யோகாவா ஓகாவா?

யோகா எனும் சமஸ்கிருத சொல்லின் தமிழாக்கமே ஓகம் எனும் தமிழ்ச்சொல். யோகக் கலையின் வரலாற்றை அரிய முற்படும்போது ஒரு தெளிவான வரையறுக்கப்பட்ட வரலாறு கிடைக்கப் பெறவில்லை என்பதே உண்மை. இருப்பினும் பல ஆய்வாளர்களின் கருத்துகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது யோகக் கலையின் வரலாற்றை ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக்…

4 ஏக்கர் நிலம் வழங்குவதால் அரசாங்கத்திற்கு பெரிய இழப்பு ஒன்றுமில்லை

(ஐயன்திருமேனி) புக்கிட் ஜாலில் தோட்ட மக்களுக்கு நியாயம் வேண்டும். புக்கிட் ஜாலில் தோட்ட மக்களின் நியாயமான போராட்டங்களுக்கு அரசும் அதிகாரிகளும் செவிசாய்க்க மறுத்து வருவது நியாயமான செயலாக இல்லை. காலங்காலமாக தோட்டங்களில் வேலைப் பார்த்து வரும் இந்த மக்களின் நியாயமான கோரிக்கைகளைக்கூட அரசு ஏற்க மறுப்பது எந்த வகையில்…

புக்கிட் ஜாலில் தோட்ட மக்கள் பதற்றமடையத் தேவையில்லையா?

கடந்த 15 ஆகஸ்டு 2011-ல் மலேசிய நண்பனில் வெளிவந்த கூட்டரசுப் பிரதேச நகர்ப்புற நல்வாழ்வுத்துறை துணை அமைச்சர் சரவணனின் அறிக்கையின் உண்மை நிலையை கேட்டு கடிதம் ஒன்று இன்று புக்கிட் ஜாலில் தோட்ட மக்களால் அவரது பணிமனையில் வழங்கப்பட்டுள்ளது. அவரின் பத்திரிகை அறிக்கை படி, "புக்கிட் ஜாலில் தோட்ட…

இலங்கையில் பெரிய துறைமுகம் சீனா அமைக்கிறது

இலங்கையில் 500 மில்லியன் டோலர் செலவில் பெரிய துறைமுகத்தை சீனா அமைக்கவுள்ளது. கடந்த வாரம் சீனாவுக்கு இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே சென்றுவந்தார். அப்போது இத்துறைமுகம் அமைப்பதற்கான ஒப்பந்தம் இலங்கை - சீனா இடையே கையெழுத்தானது. இலங்கையில் புதிதாக அமைக்கப்படும் இத்துறைமுகத்தின் 55 சதவீத பங்குகள் சீனாவின்…

10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை : ஐ.நா

சிரியாவின் துறைமுக நகரான லடாகியாவில் நான்காவது நாளாக நேற்றும் சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்நிலையில் அந்நகரில் இருந்து வெளியேறிய 10 ஆயிரம் பாலஸ்தீன அகதிகளைக் காணவில்லை என ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. லடாகியாவில் நேற்று சிரிய இராணுவமும் கடற்படைப் படகுகளும் இணைந்து கண்மூடித் தனமாக தாக்குதல்…

சிறையில் இருந்து வெளியேற அண்ணா ஹசாரே மறுப்பு

நேற்று கைது செய்யப்பட்ட சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரேவை திகார் சிறையில் இருந்து விடுவிக்கும்படி நேற்று இரவு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவரை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் சிறை அதிகாரிகள் இறங்கினர். ஆனால், சிறையில் இருந்து வெளியேற ஹசாரே மறுத்துவிட்டார். "எந்த நிபந்தனைகளுமின்றி ஜெய்பிரகாஷ் நாராயண் பூங்காவில் உண்ணாநோன்பு இருக்க…

நாள்தோறும் 15 நிமிட உடற்பயிற்சி ஆயுளை 3 ஆண்டு நீடிக்கும்

நாள்தோறும் 15 நிமிடங்கள் எளிய உடற்பயிற்சி செய்தால் வாழ்நாளை 14 சதவீதம் அல்லது 3 ஆண்டுகள் நீடிக்க செய்ய முடியும் என்கிறது தைவான் ஆராய்ச்சி மையம். நிமிடங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப வாழ்நாளும் அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உடற்பயிற்சிக்கும் ஆயுள் நீள்வதற்கும் உள்ள தொடர்பு பற்றி தைவானின் 'லான்செட்' பல்கலைக்கழக…

கிழக்கு மகாணத்தில் அரச படைகளுக்கு பலத்த எதிர்ப்பு!

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ள மர்மமனிதர்களின் குற்றச் செயல்கள் குறித்து இலங்கை அரசாங்கம் மீது பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொள்ளை, பெண்களிடம் தவறாக நடந்துகொள்ளுதல், பொதுமக்களை மறைந்திருந்து தாக்குதல் போன்ற குற்றச் செயல் சம்பவங்கள் அண்மைக் காலமாக கிழக்கு மகாணம் உட்பட…

நெருக்கடியில் இடைத்தங்கல் முகாம் மக்கள்

வவுனியா பூந்தோட்டம் மற்றும் சிதம்பரபுரம் இடம் பெயர்ந்தோருக்கான இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களை அவர்களின் சொந்த மாவட்டங்களுக்குச் செல்லுமாறு கூறியுள்ள அரசாங்கம், அடிப்படை வசதிகளை நிறுத்தி தங்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தியிருப்பதாக அங்குள்ள மக்கள் கூறுகின்றார்கள். முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா போன்ற பல மாவட்டங்களையும் சேர்ந்த 300க்கும்…

அண்ணா ஹசாரே இன்று காலை திடீர் கைது

வலுவான லோக்பாலை வலியுறுத்தி டெல்லியில் ஜெய்பிரகாஷ் நாராயன் பூங்காவில் இன்று முதல் (ஆக.16) காலவரையற்ற உண்ணாநோன்பு இருக்கப்போவதாக அறிவித்திருந்த சமூக சேவகர் அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதப் போராட்டத்துக்கு அனுமதி மறுத்த காவல்துறையினர் அவரை இன்று காலை கைது செய்தனர். அண்ணா ஹசாரே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவே இவ்வாறு கைது செய்யப்பட்டதாகத்…

ஈராக்கில் தொடர் குண்டு வெடிப்பு : 75 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத் உட்பட பல்வேறு நகரங்களில் நேற்று நடந்த தொடர் குண்டு வெடிப்பு மற்றும் தற்கொலைத் தாக்குதல்களில், சுமார் 75 பேர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். பாக்தாத்தின் தெற்கில் 150 கி.மீ., தொலைவில் உள்ள குத் நகரில், நேற்று நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 34 பேர் பலியாகினர்.…

“தமிழர்கள் அழுக்கானவர்கள்”: அமெரிக்க துணைத் தூதரின் கருத்தால் சர்ச்சை

இந்தியாவின் எஸ்.ஆர்.எம் பல்கலைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய இந்தியாவுக்கா Read More

வலிமை பெறும் வாக்குகள்

(கா. ஆறுமுகம்) சிடி பவ்சிட் என்ற குட்டி பட்டிணத்தில் ஒரு 26 வயதுடைய கணினியியல் பட்டதாரி ஒருவன் தள்ளு வண்டியில் பழங்கள் விற்று வந்தான். இந்தப் பட்டினம் துனிசியா நாட்டின் தலைநகரத்தில் இருந்து 160 மைல் தூரத்தில் இருந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 17-ஆம் தேதி நகராட்சிமன்ற அதிகாரிகள்…

போரின் போது மருத்துவமனைகள் தாக்கப்பட்டன : ICRC

இலங்கை உட்பட உலக நாடுகள் சிலவற்றில் போரின் போது மருத்துவமனைகள் இலக்குகளாக இருந்ததாக அனைத்துலக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. ஜெனீவாவில் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் இந்த விசயம் குறிப்பிடப்பட்டுள்ளது. போரின் போது பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குவதும், காயப்பட்டவர்களை மற்றும் இறந்தவர்களை பரிமாற்றம் செய்யும் பணிகளில்…

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வியை அமல்படுத்த உச்சநீதிமன்றம் ஆணை

சமச்சீர் கல்வியை இந்த ஆண்டே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததுடன் தமிழக அரசு இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டார்கள். சமச்சீர் கல்வித்…