10 மிளகு இருந்தால் போதுமே: இவர்களுக்கு மட்டும் ஆபத்துள்ளது

நச்சுத்தன்மையை முறியடிக்கும் வல்லமை கொண்ட மிளகு ஆயுர்வேத மருத்துவத்தில் விஷம் மாற்றும் மருந்துகளில் மிகவும் முக்கியமானதாக பயன்படுகிறது.

மிளகை எப்படியெல்லாம் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்?
  • மிளகை இட்லி மற்றும் தோசைக்கு பொடி செய்து தொட்டுக் கொள்ளலாம் அல்லது மிளகைப் பொடித்து நெய் அல்லது நல்லண்ணெய் விட்டு சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம்.
  • மிளகை ரசமாக வைத்து சேர்த்துக் கொள்ளலாம் அல்லது ஒரு கிராம் மிளகுப் பொடியை தேனில் கலந்து இருவேளை சாப்பிட்டு வந்தால் ஜீரணத் தொல்லை குணமாகும்.
  • சீரகம், மிளகு, உப்பு ஆகியவை சேர்த்து பொடித்து அதை சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதனால் செரிமானப் பிரச்சனை தடுக்கப்படும்.
  • மிளகை நல்லெண்ணெயில் பொரித்து வெல்லம் சேர்த்துச் சாப்பிடலாம் அல்லது மிளகையும், வால்மிளகையும் நெய்யில் பொரித்து சாப்பிட்டால், இருமல் குறையும்.
  • மிளகையும், துளசியையும் கடித்து மென்று சாப்பிட்டு வந்தால், குளிர் காய்ச்சல், அலர்ஜி மற்றும் தடிப்புகள் குணமாகும்.
  • மிளகை தூள் செய்து தேனில் நன்கு குழப்பி நடுவிரலில் துவைத்து தொண்டையினுள் தடவ உள்நாக்குத் தொங்குதல், இருமல், தொண்டை கரகரப்பு குறையும்.
  • பசுவின் பாலில் மிளகை ஊற வைத்து அரைத்து, சாப்பிட்டு வந்தால், பல் வலி குறையும்.

மிளகை வேறு எப்படி பயன்படுத்தலாம்?
  • மிளகு தூள், வெங்காயம், உப்பு ஆகிய மூன்றையும் அரைத்துத் தலையில் புழு வெட்டுள்ள இடத்தில் தடவி வந்தால், முடி நன்கு முளைக்கும்.
  • மிளகு, சோம்பு ஆகிய இரண்டையும் தூள் செய்து, அதனுடன் வெல்லம் சேர்த்து இடித்து, தினமும் இரு வேளைகள் சாப்பிட்டு வந்தால், ஆசனவாய் வலி குணமாகும்.
  • ஊசி முனையில் மிளகைக் குத்தி, அதை அனலில் காட்டி அதன் புகையை மூக்கினுள் செலுத்தி சுவாசித்தால், மூக்கடைப்பு, கட்டிச்சளி, நீர்க்கோர்வை, தலைவலி போன்றவை குணமாகும்.
  • மிளகு, தர்ப்பைப் புல், சீரகம் ஆகியவற்றை மை போல் அரைத்து நெல்லிக்காய் அளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், அனைத்து வகையான விஷமும் முறியும்.
மிளகை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?

வயிற்றில் குடற்புண், அதிக ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் ரத்தம் உறையும் தன்மையைத் தடுக்க மாத்திரைகள் சாப்பிடுபவர்கள் இந்த மிளகை தவிர்ப்பது மிகவும் நல்லது.

-lankasri.com