போருக்கு பின் அமைதியான சூழலை இலங்கை பெற்றாலும், தமிழர்களுக்கென்று ஒரு தனி நாடு தேவை என்கிறார்கள் இலங்கை ஆளுங்கட்சியின் கவுன்சலர்கள். தமிழீழ போராட்டம் தமிழர்களுக்கு ஒரு சர்வதேச அளவில் தமிழ் தேசியம் என்ற அரசியல் சிந்தனையை உருவாக்கி உள்ளதை மறுக்க இயலாது என்கிறார்கள்.
பெரும்பான்மை தமிழர்கள் உள்ள நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த நான்கு நகரசபை, உள்ளூராட்சி உறுப்பிணர்களுடன் நடத்திய ஒரு சந்திப்பு, அங்குள்ள நடப்பு அரசியலை ஓரளவு விளக்குவதாக கூறுகிறார் சுவராம் மனித உரிமை கழகத்தின் தலைவர் கா. ஆறுமுகம். நேற்று மாலை நடந்த இந்தச் சந்திப்பில் நுவரேலியா பிரதேசிய சபாவின் தலைவர் சதாசிவன், நகரசபை உறுப்பிணர்கள் விஸ்வநாதன், இரவிராம், மயில்வாகனம் ஆகியோருடன் சிலாங்கூர் தமிழ்ச் சங்கத்தின் துணைத் தலைவர் இலா. சேகரனும் கலந்து கொண்டார்.
2009-ஆம் ஆண்டு இலங்கை அரசு மேற்கொண்ட இராணுவ தாக்குதலால் தமிழீழ போராட்டம் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்பட்டது என இலங்கை அரசு அறிவித்தது. அது ஓர் இன அழிப்பு என்றும், இன ஒழிப்பு என்றும் உலக அளவில் பலத்த கண்டணத்தை எதிர் நோக்கியது இலங்கை அரசு. இதற்கான நீதி தேவை என ஐக்கிய நாட்டு சபை ஏற்றுக்கொண்டாலும், அது கிடைக்கும் என்ற சாத்திய கூறுகள் இன்னமும் தென்படவில்லை.
இது சார்பாக வினவிய போது, “இராஜபக்சேயின் இனவாத அரசியலுக்கான ஆதரவு பெருமளவு குறைந்துள்ளது. ஆனால், இனவாத அரசியல் இல்லாமல் அங்கு ஆட்சி நடத்தும் காலம் இன்னமும் கனியவில்லை” என்கிறார்கள்.
இராஜபக்சேயை தோற்கடித்து கடந்த வருடம் ஜனவரியில் அதிபர் பதவியேற்ற மைத்திரிபாலா ஸ்ரீசேனா, இலங்கை தமிழர்களுகு ஒரு புத்துயிர் ஊட்டுவார் என்ற நம்பிக்கை எழுந்தது. ஆனால் அதை நடைமுறைக்குக் கொண்டு வரும் சூழல் இருப்பதாகத் தெரியவில்லை என்கிறார் ஆறுமுகம். இது சார்பாக யாரும் வெளிப்படையான கருத்துகளை கூற மறுக்கின்றனர் என்றார்.
“தற்போது அமைதி நிலவுகிறது. அது எங்களுக்கு முக்கியம். மேலும் எங்களின் வாழ்வாதரத்திற்கான வழி முறைகளை நாங்கள் உருவாக்க வேண்டும்” என்ற யாதார்த்த சூழலுக்கு விவாதங்களை கொண்டு செல்கின்றனர்.
இலங்கையில் உல்லாசப் பிரயாணத்துக்கு முக்கிய பகுதிகளில் ஒன்றான நுவரெலியா மாவட்டம் இலங்கையில் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகும். கடல் மட்டத்திலிருந்து 1500 அடி – 8000 அடி உயரத்தில் உள்ள இங்குதான் இலங்கையின் உயரமான மலையான பீதுருதாலகாலையும் அமைந்துள்ளது. சிவனொளி பாதம் அமைந்துள்ள சமனல மலைத்தொடரின் பெரும்பகுதி நுவரெலியா மாவடத்திலேயே மைந்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியின் காலத்தில் நுவரெலியா சிறிய இங்கிலாந்து என அழைக்கப்பட்டதாம்.
மாவட்ட மக்கள் தொகையில் 57.1% தமிழர்களாவர் (இலங்கைத் தமிழர் 6.5%, இந்தியத் தமிழர் 50.6%) இவர்களில் 93.1 சதவீத மக்கள் தேயிலைத் தோட்டங்களில் வசிக்கின்றனர். மாவட்ட தமிழர்களில் 77 சதவீதத்தினர் தேயிலை தோட்டங்கள் பெரும்பான்மையாக காணப்படும் நுவரெலியா, அம்பகமுவா பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கின்றனர். மாவட்டத்தில் 40.2 சதவீதத்தினர் சிங்களவராவர். இவர்களில் 85 சதவீதத்தினர் கிராமங்களில் வசிக்கின்றனர்.
இங்குள்ள நகரசபை உள்ளூராட்சி உறுப்பினர்களுக்கு தேர்தல் இல்லை. நியமனம்தான் செய்யப்டுகிறார்கள். தற்போது இதில் நியமனம் செய்யப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் தமிழர்கள்தான் என்கிறார்கள்.
மலேசியாவுக்கு வருகை தந்துள்ள அவர்கள் இங்குள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுடன் கலந்துறையாட ஆவல் கொண்டுள்ளதாக தெரிவித்தனர். இவர்களுக்கான உபசரிப்பை சிலாங்கூர் மாநில தமிழ்ச் சங்கத்தின் தலைவரும் கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பிணருமான மணிவண்ணனும் இலா. சேகரனும் ஏற்றுள்ளனர்.
போரும் அமைதியும் என்ற நாவவில் “தார்மீகமற்ற சூழலில், எப்படி நன்றாக வாழ இயலும்?” என்கிறார் டால்ஸ் டாய். இந்தக் கேள்விக்கு இவர்களிடம் பதிலில்லை என்கிறார் ஆறுமுகம்.
இலங்கை, இந்தியாவுடன் வல்லரசுகளும் கூட்டு சேர்ந்து நடத்திய தமிழின அழிப்பை எக்காலத்திலும் மன்னிக்க
முடியாது!!!
வரவேற்கிறோம் ..அருமையான பதிவு ..
தொழில் துறைகளில் உள்ள தமிழர்கள் அங்குவாழும் நம்மக்களுக்கு அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு ஆலோசனைகளையும் வாய்ப்புகளையும் காண்பிக்க வேண்டுகிறோம் ..
அவர்கள் ஊடாக அங்குள்ள வணிக வாய்ப்புக்களையும் நம்மவர்கள் பயன்படுத்திகொள்ளலாம் …சிங்களன் போர்வையில் ஆதிகாரம்செயும் கண்டி தெலுங்கு நாய்கேர்களின் வாரிசுகளால் ஒடுக்குமுறையில் இந்திய வம்சாவளி தமிழர்களும் கணிசமாக பாதிக்கபட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
அவர்களே பிரச்சனைகளை பேச்சு வார்த்தையின் மூலம் சுமூகமாக தீர்வு காணட்டும். அதை விடுத்து வெளிநாட்டு தமிழர் ஆதரவு என்று நீங்கள் குட்டையை குழப்பாமல் இருங்கள்.
தமிழர் ஒற்றுமையாய் இருப்பதில் உள் நாடு என்ன வெளி நாடு என்ன? எங்கிருந்தாலும் தமிழன் தமிழன்தான். எங்கே தமிழனுக்கு பிரச்சனை இருந்தாலும் ஒரு தமிழன் குரல் கொடுப்பதில் என்ன தவறு?உங்களால் முடியாது என்றால் விலகி இருங்க. .
பேச்சுவார்த்தை ???ஹி ஹி ஹி 60 வருடங்கள் …ஏமாறியது தமிழர்கள்
உண்மை ..தனி நாடு கனவு இன்னும் ஓங்கி வருகின்றது ஈழ தமிழர்கள் மத்தியில்
விடுதலை வேட்கை என்றும் தோல்வி கண்ட வரலாறு உலகில் இல்லை மத்திய இலங்கையில் பயணம் செய்தால் …எங்கும் தமிழ் பாடல்கள் வானொலியில் கேட்கும் …அந்த அளவிற்கு தமிழர்கள் ..இன்று மலையக தமிழர்களுக்கு பிரஜாவுரிமை ..வாக்கு உரிமை உண்டு ..அனால் தகர தமிழ் நாட்டை பின்பற்றுன் இவர்களின் தலிவர்கள் இவர்களை சொந்த லாபத்திற்கு விட்கின்ரர்கள் ..ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி கூட பத்திரிகை படிப்பது சாதாரண காட்சி
சமீபத்தில் EU நாடுகள் இலங்கைக்கு சர்வதேச ஜுறேர் கள் இலங்கை அனுமதித்தல் மாத்திரமே GST சலுகை கிடைக்கும் என்று சொல்லி உள்ளது ..ஈழ தமிழர்கள் சர்வதேச ரீதியில் எந்த அளவு பிரச்சாரம் செய்கின்றர்குள் என்பது தெரிகின்றது ..இன்று இலங்கை வரும் எந்த ஐரோப்பிய அமெரிக்க தலைவர்கள் ..அதிகாரிகள் தமிழா தலைவர்களை சந்திப்பது ஈழ பிரச்சினை யின் பலம் எப்படி என்று தெரிகின்றது ..எங்கே எங்கள் தாய் ..தகப்பன் …அக்கா ..அண்ணன் என்று கேள்வி கேட்டு ஒரு குழந்தை சமுதாயம் ஈழத்தில் வளர்ந்து வருகின்றது ..இவர்களுக்கு பதில் வேண்டும்
என்னைப் பொறுத்தவரை தனி நாடு என்று போராடுவதை விட முதலில் தமிழ் மாநிலமாக மாற வேண்டும். தமிழர்களுக்கு வேண்டிய வாழ்வாதார பிரச்சனை தீர்வு காண பட வேண்டும்.
சீரியன் சார் மாநில பேரில் இழந்தது போதும்…மீண்டும் வாடகை தமிழ் இன்மை வேண்டாம் .அது தமிழனின் மண் உரிமை…….காலமறிந்து களமாடவும் !
வெளிநாட்டு தமிழன் குரல் கொடுத்தால் பலியாகபோவது இலங்கை தமிழன் என்கிற யாழ்ப்பாணத்தான் தானே ! இன்னும் உரக்க குரல் கொடுங்கள் !
Saturday, May 28, 2016 3:06 pm – http://www.tamilwin.கம
முள்ளிவாய்க்கால் நிகழ்வை வைத்து மக்களையும் தமிழர்
———————————————————————————————————— தலைமையையும் கொச்சைப்படுத்தாதீர் !
————————————————————–
“ஆயுதப் போராட்டம் என்பது கடைசி வழி. அதில் கூட ஒற்றுமையில்லை. நானா தலைவன் நீயா தலைவன். பல இயக்கங்கள் ஆளுக்கு ஆள் கதையை வளர்த்து வாய்ச்சண்டை ஆத்திரம், கோபம் மேலீட்டினால் இயக்க மோதல்கள். கடைசியில் தமிழ் மக்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதாக நம்ம பெடியன்கள் என்று உசுப்பேற்றி அவங்களுக்குள்ளேயே ஆயுத பலப்பரீட்சை. இதனால் ஒரு சிலர் இராணுவத்திடம் சேர்ந்து காட்டிக் கொடுப்புக்கள். கடைசியில் தாங்களும் அழிந்தது மட்டுமன்றி தமிழ் மக்களையும் அவர்களின் உடமைகளையும் அழித்ததுதான் கண்ட மிச்சம்.”