இனி எவ்வளவு காலங்களுக்கு இனப் பாகுபாடு பிரச்சனைகளைப் புறக்கணிக்க போகிறோம்?

NUBE-Solomon-ஜே. சோலமன், பொதுச் செயலாளர், என்யுபி, ஜூன் 28, 2013.
வேலை செய்யும் இடங்களில் இனவேற்றுமை சம்பவங்கள் நடப்பது மலேசியாவில் நடக்கும் புதிய சம்பவங்கள் அல்ல. ஒவ்வொரு துறையிலும் அது கட்டம் கட்டமாக நுழைந்து தாக்கி அழித்து கொண்டிருக்கும் நோய் என்று சொல்வதில் தவறேதும் இல்லை.

இதனால் , அரசாங்கம் 2012 வருடம் ஆரம்பத்தில் இன உறவு மசோதா ஒன்றை அறிமுகபடுத்தியது. இன வேற்றுமையைத்  தடுக்கும் சட்டங்களான Sedition Act 1948 மற்றும் Criminal Procedure Code (CPC) போன்ற சட்டங்கள் ஏற்கனவே இருப்பதால், பிறகு அரசாங்கம் அந்த மசோதாவை கைவிட்டது.

ஆனால், குறிப்பிட்ட அந்த சட்டங்களில் உள்ள குறைகளை அடையாளம் காண அரசாங்கம் தவறிவிட்டது! தொழிழாளர்களுக்கு உண்டாகும் இனவாத வேற்றுமை பிரச்சனைகளை களைவதற்கான அந்த சட்டங்களின் நோக்கம் தோல்வி அடைந்து விட்டது.

சமீபத்தில் கேத்தரின் அரிகாஸ்னின் என்பவர், இந்த இனவாத வேற்றுமைக்கு பழியாகியுள்ளார். முவமலாத் வங்கியில் (அரசாங்க துணை நிறுவனம்.)22 வருடங்கள் வேலை செய்த ஊழியர் அவர்.

கூலிம் கிளையில் உள்ள முவமலாத் வங்கியில் வேலை செய்த ஒரே இந்திய ஊழியர் அவர். ஒய்வு / விடுமறை நாளில் வங்கி நடத்திய பயிற்சியில் கலந்து கொள்ள தவறியதாக காரணம் காட்டி அவர் வேலை நீக்கம் செய்ய பட்டுள்ளார்.

தேசிய வங்கி ஊழியர் சங்கம் நடத்திய (NUBE) நடத்திய பிக்கேட் ஜெலஜா (PICKET JELAJAH) என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏற்கனவே முடிவு செய்ததால், அவரால் வங்கி நடத்திய பயிற்சியில் கலந்து கொள்ள இயலவில்ல. இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள தவறி, அவர் சொன்ன அதே காரணங்களைக் கூறிய அவரின் சக ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

நடந்த சம்பவங்களை காண்கையில், அவர் இந்தியர் என்பதால் வேலையில் இருந்து நீக்க பட்டுள்ளார் என்று நாங்கள் எண்ணுகிறோம்.

கெடா, பினாங்கு, பெர்லிஸ் போன்ற வடக்கு மாநிலங்களில் உள்ள முவமலாத் வங்கியில் வேலை செய்த ஒரே இந்திய ஊழியர் என்பதால், அவர் குறி வைக்கபட்டுள்ளார்.

மேலும், நடத்தபட்ட பயிற்சி வடக்கு மாநில கிளைகளுக்கு நடத்தப்படும் 2013 ஆண்டின் இறுதிப் பயிற்சி என்று வங்கி பொய் கூறியுள்ளது. காரணம், அதே போல் ஒரு பயிற்சி 22 மார்ச் 2013 அன்று நடத்தபடும் என்று வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் மின்னஞ்சல் வழி செய்தி அனுப்பபட்டுள்ளது. மேலும், அதே பயிற்சி 22 ஜூன் 2013 அன்றும் நடத்தப்படும் என்று செய்தி அனுப்பபட்டுள்ளது.7 ஜூன் 2013 அன்று, வேலையிலிருந்து நீக்கபட்ட பிறகும், கேத்ரின்  பெயர் பயிற்சியில் கலந்து கொள்வோர் பெயர் பட்டியலில் பதிவு செய்யபட்டுள்ளது.

இனி எவ்வளவு காலங்களுக்கு இப்படிபட்ட நிகழ்ச்சிகளை, சாதாரண நிகழ்ச்சிகள், பிரச்சனைகள் என்று சாக்கு போக்கு கூறி கண்டும் காணாமல் இருக்க போகிறோம்?

முழு நிறைவான, குறைபாடற்ற உலகத்தில், இனத்தைக் காரணம் காட்டி ஒருவரை மற்றவர் ஓரங்கட்டுவத்தையும், இனவாதத்துடன் பாகுபாடு செய்வதையும் தடுக்க சட்டங்கள் தேவை இல்லை.துரதிஷ்டவசமாக, அப்படிப்பட்ட குறைபாடற்ற உலகத்தில் நாம் வாழவில்லை என்பதால், நம் சமுதாயத்தின் ஒற்றுமையும் நல்லிணக்கத்தையும் புற்று நோய் போல பரவி அழித்துகொண்டிருக்கும் இந்த இனவாதத்தைத் தடுக்க, கடுமையான சட்டங்களும், அதை அமலாக்கம் செய்வதில் கடுமையான நடவடிக்கைகளும் எடுத்தால் மட்டுமே, இனவாத வேற்றுமையால் பாதிக்கபட்டு பழிவாங்கபட்டவர்களுக்கு நீதி கிடைக்கும்!

TAGS: