்க  கலை நிகழ்ச்சிகளை நடத்திதான் கூட்டத்தை கூட்ட வேண்டியுள்ளது. அப்படி என்றால் இளைய தலைமுறையை அரசியல்  சிந்தனைக்கு  மாற்றுவதில் கட்சிகள் மற்றும் மக்களின் பிரதிநிகள் அடிப்படையிலேயே தோல்வி கண்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது.

சூதாட்டம், புகையிலை மற்றும் மதுபான நிறுவனங்கள் பள்ளிகளுக்கு நிதியுதவி செய்வதால் மட்டுமே இளைஞர்கள் சிந்தனை மாறவில்லை, மாறாக பெற்றோர்கள், அரசியல் கட்சிகள் அனைவரும் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதில் அடங்கி இருக்கிறது இளைய சமுதாயத்தின் சிந்தனை.

மேலும்  சூதாட்டம், புகையிலை மற்றும் மதுபான போன்றவற்றின் மூலம் கிடைக்கும் நிதிகளை பள்ளிகளுக்கு கோடுக்க கூடாது என்று கல்வி அமைச்சு தடை செய்திருந்தாலும், தேசிய மாதிரி பள்ளிகளுக்கு அதிகமான நிதிகள் அரசாங்கம் வழங்க வேண்டும் என்று ஏன் ஆளும் அரசாங்கத்தில் இருக்கும் இந்திய பிரதிநிதிகள் யாரும் கேட்க வில்லை என்று  கணேசன் கேள்வி எழுப்பி உள்ளார்.