முதலில் பிராமணர் அல்லாதோருக்கான ஆட்சி என்பதல்ல. பிரிட்டீஷ் அரசாங்கத்தில் அதிகாரம் பெறுவது என்பது தான்.
அன்றைய காலகட்டத்தில் பிரிட்டீஷார் அரசில் பெரும்பாலும் அதிகார மட்டத்தில் இருந்தவர்கள் கல்வி கற்ற பிராமணர்களே.
ஜமீன்தார்கள் , மிட்டாமிராசுகள் , பெரும் நிலவுடைமையாளர்கள் போன்றவர்களிடம் வரி வசூல் செய்யும் பொறுப்பு பிராமண அதிகாரிகளிடமே இருந்ததாக கூறப்படுகிறது. இந்த புகைச்சல் சுமார் 100 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருந்துள்ளது.
அவ்வாறு பிராமணர்களின் அதிகாரத்தை ஒடுக்கும் நோக்கில் டி.எம் .நாயர் , தியாகராய செட்டி போன்ற செல்வந்தர்களால் பிராமணர் அல்லாதோருக்கான நீதிகட்சி தொடங்கப்பட்டது. நீதிகட்சியில் அங்கம் வகித்தவர்களின் பெயர்களையும் பின்புலத்தையும் பார்த்தாலே தெரியும் அது சாமானியர்களுக்கானது அல்ல என்று. நீதிகட்சி தொடங்கப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் கழித்தே ஈவேரா அதில் இணைந்தார். அது வரை அவர் காங்கிரஸில் குப்பை கொட்டிக் கொண்டிருந்தார். ( காங்கிரஸில் இருந்து அவர் வெளியேறவும் அங்கிருந்த பிராமண ஆதிக்கமே காரணம் என முன்மொழிந்துள்ளார். பிராமண வெறுப்பை கக்குவதற்கு நீதிகட்சி அவருக்கு சரியான புகழிடமாக இருந்தது.)
[ மொண்டேகு கெம்ஸ்ஃபோர்ட் அரசியல் சீர்திருத்தங்களின் விளைவாக இந்திய அரசுச் சட்டம், 1919 இயற்றப்பட்டு, சென்னை மாகாணத்தில் இரட்டை ஆட்சி முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. இம்முறையின் கீழ் 1920ம் ஆண்டு முதலில் நடைபெற்ற தேர்தலில் நீதிக்கட்சி பங்கேற்று வெற்றி பெற்றது. 1920–37 காலகட்டத்தில் இரட்டை ஆட்சி முறையில் ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகளே. சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி தேசியவாத இந்திய தேசிய காங்கிரசு கட்சிக்கு அரசியல் மாற்றாகச் செயல்பட்டது. 13 ஆண்டுகள் பதவியில் இருந்த நீதிக்கட்சி 1937 தேர்தலில் காங்கிரசிடம் தோல்வியடைந்தது. இத்தோல்வியிலிருந்து அதனால் மீளமுடியவில்லை. 1938 இல் பெரியார் ஈ. வே. ராமசாமி நீதிக்கட்சியின் தலைவரானார். 1944ல் கட்சியைத் திராவிடர் கழகமாக மாற்றிய ஈ. வே. ராமசாமி, கட்சி தேர்தல்களில் போட்டியிடுவதை நிறுத்தினார். ஆனால் இம்மாற்றத்தை ஏற்காத ஒரு குழுவினர் “நீதிக்கட்சி” என்ற பெயரில் போட்டிக் கட்சி ஒன்றைத் தொடங்கி 1952 தேர்தலில் போட்டியிட்டனர். அதன் பின்னால் அப்பிரிவு மெதுவாகச் செயலிழந்து விட்டது.]
சுருக்கமாக சொன்னால்
வடுகர் vs பிராமணர்
என்ற அதிகார போட்டியை
தமிழர் vs பிராமணர்
என மடைமாற்றி இன்றுவரை
தமிழர் என்ற போர்வையில்
திராவிட வடுக நாதாரி கூட்டங்கள் எல்லா பழியையும்
பிராமணர்கள் மீது மட்டுமே சுமத்தி சாமர்த்தியமாக நம் தலையில் அமர்ந்து அதிகாரம் செலுத்தி வருகின்றனர்.
உலகத்தை ஆண்ட தமிழன் பேசியே செத்தான்
-பொன் ரங்கன்
தமிழர் தேசியம் மலேசியா
ஐயா விளக்க வேண்டுகிறேன் :- பெரியார் 100 % வடுகன் vs பார்ப்பனன் என்னும் கருத்தை விளக்கவும். பெரியார் காலத்தில் தமிழ் நாட்டில் தமிழர்கள் [அணைத்து சமூகத்தினரும் ( பார்ப்பனன் வகுத்த )] சம உரிமையுடன் வாழ்ந்தனரா? பெரியார் மேற்கொண்ட சுய மரியாதை பரப்புரைகள் தமிழர்களுக்கு எந்த பலனும் கொண்டு வரவில்லையா ? தமிழர்களுடைய வேலை வாய்ப்பு எவ்வாறு அமைத்திருந்தது அக்காலத்தில் ? அணைத்து சமூகத்தினரும் கோவில் உட்செல்ல அனுமதி உண்டா? பெரியார் சாதியே மறுத்தார் என்பது பொய்யா அல்லது பார்ப்பனியத்தை மட்டும் எதிர்த்தாரா ? மொழி வழி மாநிலங்கள் பிரிக்கும் வரை தென் இந்தியா “மெட்ராஸ் ” மாகாணம் தமிழ் நாடு அன்று. பெரியாது தமிழர் அல்லர் என்பதற்காக அவர் செய்த அனைத்தும் கொச்சை படுத்துவது நன்றன்று ! ” நன்றி மறப்பது நன்றன்று , நன்றல்லது அன்றே மறப்பது நன்று ” என்று அய்யன் வள்ளுவன் சொன்னது தமிழர்கள் மறைத்து விட்டார்கள்……….
தியாகு அவர்களே, பெரியாருக்கு முன்பே சாதி ஒழிப்பு, கோயில் நுழைவு போராட்டங்கள் பலராலும் முன்னெடுக்கப்பட்டுவிட்டது. என்ன ஒன்று அவரது கழக சீடர்கள் இந்த சமூக நீதியை பெற்றுக் கொடுத்தது பெரியார் மட்டுமே என்ற பிம்பத்தை தொடர்ந்து கட்டமைத்துவிட்டார்கள். தமிழக எல்லை பிரிப்பில் தமிழர் உரிமைகளை பெரியார் கண்டுகாமல் இருந்து விட்டார், கீழ் வெண்மணி படுகொலைகளை சாதி பாசத்தால் கண்டிக்காமல் கொலையுண்ட தலித்துகளை கொச்சைபடுத்தவும் செய்தார். அவர் வாழ்நாளில் அவர் ஒரு முறைகூட கோயில் நுழைவு போராட்டம் செய்ததில்லை. வைக்கம் போராட்டம் கேரள காங்கிரஸ் முன்னின்று நடத்தியது. பெரியார் கெஸ்டாக போய் கலந்து கொண்டார். அதுக்கு போய் திகாவினர் அவரை வைக்கம் வீரர் என்று கொண்டாடி வருகின்றனர். இப்பவும் தமிழ்நாட்டில் தமிழர்கள் வேலைவாய்ப்பில் பிந்தங்கியே உள்ளனர். அரசியல், கல்வித்துறை, காவல்துறை, வணிகம், சினிமா என்று எதைத் தொட்டாலும் தமிழர்கள் ௧௫ சதவிகிதம் கூட தேற மாட்டார்கள். இன்று மத்திய அரசும் வடவர்களும் தமிழர்களை விரோதமாக பார்க்க முழுமுதல் காரணம் பெரியார் விதைத்த ஆர்ய பார்பண, இந்து விரோத கருத்துக்களே.
பெரியார் வெற்றி பெற்றிருந்தால் தமிழகத்தில் சாதி ஒழிந்திருக்க வேண்டுமே. அதற்காக பெரியார் ஒன்றுமே செய்யவில்லை என்று கூறவில்லை. அதற்காக தமிழன் கோவணம் கட்டினாலும் பெரியாரால்தான் என்று கூறுவதை சகிக்க முடியவில்லை.
நாராயணன் அவர்களே, பெரியாருக்கு முன்பே சாதி ஒழிப்பு முன்னெடுக்க பட்டிருந்தால் அதன் வெற்றி அமைந்து இருந்தது ? யாரால் முன்னெடுக்க பட்டது ? அப்படி இருக்குமாயின் எப்படி பெரியார் காங்கிரஸ்யிலுருந்து வெளியேறும் வரையில் குல தொழிழ் கல்வி தமிழ் நாட்டில் அரங்கேறியது ? அப்படி முன்னெடுக்க பட்டிருந்தால் ஏன் பெரியார் இதை மறுபடியும் கையில் எடுக்க வேண்டும் ? எல்லை பிரிப்பில் தமிழ் நாட்டு அரசாங்கம் என்ன செய்தது ? தான் கடவும் நம்பிக்கை இல்லாமல் இருந்திருந்தாலும் தாழ்த்தப்பட்டவர்கள் கோயில் நுழைய போராட்டம் நடத்தவில்லை என்பது முழு பூசணியை சோற்றில் மறைப்பது போன்று !இக்கால கட்டத்தில் தி க உருவாக வில்லை . வைக்கம் போராட்டம் பெரியார் தலைமையில் தான் நடைபெற்று வெற்றி அடைந்தது இதை மறுப்பது வரலாறு அறியாத போக்கு .
தற்போதைய தமிழ் நாட்டின் சூழ்நிலை காரணம் தி மு க மற்றும் ஆ தி மு க தான், இவை இரண்டும் தமிழர் விரோதி கடசிகளே . பெரியார் பெயரை இந்த குள்ள நரிகள் உபயோகித்து கொண்டார்களே ஒழிய இவர்கள் தன வாரிசுகள் என்று என்றுமே கூறியதில்லை ! பெருந்தலைவர் காமராசர் ஐயாவை வற்புறுத்தி CM ஆக்கியதே இவர்தான் , தமிழ் நாட்டை ஒரு பச்சை தமிழன் ஆழ வேண்டும் என்று வற்புறுத்தியதே பெரியார் தானே ..தமிழ் நாட்டில் தமிழன் தன் மானதுடன் வாழ பெரியாரே உந்துகோல்…….