தந்தையர்களுக்கு, தந்தையர் தின வாழ்த்துக்கள்!

‘எத்தனை தடவை அவரிடம் நான் நன்றி கடன் பெறுவது, அவருக்கு ஒரு முறையாவது என்னை தந்தையாக்கு’ என்கிறார் ஒரு கவிஞர்.

அப்பா உன்னால் வந்தேன் உலகில்.

என் உடலில் நீயும் இருக்கின்றாய் ஒரு பங்காய்

நீ உணர்த்திய நேர்மையில் நடைபயில

என் வாழ்வை வழி நடத்துகின்றாய் ஒரு குருவாய்

 ஓய்வில்லா உழைப்பு மட்டும் உன்னிடம் அதில் அடைந்த

பலன்கள் அனைத்தும் எங்களிடம்.

தன்னலமில்லா உள்ளத்தின் பெயர் தந்தை என

நான் அறிந்துகொண்ட போது நீ இல்லை இவ்வுலகில்

 உன் கண்டிப்பு இல்லையெனில் நங்கூரம் இல்லா

மரக்கலமாய் பாறையில் தூளாயிருப்போம்.

உன்னால் தானய்யா எமக்கு அங்கீகாரம் எல்லா

நலங்களும் தந்தவனே எங்கிருக்கின்றாய் இன்று.

 அடுத்த பிறவி ஒன்று இருந்தால் இறைவா

என்னை அவருக்கு மகனாக பிறக்க வைக்காதே

எத்தனை தடவை அவரிடம் நான் நன்றி கடன் பெறுவது.

அவருக்கு ஒரு முறையாவது என்னை தந்தையாக்கு

(நன்றி: http://sunduaeli.blogspot.com/)

தந்தையர் தினம் என்பது தந்தையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் ஒரு நாளாகும். உலகின் 52 நாடுகளில் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையிலும் வேறு பகுதிகளில் பிற நாட்களிலிலும் இந்த தினம் கொண்டாப்படுகிறது. அன்னையர்களை கெளரவிப்பதற்காக கொண்டாப்படும் அன்னையர் தினத்தை இந்த தினம் முழுமையடைய செய்கிறது.

இதன் வரலாறு

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அன்னையர் தினத்தை முழுமைப்படுத்த  தந்தை ஸ்தானம் மற்றும் தந்தையைக் கொண்டாடுவதற்காக தந்தையர் தினம் என்ற கொண்டாட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும் தந்தையர் மற்றும் முன்னோர்களின் நினைவுவிழாவாகவும் இந்த நாளில் கொண்டாடப்பட்டு கெளரவிக்கப்படுகிறது. மேலும் இந்த நாளில் தந்தையருக்கு பரிசுகளைக் கொடுப்பது, சிறந்த இரவு விருந்து அளிப்பது மற்றும் குடும்ப-உறவுகள் செயல்பாடுகளில் ஈடுபடுவது போன்றவை மேற்கொள்ளப்படும்.

ஸ்போகேனில் சோனோரா டோடின் முயற்சியால் ஜூன் 19, 1910 அன்று முதல் தந்தையர் தினம் அனுசரிக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

வாஷிங்டனைச் சேர்ந்த சோனோரா ஸ்மார்ட் டோட் என்பவர் 1909 ஆம் ஆண்டில் விடுமுறை நாளான ஒரு ஞாயிற்றுக் கிழமையில் ஸ்போக்கனில் உள்ள சென்ட்ரல் மெத்தோடிஸ்ட் எபிஸ்கோபால் தேவாலயத்தில் அன்னையர் தினம் சமய போதனையைக் கேட்டுக் கொண்டிருந்த போது இதைப் பற்றி அவருக்கு தோன்றியது.[1] மேலும் ஜூன் 19, 1910 அன்று அவருடைய தந்தைக்காக ஒரு புகழுரையை ஏற்பாடு செய்தார். அதிகார்வப்பூர்வமாக தந்தையர் தினத்தை கடைப்பிடித்து அனைத்து தந்தையர்களையும் கெளரவப்படுத்துவதற்கான யோசனையை இவரே முதன்முதலில் பரிந்துரைத்தார்.

1913 ஆம் ஆண்டில் இதற்கான ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது.  அமெரிக்க ஜனாதிபதி கல்வின் கூலிட்ஜ் 1924 ஆம் ஆண்டில் இந்த யோசனைக்கு ஆதரவளித்தார்.  மேலும் இதன் விடுமுறையை சட்டமயமாக்குவதற்காக வாணிக அமைப்புகளால் இதற்கான தேசிய செயற்குழு 1930 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1966 ஆம் ஆண்டில் ஜனாதிபதி லிண்டன் ஜான்சன் இதற்கு பெடரல் விடுமுறை அனுசரிக்கப்படப் போவதாக பொது அறிவிப்பை வெளியிட்டார்.

ஆனால், இன்று வரை இது தாய்லாந்தில் மட்டுமே அது ஒரு பொது விடுமுறை நாளாகும். அதற்கு காரணம், அந்நாள்தான் மன்னரின் பிறந்த நாளும் கூட.

father 1

வணிகமயமாக்கல் 

1930களில் ஆண்களின் உடுப்புகளுக்கான இணைக்கப்பட்ட விற்பனையாளர்கள் நியூயார்க் நகரத்தில் தேசிய தந்தையர் தின செயற்குழுவை அமைத்தனர். 1938 ஆம் ஆண்டில் இந்த அமைப்பின் பெயரானது தந்தையர் தினத்தை ஊக்குவிப்பதற்கான தேசிய கவுன்சில் என மாற்றம் செய்யப்பட்டது. மேலும் இதில் பிற வாணிக அமைப்புகளும் ஒருங்கிணைந்தன.  மக்களின் மனதில் இந்த விடுமுறையை சட்டரீதியாக ஆக்குவதும் மேலும் விடுமுறையில் விற்பனையை பெருக்குவதற்காக இந்த விடுமுறையை மிகுந்த திட்டமிட்ட வழியில் வர்த்தகரீதியான நிகழ்ச்சியாக செயல்படுத்துவதும் இந்த கவுன்சிலின் நோக்கமாகும்.

வணிகர்கள் இந்த விடுமுறையை பகடி செய்யும் மற்றும் நையாண்டி செய்யும் போக்கைக் கண்டுகொண்டனர். மேலும் இந்த நாளில் தந்தையர்களுக்கான பரிசுகளை விளம்பரம் செய்யும் அதே விளம்பரங்களில் கேலிச் செயல்களில் ஈடுபட்டு அவர்களின் ஆதாயத்திற்காக அதைப் பயன்படுத்திக்கொண்டனர்.

பரிசுப் பொருள்களில் வணிகத்தனத்தைக் கண்டாலும் மக்கள் பரிசுகளை வாங்க கட்டாயப்படுத்தப்பட்டனர். மேலும் இந்த நாளில் பரிசுகள் வழங்கப்படுவது இதன் ஆதரவாளர்களால் மிகவும் வரவேற்கப்பட்டது.

1937 ஆம் ஆண்டில் ஆறு பேரில் ஒரே ஒரு தந்தை மட்டும் அந்த நாளில் பரிசு பெறுவதாக தந்தையர் தின கவுன்சில் கணக்கிட்டது.

எனினும் 1980களில் இந்த கவுன்சில் அவர்களது நோக்கத்தை அடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தியது: அதாவது இந்த ஒரு நாள் நிகழ்ச்சி ஒரு “இரண்டாவது  கிறிஸ்மஸ்” போல மூன்று வாரங்களுக்கு கொண்டாடப்படும் வணிக நிகழ்ச்சியாக மாறியது.

1949 ஆம் ஆண்டில் கவுன்சிலின் தலைமை அதிகாரி இதைப் பற்றி விவரிக்கும் போது, கவுன்சிலின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் இல்லாமலும் மற்ற அமைப்புகளின் ஆதரவு இல்லாமலும் இருந்தால் இந்த விடுமுறை மறைந்து போயிருக்கலாம் என்றார்.