வணக்கங்களும் வாழ்த்துக்களும். உங்கள் இணையதளத்தைப் சுவிட்சர்லாந்திலிருந்து தொடர்ந்து பார்த்து வருகின்றேன். மிகவும் சிறப்பான ஆக்கங்கள் என்பதனை முதலில் தெரிவித்துக்கொண்டு அண்மையில் மலேசியாவில் 01.01.2012 அன்றிற்காக திரு. அரசேந்திரன் அவர்களால் வெளியிடப்பட்ட திருக்குறள் அட்டையினை பார்த்து மகிழ்ந்தேன்.
உலகிலே அதிகமக்கள் விடுமுறையில் இருக்கும் காலத்தில் இவ்வாறான சிறப்பு நாளை அறிமுகப்படுத்தி அந்த நாளில் தமிழர்களின் தமிழுணர்வு உத்வேகம் பெறச் செய்தமை பாரட்டுக்கரியது.
இதற்கு காரணமான மறைந்த தமிழ்ப்பற்றுடன் உழைத்து வாழ்ந்த மூதறிஞர் அமரர் மு. மணிவெள்ளையன் அவர்களை நினைவு கூர்கின்றேன். அவரைப் பின்பற்றி அவர்வழி அரசேந்திரன் இப்பணியைச் செய்திருப்பது தமிழுக்கு சிறப்பு. மலேசியத் தமிழர்களுக்கு அதிசிறப்பு என பாராட்டுகின்றேன்.
திரு. அரசேந்திரன் மற்றும் தமிழ் நாட்காட்டிகளை வெளியிட்டுவரும் தமிழ் அன்பர்கள் அனைவரையும் மனமாற வாழ்த்தும் அதேவேளை ஆண்டுத் தொடக்க நாளில் தமிழர்களிடம் தமிழுணர்வை ஊட்டும் முயற்சியாக இது அமைந்துள்ளது. இதனை உலகத் தமிழர்களிடம் கொண்டுசேர்க்க kumarinadu.net என்ற எமது வலைத்தளமும் ஆதரவு நல்கும் என்பதை கூறிக்கொள்கின்றேன்.
மேலும், சுவிற்சர்லாந்தின் தலைநகரில் இயங்கிவரும் பேர்ண் வள்ளுவன் பாடசாலையை உலகத் தமிழர்களை இணைக்க முயன்று வென்றார் என்று சொல்லுமளவிற்கு செயற்பட்ட இரா. வீரப்பன் மற்றும் மலேசியாவில் தூய தமிழுக்காக பாடுபட்ட தமிழுக்கு உழைத்த மூதறிஞர் மு. மணிவெள்ளையன் ஆகியோர் பார்த்து பாராட்டிய பாடசாலை என்ற மனநிறைவு எமக்குண்டு.
அப்பாடசாலையின் தைத்தமிழப்புத்தாண்டு விழாக்காட்சிகளை மலேசிய மக்களும் பார்வையிடவேண்டும் என்று விரும்புகின்றேன் அதனால் எமது பாடசாலையின் இணையத்தள முகவரியை இத்துடன் இணைக்கின்றேன். www.bernvalluvanschule.weebly.com .
bernvalluvanschool என்ற youtube முகவரியில் எமது பாடசாலையின் சிறிய நடனங்கள் அத்துடன் மு. மணிவெள்ளையன் அவர்கள் சுவிற்சர்லாந்தில் தமிழியத் திருமணம் செய்துவைக்கும் காட்சியை அவர் நினைவாகப் பார்வையிடலாம். அவர்மறைந்த அன்றே எமது பாடசாலையில் மாணவர்கள் பெற்றோர்கள் என பலநுாறு தமிழ்மக்கள் பாடசாலைக்கு வருகைதந்து அவரின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.
தைத்தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் செம்பருத்திக்கு நன்றிகளுடன் வணக்கம்.
பொ.முருகவேள் ஆசிரியர். (இலங்கை-சுவிற்சர்லாந்து.)