நாட்டின் 60 ஆண்டுகால சுதந்திரத்துக்குப் பின்னும் அடையாளப் பத்திரமற்ற மலேசிய…

  இந்த நாட்டுக்கான சுதந்திரப் பேச்சுவார்த்தைகள்கூட 13 ஆண்டுகளில் முடிவுற்றன. ஆனால்  இந்நாட்டின் சுதந்திரத்துக்கும் மேம்பாட்டுக்கும் உழைத்து உருக்குலைந்த இனத்தினர் ஐந்தாம்  மற்றும் ஆறாம் தலைமுறைக்குப்பின்பும், சொந்த நாட்டில் நாடற்றவர்களாக நடமாடும் அவலம் வேறு எந்த நாட்டில் நடக்கும் என்பதை எண்ணி மஇகா மட்டுமின்றி அனைத்து மலேசியர்களும் வெட்கப்பட…

மலேசியக் குடியுரிமைக்கானத் தகுதி என்ன?

- கி.சீலதாஸ், மே 7, 2017. ஒரு  நாட்டில்  பிறந்தவருக்கு  அம்மண்ணின்  உரிமை  இருக்கிறது  என்ற  கோட்பாடு   சில  நாடுகளில்  மட்டும்  பேணப்படுகிறது.  அப்படிப்பட்ட  உரிமையை  அனுபவிக்க  நிபந்தனைகள்,  கட்டுப்பாடுகள்   இருக்கின்றன.  இந்தக்  கோட்பாட்டை  குடியுரிமைக்கான  பிறப்புரிமை  என்றும்  சொல்லப்படுகிறது.  ஆனால்  இந்த  உரிமையைப்  பெரும்பான்மையான  உலகநாடுகள்  மறுத்து…

நாட்டில் தீவிரவாதத்தை ஒழிப்பதிலும் இரட்டைவேடமா?, கேட்கிறார் சேவியர்

  இந்நாட்டில்  நிலவும்  அமைதி ஒற்றுமை நீடிக்க நாட்டு மக்கள் எல்லா வகையான மதத் தீவிரவாதங்களையும் நிராகரிக்க வேண்டும் என்ற துணைப் பிரதமரின் 2017 ம் ஆண்டு  உகாதி தினக் கொண்டாட்ட உரை கவர்ச்சியாக உள்ளது. ஆனால், துணைப் பிரதமரின் உரை வஞ்சகமானது, நேர்மையற்றது என்பதனை மக்கள்  நன்கு…

தமிழ்க்கல்வி வழங்கும் பள்ளிகளாக இயங்க வேண்டும்! மே19-இல் திரள்வோம்! மலேசிய…

தமிழ்ப்பள்ளிகளில் இருமொழிக் கொள்கை திணிப்பு தேவையில்லை..! தமிழ்ப்பள்ளிகள், தமிழ்ப்பள்ளிகளாகவே இருக்கட்டும்! என்று தமிழ்மொழியின்பாலும் தமிழ்ப்பள்ளியின்பாலும் அக்கறையோடு சிந்தித்து, தாய்மொழிக் கல்வியின் மூலம் கற்பித்தாலே, தொடக்கக் கல்வியில் ஒரு மாணவனின் கல்வித்தரத்தை உயர்த்தும் என்பது உலக ஒன்றியத்தின் முதல் கல்வி கொள்கை. இதை உணர்ந்து, “மே 19 இயக்கத்தின்” ஏற்பாட்டில்,…

ஒரே வீட்டில் 32 புதிய வாக்காளர்கள் எப்படி வந்தார்கள்? பெர்சே…

மலாக்காவில்   புக்கிட்   கட்டில்  நாடாளுமன்ற   தொகுதியில்   உள்ள   சட்டமன்ற   தொகுதியான    புக்கிட்   பாருவில்   32  “ஆவி  வாக்காளர்கள்”  ஒரே  முகவரிக்குத்   தங்கள்  இருப்பிடத்தை  மாற்றிக்கொள்ள    தேர்தல்  ஆணையம்   இடமளித்தது     எப்படி    எனத்  தேர்தல்   சீரமைப்புக்காக   போராடிவரும்   பெர்சே   கேள்வி   எழுப்பியுள்ளது. இவ்விவரம்   கடந்த  ஆண்டு  கடைசி   காலாண்டில்    அரசிதழில்  …

இருமொழித் திட்டத்தை அகற்ற, புத்தராஜெயாவில் பேரணி!

மே-மாதம் 19 ஆம் தேதி, தமிழ்ப்பள்ளிகளில் டிஎல்பி என்ற இருமொழித் திட்ட அமலாக்கதை அகற்ற, புத்தராஜெயாவில் ஒரு பேரணியை நடத்தப் போவதாக மே19 இயக்கம் அறிவித்துள்ளது. இந்த "மே19 இயக்கம்" தமிழ்க்கல்வி மற்றும் தாய்மொழிக்கல்வி சார்ந்த செயல்பாட்டில் ஈடுபட்டிருக்கும் அமைப்புகள் மற்றும் தன்னார்வலர்களின் தோற்றுவிப்பாகும். மலேசியத் தமிழர்களின் பண்பாட்டு…

இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள், கூறுகிறார் சேவியர்

  “வணக்கம், அன்புடன் அனைவருக்கும் என் இனிய சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள். நம் நாட்டின் இன்றைய நிலை தலைவன்  எவ்வழியோ மக்கள் அவ்வழியே என்ற முதுமொழிக்கு ஒப்ப நடந்து வருகிறது. நாட்டின் 60 ஆண்டுகால வரலாற்றில் மக்கள் முற்றிலும் மாறுபட்ட ஒரு சூழ்நிலையில் இந்த ஹேவிளம்பி சித்திரை புத்தாண்டை வரவேற்கின்றனர்”,…

சமய உரிமையை காப்பதில் பாக்காத்தான் முன்னணி! – கா. ஆறுமுகம்

தெய்வம் நின்று கொல்லும் என்பார்கள். தேசிய முன்னணி ஆட்சியில் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பல கோயில்கள் உடைபட்டன. சிலாங்கூர் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் இதே நிலைதான். இதைத்தான் சமூகப்   போராளி பொ. உதயகுமார்  இன அழிப்புக்கு ஒப்பான நடவடிக்கை என வன்மையாகச் சாடினார். இதற்காக தேசிய முன்னணி…

சேவியர்: ஷரியா சட்ட விவகாரத்தில் பிரதமரின் அதிகாரத் துஷ்பிரயோகத்துக்கு சபாநாயகர்…

சேவியர் ஜெயக்குமார், ஏபரல் 8, 2017. நாடாளுமன்றத்தில் பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் ஹாடி அவாங் ஷரியா நீதிமன்ற (கிரிமினல் நீதிபரிபாலனம்) சட்டம் 355 பற்றிய தனிநபர் திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்ய ஏதுவாக அவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா  செய்திருந்த சிறப்பு ஏற்பாடுகள், பிரதமரின்…

இந்தியர்கள் மேம்பாட்டுத் திட்ட வரைவு, ஏப்ரல் தினத் தமாஷா?

- டாக்டர் ஜெயக்குமார் சேவியர், ஏப்ரல் 2, 2017.   மலேசிய இந்தியர்கள் மென்மையானவர்கள்தான், இங்கு வாழும் தமிழர்கள் ஏமாளிதான் ஆனால் அவர்களை உலக மகா முட்டாள்கள் என்று பிரதமரும், ம.இ.கா தலைவர்களும் எண்ணிவிடக் கூடாது. மலேசிய இந்தியர்களான நாங்கள் முட்டாள்கள்  இல்லை என்பதைக் கூடிய விரைவில் பிரதமருக்கும்,…

இந்தியர்களிடையே காணப்படும் குற்றச்செயல்களும் – தமிழ்ப்பள்ளிகளும் – கா. ஆறுமுகம்

இந்தியர்களிடையே காணப்படும் குற்றச்செயல்களுக்கும்  குண்டர்தனத்திற்கும் அவ்வப்போதுத் தமிழ்ப்பள்ளிகளைச் சம்பந்தப்படுத்துவது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுவது போலாகும். இது தவிர்க்கப்பட வேண்டும். வறுமைக்கும் குற்றச்செயல்களுக்கும் இடையில் வலுவான தொடர்பு இருந்த போதிலும் ஏழைகளின் சரணாலயமாகத் தமிழ்ப்பள்ளிகள் இருக்கின்ற காரணத்தால் அவற்றின் மீது வெறுமனே பழி சுமத்துவது அதன் தார்மீகத்தன்மையைப்  பாதிக்கும்.…