-நாதன் சதாசிவம்
16/1/2012 மலேசியாஇன்று வலைத்தளத்தில் ஒரு கட்டுரையைப் படித்தேன். மக்கள் கூட்டணி ஆண்டுக் கூட்டத்தில் இந்திய தலைவர்களின் படங்கள் எங்கும் காணப்படவில்லை என்று நண்பர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இது அவருடைய ஆதங்கம் மட்டும் இல்லை மாறாக மலேசியாவில் வாழும் ஒட்டு மொத்த இந்தியர்களின் மனக்குமுறல் என்றே சொல்ல வேண்டும்.
நானும் மக்கள் கூட்டணியை பெரிதும் மதிப்பவன்தான். அவர்கள் ஆட்சிக்கு வந்து பல நல்ல மாற்றங்கள் உருவாக வேண்டும் என்று தினமும் நினைப்பவன்தான். என்னை போல் இன்னும் எத்தனையோ ஆயிரக்கனக்கான இந்தியர்கள் இந்நாட்டில் அரசியல் மறுமலர்ச்சி ஏற்பட்ட வேண்டும் என்று பெரிதும் எதிர்ப்பார்கின்றார்கள்.
தேசிய முன்னணியால் புறக்கணிக்கப்பட்ட நம் சமுதாயம் மக்கள் கூட்டணியில் மதிப்போடும் மறியாதையோடும் நடத்தப்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் நமது சமுதாயத்தை மக்கள் கூட்டணி கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே என் அவா.
ஜசெகயின் மாதப் பத்திரிக்கையான ROCKET ஐ நான் பல ஆண்டுகளாக படித்து வறுகிறேன். ஜனவரி 2012 இல் வெளிவந்த பத்திரிக்கை முகப்பு செரடாங் எம்பி தியோ நீ சிங் மற்றும் நூருல் இஸ்ஸா ஆகிடோரின் படங்களை தாங்கி மிகவும் அழகாக வெளிவந்திருந்தது. மக்கள் கூட்டணியில் பெண்களுக்கு நிறைய அரசியல் வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் பெண்களின் அரசியல் பங்களிப்புற்கு எல்லா வகைகளிலும் உதவும் என்றும் குறிப்பிட்டிருந்தது. அதோடு இந்த இளம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் நேர்காணலும், செய்திகளும் பிரசுரிக்கப்பட்டிருந்தது. மிகவும் சந்தோஷம்.
இதில் மனதை வருடும் விசயமாக ஓர் இந்திய பெண் கூடவா மக்கள் கூட்டணியில் இடம் பெறவில்லை என்று எண்ணைம் தோன்றியது. மனம் வேதனைப்படுகிறது. 12 ஆவது பொது தேர்தலில் மக்கள் கூட்டணியில் போட்டியிட்ட குமுதா, காமாட்சி இவர்கள் எல்லாம் என்னவானார்கள்?
இதிலும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் திருமதி காமாட்சியின் பல சேவைகளை நான் அறிந்திருக்கிறேன். மொழிப்பற்றும் சமுதாயப் பற்றும் கொண்டு அவர் நமது சமுதாயத்திற்கு ஆற்றிவரும் சேவைகள் அலப்பரியது. அவர் சார்ந்திருக்கும் கட்சியில் அவரை அங்கிகரிக்கவில்லை என்றால் இதை ஏன் என்று கேட்க ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உள்ளது.
தேர்தலில் வெற்றி பெற்று சேவை செய்யும் உறுப்பினர்களுக்கு தரும் அங்கீகாரத்தை, சொர்ப்ப வாக்குகளில் வெற்றி வாய்ப்பை இழந்தும் மனம் தளராது சேவையாற்றி வரும் காமாட்சியையும் ஜசெக அங்கீகரிக்க வேண்டும் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.
12 ஆவது பொதுத் தேர்தலுக்குப் பிறகு அவர் காராக்கில் மக்கள் சேவை மையம் நடத்தி வருவது பலருக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அவரிடம் பல மாதிரியான பிரச்சனைகளுக்குத் தீர்வு கண்ட மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
அரசியலில் நம் பெண்கள் அதிகம் ஈடுபடுவதில்லை. அப்படியே ஈடுபடும் திருமதி காமாட்சி போன்ற பெண்களை அங்கீகரிப்பது மிகவும் முக்கியமாக கருதப்பட வேண்டும். மக்கள் கூட்டணி அதிலும் முக்கியமாக ஜசெக இதைச் சீர்தூக்கி பார்க்கும் என்று பெரிதும் எதிர்ப்பாற்கிறேன்.