அடியேனும் தெய்வ பக்தி உள்ளவன்தான். ஆனால் இன்று ஆலயம்/ சமயம் என்ற பெயரில் சொந்த சமூகத்தையே சுரண்டி தின்னும் செயலை அதிகரிக்க இன்னும் எத்தனை பேர் கிளம்பிவிட்டார்கள் என்று தெரியவில்லை.
இந்து ஆலயங்களில் பல குழுக்கள்; அரசு சீல் வைக்கும் அளவிற்கு ( பேரா கந்தன் மலை கோவில் உதாரணம்) பராசக்தியில் கருணாநிதியின் வசனம் போல பூசாரியை தாக்கினேன் கோவில் கூடாது என்பதற்காக அல்ல , கொள்ளைக்காரர்களின் கூடாரமாக கோவில்கள் ஆகிவிடக் கூடாது என்பற்காக என்பார். அது போல இன்று நாடு முழுவதும் உள்ள கோவில்களில் வசூல் ராஜா வேட்டை நடந்து கொண்டு இருப்பதை நம்மால் மறுக்க முடியுமா?
பள்ளி வாசலுக்கும் – தேவாலயத்திற்கும் சென்றால் அர்ச்சனை என்ற பெயரில் வசூல் இல்லை. ஆனால் இந்து கோவில்களுக்குச் சென்றால் குறைந்தபட்சம் மூன்று ரிங்கிட் கொடுத்தால்தான் கடவுளின் தரிசனம் கிடைக்கும். யாகம் என்ற பெயரில் ஆயிரம் முதல் பத்தாயிரம் ரிங்கிட் வரை வசூல் வேட்டை நடப்பதை மறுக்க முடியுமா?
கோவில்களுக்கு இலட்ச்சக்கணக்கில் செலவு செய்து கும்பாபிஷேகம் நடத்த நன்கொடை, அரசு மான்யம் என்று போராட்டம் நடத்த துணிபவர்கள் தமிழ்ப்பள்ளிக்கு என்றால் கிலோ மிட்டர் தூரம் ஓட்டம் பிடிக்கும் தரப்பினரை என்னவென்று சொல்வது?
கோவிலுக்குச் செலுத்தும் கவனத்தை தமிழ்ப்பள்ளிக்கும் -நமது மாணவர்களின் உயர் கல்விக்கும் , பொருளாதரா மேம்பாட்டுக்கு கவனம் செலுத்தினால் என்ன என்பதே அடியேனின் வாதம்.
-T.ANATHAN
———————————————————————————————————————————————————————
உங்கள் எண்ணத்தில் தோன்றும் கருத்துகளையும் நீங்கள் ‘மக்கள் கருத்து’ பகுதிக்கு எழுதி அனுப்பலாம்.
எழுதி அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected] / தொலைநகல் : 03-26918272