ஆஸ்திரேலிய, மலேசிய அகதிகள் பரிமாற்றத்திற்கு நீதிமன்றம் தடை

ஆஸ்திரேலியா மலேசியாவுடன் செய்துகொள்ளத் திட்டமிட்ட அகதிகள் பரிமாற்றத்துக்கு ஆஸ்திரேலிய உயர்நீதிமன்ற Read More

MASTERSKILL வீழ்ச்சி

பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்ட மாஸ்டர்ஸ்கில்ஸ் நிறுவனம் (Masterskill Education Group Bhd (MEGB)) கடந்த 1 வருடத்தில் 300 சதவிகிதத்திற்கு அதிகமான வீழ்ச்சியை அடைந்தது. கடந்த வருடம் செப்டம்பர் 1-ல் ரிம 4.05 என்று அதிகபட்ச விலையில் பட்டுவடா செய்யப்பட்ட ஒரு பங்கு கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி…

விடுதலை தினத்தில் விடுதலை கோரும் வாகன ஊர்வலம்

"மெர்டேக்கா" என்ற முழக்கத்துடன் சுமார் நூற்றுக்கும் அதிகமான வாகனமோட்டிகள் தேசிய கொடியால் அலங்கரிக்கப்பட்ட மோட்டார் வண்டிகளில் கிள்ளான் முதல் சா ஆலம் வரை ஊர்வலமாக வந்தனர். "விடுதலை தினத்தன்று எங்களுடைய கொண்டாட்டம் இது" என்கிறார் இதில் பங்குபெற்ற தமோதிரன். நேற்று காலை பண்டமாரன் மைதானத்தில் ஆரம்பித்த இந்த ஊர்வலம்,…

ராஜிவ் கொலை வழக்கு: மூவரையும் தூக்கிலிட 8 வாரம் தடை!

இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகிய மூவரையும் தூக்கிலிட 8 வாரங்கள் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இம்மூவரின் தூக்குத்தண்டனையை குறைக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ராஜீவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன்…

சிறார்களை காணவில்லை; பெற்றோர் கண்ணீருடன் தவிப்பு

இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இறுதி போரின் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற சிறுவர்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தொடர்பான விவரங்கள் இதுவரை தெரியவரவில்லை. காணாமல்போனவர்களை தேடிக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக இலங்கை அரச அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஐநாவின் சிறார்கள் நல அமைப்பாகிய 'யுனிசஃப்'…

தூக்குத் தண்டனையை ரத்து செய்யக் கோரி இளம்பெண் தீக்குளிப்பு

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி காஞ்சீபுரம் மக்கள் மன்றத்தை சேர்ந்த செங்கொடி (வயது 19) என்ற இளம் பெண் காஞ்சீபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து உயிரை மாய்த்துக்கொண்டார்.   இதுபற்றிய காவல்துறை விசாரணையில், ராஜீவ்…

உலகத் தமிழர் பேரவையின் கருணை முறையீடு

இந்திய குடியரசுத் தலைவர் பிரதிபா தேவிசிங் பாடீல் அவர்கள் முன்னாள் இந்திய தலைமையமைச்சர் இராஜிவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள திரு.பேரறிவாளன், திரு.முருகன், திரு.சாந்தன் ஆகியோரின் கருணை மனுவை நிராகரித்துள்ளார். முன்னாள் தலைமையமைச்சர் இராஜிவ் காந்தியின் இழப்பு அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல இந்திய பெருங்கண்டத்திற்கே ஒரு பேரிழப்பு ஆகும்.…

மரண தண்டனையை ரத்துச் செய்து மனிதநேயத்தை வெளிப்படுத்துங்கள்!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட சாந்தன், பேரறிவாளன், முருகன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை ரத்து செய்து பாரத தேசத்தின் அன்பையும் மனிதநேயப் பண்பையும் பெருமைப்படுத்துமாறு இலங்கையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பில் தமிழக முதல்வர் ஊடாக…

அமெரிக்காவை மிரட்டும் ‘ஐரீன்’ சூறாவளி

'ஐரீன்' சூறாவளி இன்று அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையை கடுமையாகத் தாக்கும் என, வானியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் உள்ள ஏழு மாகாணங்களில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மூன்று இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வட அட்லாண்டிக் பெருங்கடல்…

வன்னி மருத்துவர்கள் தவறான அறிக்கை கொடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர்

வன்னிப்போரின் பின்னர் கைதுசெய்யப்பட்ட மருத்துவர்கள், கொழும்பில் செய்தியாளர்களுக்கு எதனை Read More

நெடுந்தீவில் மனிதப் புதைகுழி; 8 மண்டையோடுகள் கண்டெடுக்கப்பட்டன

இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணம் நெடுந்தீவில் மனித புதைகுழியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள உதவி மாவட்ட ஆணையர் பணிமனைக்கு அருகில் புதிய கட்டட நிர்மாணத்துக்கான அடிக்கட்டுமான வேலைக்கென நிலத்தை தோண்டியபோது, மனித எலும்புகள் கண்டெடுக்கப்பட்டதையடுத்து இந்த மனித புதைகுழி பற்றிய விவரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது பற்றிய தகவல் காவல்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ…

ஹசாரேவின் உண்ணாநோன்பு முடிவுக்கு வந்தது!

லோக்பால் மசோதாவில் மக்கள் விரும்பும் அம்சங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய அரசு ஏற்றது. இதனையடுத்து அண்ணா ஹசாரே இந்திய நேரப்படி இன்று காலை 10. 20 மணிக்கு தனது உண்ணாநோன்பு போராட்டத்தை முடித்துக்கொண்டார். சிறு குழந்தைகள் கொடுத்த இளநீரை பருகி அண்ணா ஹசாரே உண்ணாநோன்பை…

ராஜீவ் கொலை வழக்கு: மூவருக்கு 9-ம் தேதி தூக்கு

இந்தியாவின் முன்னாள் தலைமையமைச்சர் ராஜீவ் காந்தி கொலையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள மூன்று தமிழர்களும் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9-ம் தேதி அதிகாலை தூக்கிலிடப்படுவார்கள் என்று வேலூர் மத்திய சிறையின் கண்காணிப்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இது தொடர்பான அதிகாரபூர்வ தகவல் கொடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். ராஜீவ் கொலை வழக்கில்…

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வசிக்கலாம்: விஞ்ஞானிகள்

செவ்வாய் கிரகத்தில் பல ஆண்டுகளாக ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவின் 'நாசா' விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில் மணிதர்கள் வசிக்கலாம் என்று தெரிவித்துள்ளனர். செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஆளில்லா விண்கலம், புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்புகிறது. சமீபத்தில் விண்வெளி ஓடம் எடுத்து அனுப்பிய புகைப்படத்தை ஆராய்ந்த விஞ்ஞானிகள் செவ்வாய் கிரகத்தில்…

போர்குற்றம் குறித்து விசாரணை நடத்தவேண்டும்: இந்திய மத்திய அரசு

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கும்படி அந்த நாட்டு அரசை வலியுறுத்த இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக மாநிலங்களவையில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அளித்த பதிலுக்கு அதிருப்தி தெரிவித்து தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் நேற்றும் நாடாளுமன்றத்திலிருந்து…

வெற்றி அல்லது வீர மரணம்: கடாஃபி ஆவேசம்

லிபியா தலைநகர் திரிபோலியில் உள்ள கர்ணல் கடாஃபியின் குடியிருப்பு வளாகம் நேற்று கிளர்ச்சிக்காரர்கள் வசம் வந்தது. இதனிடையே இரகசிய இடம் ஒன்றிலிருந்து நேற்று அறிக்கை விடுத்த கர்ணல் கடாஃபி, "வெற்றி அல்லது வீர மரணம்" என்று தெரிவித்துள்ளார். இதனால் உற்சாகமடைந்துள்ள கடாபி ஆதரவாளர்கள் நேற்று மீண்டும் கிளர்ச்சிக்காரர்கள் மீது…

இலங்கையில் அவசரக்காலச் சட்டம் நீக்கப்பட்டது!

கடந்த 3 தசாப்த காலங்களாக இலங்கையில் அமலில் இருந்த அவசரகாலச் சட்டம் இனி நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது இலங்கை குடியரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சே இன்று இலங்கை நாடாளுமன்றத்தில் வைத்து அறிவித்துள்ளார். எனவே, அவசரகால சட்டம் நீடிப்பு தொடர்பான தீர்மானம் எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் வழக்கப்படமாட்டாது என்று நாடாளுமன்றத்தில் இன்று விசேட…

அண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம்!

கடந்த 10 நாட்களாக உண்ணாநோன்பு இருந்து வரும் காந்தியவாதி அண்ணா ஹசாரேவின் உடல் நிலை மோசம் அடைந்துள்ளது. அவரை எந்நேரத்திலும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ராம்லீலா திடலில் விரைவு அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஊழலுக்கு எதிரான ஜன் லோக்பால் மசோதாவை எந்தவித…

4 ஏக்கர் நிலம் : புக்கிட் ஜாலிலில் ஒளியேற்றுவோம்

நேற்று பிரிக்ஃபீல்ட்ஸ்-சில் உள்ள மலேசிய சோசலிச கட்சியின் பணிமனையில் ஜெரிட் இயக்கத்தின் சார்பில் புக்கிட் ஜாலில்  தோட்ட மக்களின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து உரையாட கூட்டம் ஒன்று கூட்டப்பட்டது. இவ்விரு அமைப்புகள் தவிர்த்து சுவாராம் மற்றும் 7 அரசு சாரா அமைப்புகளும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டன. இக்கூட்டத்தின் முக்கிய…