இராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவோரை அம்பலப்படுத்துமாறு கோரிக்கை

srilanka_channel4_videoஇராணுவத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவோரை அம்பலப்படுத்துமாறு அரசாங்கம், நவனீம்பிள்ளையிடம் கோரிக்கை விடுக்கத் தீர்மானித்துள்ளது.

இலங்கை இராணுவத்தினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக 6300 பேர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கைக்கு விஜயம் செய்யும் நவனீதம்பிள்ளையிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட உள்ளது.

மறைந்திருந்து இவ்வாறு குற்றம் சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச, முப்படைகளின் தளபதி ஜகத் ஜயசூரிய, இராணுவத் தளபதி தயா ரட்நாயக்க ஆகியோர் நவனீதம்பிள்ளையை சந்திக்க உள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்தும் தரப்பினரையே நவனீதம்பிள்ளை இலங்கை விஜயத்தின் போது அதிகமாக சந்திக்க உள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று குற்றம் சுமத்தியுள்ளது.

TAGS: