பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட மாஸ்டர்ஸ்கில்ஸ் நிறுவனம் (Masterskill Education Group Bhd (MEGB)) கடந்த 1 வருடத்தில் 300 சதவிகிதத்திற்கு அதிகமான வீழ்ச்சியை அடைந்தது.
கடந்த வருடம் செப்டம்பர் 1-ல் ரிம 4.05 என்று அதிகபட்ச விலையில் பட்டுவடா செய்யப்பட்ட ஒரு பங்கு கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி ரிம 1.32க்கு வீழ்ச்சியடைந்த நிலையில் பதிவானது.
இது CIMB முதலீட்டு ஆய்வு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையின்படி இதன் நிகர லாபம் 43% குறைவாகவும் எதிர்பார்க்கப்பட்ட லாபம் 40%குறைவாகவும் உள்ளது.
குறைந்த எண்ணிக்கையில் மாணவர் பதிவாவதே இதற்கு காரணம் என்றும் கூறியது. மேலும் அதன் நிர்வாக செலவீனம் அளவுக்கதிகமாக உள்ளதையும் அவ்வறிக்கை சுட்டிக் காட்டியது. இதனால் இந்தப் பங்கை தாங்கள் தரம் குறைவு செய்துள்ளதாக அறிவித்தனர்.
மாஸ்டர்ஸ்கில் நிறுவனம் தாதி பயிற்சியை முதன்மைப்படுத்தி நாட்டின் மிகப்பிரபலமான தனியார் தாதி பயிற்சி வழங்கி வருகிறது. இதன்வழி சராசரி நிறுவனங்களைவிட அதிகமான லாபத்தையும் அடைந்தது.
இதுபோன்ற நிறுவனங்கள் அதிகமான லாபத்தை தாதிகள் பயிற்சி மற்றும் அவ்வகையான தொழில்கல்வியின் வழி அடைவதற்கு அரசாங்கத்தின் தொழில் கல்வி கடன் பெருமளவு பங்காற்றி உள்ளது என்பதால் அதிகமான லாபத்தை அடைய தகுந்த தகுதி நிலைகள் புறக்கணிக்கபட்டும் தரம் குறைக்கபட்டும் உள்ளதாக செய்திகள் வெளிவந்ததை தொடர்ந்து அரசாங்கம் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளதாக தெரிகிறது.
இதன் தாக்கம் மாஸ்டர்ஸ்கில்லை பாதித்திருக்கலாம் என நம்பப்படுகிறது. கல்வியையும் தொழில்கல்வியையும் வியாபாரமாக்கி அதன்வழி லாபம் அடையும்போது கடனாளியாவது ஏழ்மை மாணவர்கள் என்பதை அரசாங்கம் கண்டும் காணாமல் இருப்பது பொறுபற்ற செயலாகும்.
எம்.செல்வம், கோலாலம்பூர்