இராணுவத் தளபதி ஹபிஸுதீன் ஜந்தன், தனக்கெதிரான குற்றச்சாட்டுகள்மீதான விசாரணை நிலுவையில் உள்ளதால் உடனடியாக விடுப்பில் விடப்பட்டார்.
இந்த விடுப்பு, குற்றச்சாட்டுகளை அதிகாரிகள் விசாரிக்க அனுமதிக்கிறது என்று பாதுகாப்பு அமைச்சர் காலித் நோர்டின் கூறினார்.
“இந்த நிர்வாக நடவடிக்கை எந்தவொரு நலன் முரண்பாடும் இல்லாமல் விசாரணை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்கிறது,” என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
சேகுபார்ட் என்றும் அழைக்கப்படும் பத்ருல் ஹிஷாம் ஷஹாரின், மூத்த ஆயுதப்படை அதிகாரி ஒருவர் பணமோசடியில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, MACC சட்டம் 2009 இன் பிரிவு 17(a) இன் கீழ் விசாரணை நடைபெற்று வருவதாக MACC தலைவர் அசாம் பாக்கி உறுதிப்படுத்தினார்.
கடந்த செவ்வாய்க்கிழமை, MACC அதிகாரிகள் பாதுகாப்பு அமைச்சகத்திற்குச் சென்று, இராணுவம் சம்பந்தப்பட்ட திறந்த டெண்டர்கள் மற்றும் கொள்முதல்கள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து தங்கள் விசாரணைகளை மையப்படுத்தினர்.
டிசம்பர் 23 அன்று தொடங்கப்பட்ட MACC விசாரணையில், 2023 முதல் 2025 வரை, 158 இராணுவ கொள்முதல் திட்டங்கள் ரிம 500,000 ஐ தாண்டியதாகவும், 4,521 திட்டங்கள் ரிம 500,000 க்குக் குறைவாக இருப்பதாகவும் கண்டறியப்பட்டது.
“ஆரம்பகட்ட ஆய்வுகளில், பல நிறுவனங்களுக்கு அடிக்கடி அதிக மதிப்பிலான ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டது கண்டறியப்பட்டது, இது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.”
டிசம்பர் 24 ஆம் தேதி நிலவரப்படி, விசாரணைகளுக்கு உதவுவதற்காக மூன்று நபர்களிடமிருந்து MACC வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளது.

























