இராகவன் கருப்பையா - ஒருவரின் இறப்புச் செய்தி வரும் போது யாரிடம் எப்படி அனுதாபம் தெரிவிப்பது எனும் வழிமுறைகளை இன்னமும் நிறைய பேர் தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். பொதுவாக, மரணமடைந்த ஒருவருடைய குடும்பத்தினரிடமோ, நெருங்கிய உறவுகளிடமோ, நண்பர்களிடமோ, "எனது ஆழ்ந்த அனுதாபங்கள்," என்று குறிப்பிடுவதுதான் முறை, வழக்கமும் கூட.…
மலேசிய நாம் தமிழர் இயக்கம் ஏற்பாட்டில் இடைநிலைப் பள்ளி தமிழ்…
பேராக், சுங்கை சிப்புட் வட்டாரத்தில் இருக்கும் டத்தோ அசித் அப்துல் வகாப் இடைநிலை பள்ளி தமிழ் மாணவர்களுக்கு தனது சொந்த இன, மொழி, வரலாறு, வாழ்வில் குமரிக் கண்ட தொன்மையை விளக்க மாதாந்திர தமிழர் வரலாறு வகுப்பு மலேசிய நாம் தமிழர் இயக்கம் நடத்தி வருகிறது உலகத்தின் மூத்த…
கடப்பிதழுக்கு இலக்கு வைக்கும் திருடர்கள் – நூர் அஸ்மான்
வீடு புகுந்து திருடுபவர்கள் பெரும்பாலும் மலேசியக் கடப்பிதழுக்கு இலக்கு வைப்பதால், மலேசியர்கள் தங்களின் கடப்பிதழைப் பத்திரப் படுத்தி வைக்க வேண்டும் என்று பத்துமலை, தாமான் ஸ்ரீ கோம்பாக் வட்டார தன்னார்வ ஊர்க்காவல் படை(ருக்குன் தெத்தாங்கா)த் தலைவர் நூர் அஸ்மான் பொது மக்களைக் கேட்டுக் கொண்டார். உலக அளவில் மலேசியக்…
சுறவகாற்குள” தைப்பூச திருநாளை தமிழர்கள் தமிழர் நெறியோடு முன்னெடுக்க வேண்டும்
சுறவகாற்குள” தைப்பூச திருநாளை தமிழர்கள் தமிழர் நெறியோடு முன்னெடுக்க வேண்டும் மலேசிய நாம் தமிழர் இயக்கம் வேண்டுகோள் குறிஞ்சி நில மன்னன் தமிழர் இறையோன் முப்பாட்டன் முருகனின் தைப்பூச திருவிழாவை மலேசிய தமிழர்கள் தமது தொன்றுதொட்ட மரபு வழி தங்கள் நேர்த்தி கடனை தமிழர் நெறியுடன், இறை உணர்வுடன்…
தமிழ்த்தாய் வாழ்த்தை அவமதித்த விசெயேந்திரர் செயலை – மலேசிய நாம்…
சென்னையில் பேராசிரியர் அரியரன் எழுதிய நூல் வெளியீடு விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதும் ஆளுநர் உள்ளிட்ட அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்கையில், காஞ்சி இளைய மடாதிபதி விசெயேந்திரர் மட்டும் எழுந்து நிற்காமல் அவமதிப்பு செய்ததை மலேசிய நாம் தமிழர் இயக்கம் கடுமையாக கண்டிக்கிறது என அதன்…
கைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் கூட்டுப் பரிவர்த்தனை சிறைச்சாலைகள் எதற்காக?
‘ஞாயிறு’ நக்கீரன் - நாட்டின் தென்புலத்தில் உள்ள மாநிலமான ஜோகூரைச் சேர்ந்தவர்கள், அந்த மாநிலத்தைக் குறிப்பிடும்போதெல்லாம் ‘ஜோரான ஜோகூர்’ என்று பெருமையாக சொல்லிக் கொள்வது வழக்கம். அப்படிப்பட்ட மாநிலத்தில் உள்ள ஒரு சிறைச் சாலையில் உள்ள கைதிகளும் அதிகாரிகளும் போதைப் பொருள் பாவனையிலும் பரிவர்த்தனையிலும் ஜோராக ஈடுபட்டுள்ளனர் என்னும்…
டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் 4-ஆவது பன்னாட்டு புத்தகப் பரிசுப்…
‘ஞாயிறு’ நக்கீரன், தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் டான்ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி-இலக்கிய அறவாரியத்தின் நான்காவது பன்னாட்டு புத்தகப் பரிசுப் போட்டி அறிவிக்கப் பட்டுள்ளது. இலக்கியப் படைப்பு ஓர் இனத்தின் காலக் கண்ணாடி என்பதாலும் சமூக-பண்பாட்டுக் கூறுகளின் வெளிப்பாடு என்பதாலும் கடந்த 2012 முதல் ஈராண்டுகளுக்கு ஒருமுறை இந்த…
நீல வண்ண சீருடைக்குள் ஓர் இலக்கிய ஆளுமை தெய்வீகனுக்கு செம்பருத்தி…
‘ஞாயிறு’ நக்கீரன், ஜனவரி 1, 2018. தீபகற்ப மலேசியாவின் வடபுலத்து மண்டலமாகவும் மலாய்க்காரர் அல்லாதவர் முதல்வராக இருக்கும் ஒரே மாநிலமாகவும் இருக்கும் பினாங்கு மாநில காவல் துறைத் தலைவராக பொறுப்பேற்கும் டத்தோ ஆ.தெய்வீகனுக்கு செம்பருத்தி இணைய இதழ் முதற்கண் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறது. தன்னுடையை காவல் துறைப் பயணத்தில்…
மஇகா செனட்டர் நியமன தள்ளிவைப்பும் பொதுத்தேர்தலும்!
விடுதலை அடைந்த நாள் முதல் நாட்டின் அதிரகாரக் கட்டிலை அயராமல் இறுகப் பற்றிக் கொண்டிருக்கும் தேசிய முன்னணி, தன் சிம்மாசனத்திற்கு ஏன் மணி விழாவைக் கொண்டாடவில்லை எனத் தெரியவில்லை. ஒருவேளை இந்த ஆண்டு பிறந்ததுமே அடுத்த ஆண்டு நடைபெற வேண்டிய பொதுத் தேர்தலைப் பற்றிய பயம் தொற்றிக் கொண்டதோ…
சோழர் பாலம்
சோழர் பாலம் வடநாட்டான் குரங்கை வைத்து ராமன் கட்டிய பாலம் என்கிறான், வெள்ளக்காரன் ஆடம் ப்ரிஜ் என்கிறான். இப்போதான் தெரியுது இது சோழ மன்னர்கள் இல ங்கை யை ஆண்ட போது அவர்களின் படைபட்டா ளங்கல் செல்வ தற்க்காக கட்டிய பாலமாம் ,சோழர்கல் எனும் போது அதை நம்பலாம்,…
தொகுதிக்காக ஓயாத சண்டை! நஜிப் என்ன செய்கிறார்?
‘ஞாயிறு’ நக்கீரன், டிசம்பர் 14, 2017. தற்போதைய பதின்மூன்றாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேசிய முன்னணி சார்பில் 222 தொகுகளுக்குமான தேசிய முன்னணி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்ட பின்னர்தான் தொகுதிக்கான சண்டை ஓயும் போல தெரிகிறது. தேசிய முன்னணியில் இந்திய அரசியல்வாதிகளிடம்தான் இப்படி தொகுதிக்காக சண்டையும் சச்சரவும் நீடிக்கிறதா அல்லது மலாய்,…
ஐ.நா. மன்றத் தலைவர் தொடக்கி வைத்த சுங்கை சிப்புட் காந்தி தமிழ்ப்பள்ளி
‘ஞாயிறு’ நக்கீரன் - மலாயா எங்கும் விடுதலை வேட்கையும் சுதந்திர தாகமும் பரவியும் விரவியும் இருந்த நேரம் அது; மெர்டேக்கா கிடைக்கப் போகிறது என்ற நிலையில்.. .. கிடைத்தே விட்டது என்னும் மனப்பான்மையில் மலாயா மக்கள் இனம்-மொழி-சமயம் பாராது ஒருமித்த உணர்வில் இன்ப வெள்ளத்தில் திளைத்திருந்த நேரம் அது.…
நல்லா பல்லக்கு தூக்குகிறார் நல்லா!
வெண்கதிரன் - இந்திய வாக்காளர்களின் பேராதரவுடன் பிரதமர் நஜிப் மீண்டும் பெரிய வெற்றி பெறுவார் என்று அண்மையில் அறிக்கை வெளியிட்ட அறிக்கை அரசியல்வாதியான டான்ஸ்ரீ நல்லா கே.எஸ்., தேசிய முன்னணிக்கு பல்லக்கு தூக்குவதில் வல்லவராகத் திகழ்கிறார். தவணை முறையில் வாங்கும் மானியத்திற்கும் வழங்கப்பட்டுள்ள செனட்டர் பதவிக்கும் வஞ்சகமில்லாமல் பணியாற்றுகிறார்.…
பத்மாவதி பற்றி பிரகாஷ்ராஜ் – தமிழோசை சிறப்பு நேர்காணல்
வில்லன், குணசித்தரப் பாத்திரம், நாயகன் என்றெல்லாம் எல்லா வகையாலும் தன்னுடைய நடிப்புத் திறமையை செம்மாந்த நிலையில் வெளிப்படுத்தி வருபவரும் தமிழ்-கன்னட இரசிகர்களை வெகுவாகவும் மலையாள திரைப்பட இரசிகர்களை ஓரளவிற்கும் கவர்ந்தவருமான பிரகாஷ் ராஜ், ஒரு சமூக ஆர்வலர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரின் தாய்மொழியான கன்னட மொழியைச் சேர்ந்த…
ஹிண்ட்ராஃப் பதிவு: சங்கப்பதிவகம் பின்வாங்குகிறது, தேசிய முன்னணி அஞ்சுகிறது.
கோலாலம்பூர், நவம்பர் 27: நாட்டின் பன்னிரண்டாவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி மூன்றில் இரு மடங்கு பெரும்பான்மையை நாடாளுமன்றத்தில் இழக்கவும் ஐந்து மாநிலங்களில் ஆட்சியை இழக்கவும் காரணமான ஹிண்ட்ராஃப் கட்சியைக் கண்டு ‘சூடு கண்ட பூனை’யைப் போல தேசிய முன்னணி அஞ்சுகிறது. அதனால்தான், ஹிண்ட்ராஃப் இயக்கத்தை ஓர் அரசியல்…
ஹிண்ட்ராஃப் நவம்பர் எழுச்சி
‘ஞாயிறு’ நக்கீரன், 21 - ஆம் நூற்றாண்டில் மலேசியவாழ் இந்திய சமுதாயம் அரசியல்-சமூக மறுமலர்ச்சியை ஓரளவிற்காவது எட்டியுள்ளது என்றால் அதற்கு, பத்து ஆண்டுகளுக்கு முன் இதே நவம்பர் திங்கள் 25-ஆம் நாளில் ஹிண்ட்ராஃப் இயக்கத்தின் எழுச்சி ஒருமுகப்பட்டு தலைநகரில் வெளிப்பட்டதுதான். அதேவேளை, இந்திய சமுதாயம் பொருளாதார - கல்வி…
இன்று எரி நெய்(பெட்ரோல்) விலை குறையக்கூடும்?
‘ஞாயிறு’ நக்கீரன், இனி வாகனங்களைப் பயன்படுத்து வாய்ப்பு பொது மக்களுக்கு அற்று விடுமோ என்று ஐயுறும் அளவிற்கு பன்னாட்டுச் சந்தையில் எரிணெய் விலை ஒரு பீப்பாய்க்கு 140 டாலர் வரை உயர்ந்தது. அப்போதுகூட மலேசியாவில் இந்த அளவுக்கு பெட்ரோல் விலை உயர்ந்தது இல்லை. இப்போது வெறும் அறுபது டாலர்…
யோக ஆசனத்தைக் கண்டவர்கள் அன்றைய தமிழ்ச் சித்தர்கள்! உடற்பயிற்சியை அடியோடு…
‘ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 22, 2017. ‘உடற்பயிற்சி’ என்னும் சொற்றொடரை தமிழர்கள் அடியோடு தொலைத்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டன. அத்துடன் உடற்பயிற்சியையும் மறந்தே விட்டனர். அப்படியே போகிற போக்கில் ஏதாவது மனமகிழ் மன்றம், அல்லது சமூக அமைப்பு-களின் சார்பில் எங்கேயாவது ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கைகளையும்…
பினாங்கு வெள்ளத்திற்குக் காரணம் கரும வினையா? பிற்போக்குத்தனத்தின் உச்சம்
‘ஞாயிறு’ நக்கீரன், இந்த மாத தொடக்கத்தில் பினாங்கு மாநிலத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பிரச்சினைக்குக் காரணம் ஒரு சிலரின் கரும வினைதான் காரணம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும், மாண்புக்குரிய நாடாளுமன்றத்தில்; அப்படிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருப்பவர் ஆளும் தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். பெர்லிஸ், பாடாங் பெசார்…
ஸ்ரீகோம்பாக் ருக்குன் தெத்தாங்கா ஏற்பாட்டில் தீபாவளி பொது உபசரிப்பு
பத்துமலைக்கு அருகில் உள்ள தாமான் ஸ்ரீகோம்பாக்கில் தீபாவளி பொது உபசரிப்பு அண்மையில் நடைபெற்றது. தாமான் ஸ்ரீகோம்பாக், பத்தாவது பிரிவில் அமைக்கப்பட்டுள்ள ருக்குன் தெத்தாங்கா அமைப்பினர், பொது ஒழுங்கையும் மக்களிடையே நல்லிணக்கத்தையும் வட்டார அளவில் பேணுவதுடன் இரவு நேரத்தில் பாதுகாவல் சுற்றுப் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர். அதன்பேரில் பாசா பத்து,…
அன்வார், பிரதமராக ஆதரவு பிராயசித்தம் தேடுகிறார் மகாதீர்.
‘ஞாயிறு’ நக்கீரன், நவம்பர் 7, 2017 - அரசியல் பழிவாங்கலுக்கு ஆளானவர் அன்வார் என்றும் தற்பொழுது அவர் அனுபவித்து வரும் சிறைவாசத் தீர்ப்பில் அரசாங்கத்தின் தலையீடு அப்பட்டமாக இருக்கிறது என்றும் இப்பொழுது சொல்லும் டாக்டர் மகாதீர், அப்பொழுது தான் செய்ததை நினைவுகூர்கிறாரோ என்று எண்ணிடத் தோன்றுகிறது. நீதிமன்றம், காவல்துறை,…
கேமரன் மலை நிலைகொள்ளும் கேவியஸ், நெகிரியில் களம் காண்கிறார் சி.…
‘ஞாயிறு’ நக்கீரன், வரும் பொதுத்தேர்தலில் கேமரன் மலையில் ஜசெக மனோகரனை எதிர்த்து களம் காணப்போவது ஏறக்குறைய கேவியஸ் என்று உறுதியாகிவிட்ட நிலையில், அங்கு மஇகா சார்பில் களம் காணக் காத்திருந்த சி.சிவராசா நெகிரி செம்பிலானில் போட்டியிடுவதற்கு ஏதுவாக இன்னொரு தொகுதி அடையாளம் காணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி புத்ராஜெயா…
வீட்டு பணிப்பெண்கள்: இடைத்தரகர் கொட்டத்திற்கு முடிவு
‘ஞாயிறு நக்கீரன்’,அண்மைக் காலத்தில் தேசிய முன்னணி கூட்டரசு எடுத்த சில நல்ல முடிவுகளில் வீட்டு பணிப்பெண்களை இனி குடும்பப் பொறுப்பாளர்களே நேரடியாக அமர்த்திக் கொள்ளலாம் என்று எடுத்த முடிவு, குறிப்பிடத்தக்க நல்ல முடிவு ஆகும். அண்மையில் புத்ரா ஜெயா எடுத்த இந்த முடிவின் பிரதிபலிப்பு தேசிய அளவில் பிரதிபலிப்பதுடன்…
நாட்டில் 2000 பள்ளிகள் பாழடைந்த நிலையில்.. .. 2018 நிதிநிலை…
‘ஞாயிறு’ நக்கீரன், நாடு விடுதலை அடைந்தது முதல் நாட்டின் அதிகாரக் கட்டிலில் அயராமலும் சலிக்காமலும் அமர்ந்திருக்கும் தேசிய முன்னணிக்கு பதவி மோகம் தீர்ந்தபாடில்லை. இது, இந்த அரசியல் முன்னணியைச் சேர்ந்த ‘பெரியண்ணன்’ அம்னோ உயர்மட்டத் தலைவர்கள் மேடையேறும் போதெல்லாம் பளிச்சென வெளிப்படுகிறது. இந்த அரசியல் கூட்டணியின் ‘பெரிய தம்பி’,…
























