எஸ். ஆர். எஃப். ஏ கலை மற்றும் கலாச்சார மையம், ஶ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயிலகம், ஷா ஆலம் மாநகர் மன்றம் (MBSA) , தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத் துறை (சிலாங்கூர்) ஆகிய தரப்பினர்கள் இணைந்து நாதமும் நடனமும் என்ற நிகழ்வை ஷ அலாமில் 10 ஆகஸ்ட் 2025-இல் நடத்தினர்.
இந்த நேரடி இசைக்குழுவின் நிகழ்வு, ‘டான்ஸ் இட். டிரம் இட். ஸ்திரிங் இட். பியோன் தி நோட்ஸ்’ : என்ற கருப்பொருளில் நிகழ்த்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சி குரு நளினி இராதாகிரிஷ் அவர்களின் முன்னெடுப்பில் உருவாக்கப்பட்ட நிகழ்ச்சி. பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் நேரடி இசைக் குழுவின் முக்கியப் பங்கை வெளிக்கொணர்ந்து அதன் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டதே இந்நிகழ்வு.
நதிந்திரன் ராஜ் பாஸ்கரன், , சிலாங்கூர் மாநில JKKN இயக்குனர் துவான் ஹஸ்னிமிஜான் பின் இஷாக் ஆகிய சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வை அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தனர்.
இந்நாதமும் நடனமும் நிகழ்ச்சி புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான குரு நளினி இராதாகிரிஷ் (நட்டுவாங்கம்), ஶ்ரீ தீபன் ஆறுமுகம் (மிருதங்கம்), வாத்ய ரத்னா காரா ஶ்ரீ அச்சுதன் சஷிதரன் நாயர் (வைலின்) மற்றும் ஸ்ரீ கயிலைநாதர் சண்முகம் (கர்நாடக குரல் இசை) ஆகியோரால் வழிநடத்தப்பட்டது.
நிகழ்ச்சி தொகுப்பின் ஒரு பகுதியாக நேரடிக் காட்சியை பரதநாட்டியத்தின்வழி ஸ்ரீ ராதாகிருஷ்ணன் இசை மற்றும் கலைப் பயலக மாணவர்கள் நிகழ்த்தினர்.
இந்நிகழ்வின் ஒரு பகுதி, பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் நேரடி இசைக் குழுவின் முக்கியத்துவத்தின் விரிவாக்கம் வழங்கப்பட்டது. பரதநாட்டிய மேடை காட்சிக்கு உயிரூட்டும் இசைக் குழுவின் பங்கு, கதை ஓட்டத்தின் உணர்ச்சித் தரத்தையும் செறிவூட்டும் இசை அமைப்பு, லயத்தை கட்டுப்படுத்தும் திறன் மற்றும் இசை கலைஞர்களும் நடன கலைஞர்களும் ஒருங்கிணைந்து உருவாக்கும் கலை மரபின் சிறப்பை இந்தப் பகுதி வெளிக்கொணர்ந்தது.
மலேசியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 130க்கும் மேற்பட்ட நடன கலைஞர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஆர்வலர்கள், பேராக், குவந்தான், ஜொகூர், சிரம்பான், கிள்ளான் மற்றும் கோலாலம்பூர் ஆகியகலைக்கழகங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றனர். பங்கு பெற்ற மாணவர்களின் பெற்றோர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு வற்றாத ஆதரவை வழங்கினர்.
ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தெரிவித்த கருத்துக்களில் வழி பரதநாட்டிய நிகழ்ச்சிகளில் நேரடி இசையின் மரபை விளக்கும் வகையில் இந்நிகழ்ச்சி வழங்கிய ஆழமான விரிவுரையும், அது உருவாக்கிய கலைப்பற்றும் சிறப்பாக குறிப்பிடப்பட்டன.
தகவல்- தீசநந்தினி