நிலக்கடலை சாப்பிடுவதால் பல்வேறு நன்மைகள் இருக்கலாம். அதுவே தினமும் அதிகமாக சாப்பிட்டு வந்தால், அது பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
நிலக்கடலை அதிகம் சாப்பிடுவதன் தீமைகள்?
- சாதரணமாக வறுத்த கடலையில் 166 கலோரியும், எண்ணெயில் வறுத்த கடலையில் 170 கலோரிகளும் உள்ளது. இதை தொடர்ந்து எடுத்துக் கொள்வதால், கொழுப்பு அதிகமாகி, உடல் பருமனாகும்.
- நிலக்கடலையை அதிகம் சாப்பிட்டுவிட்டு குறைந்த அளவிலான உணவுகளை எடுத்துக் கொண்டால் சத்துக்குறைபாடு பிரச்சனைகள் ஏற்படும்.
- நிலக்கடலையில் அதிகளவு புரோட்டின் மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளது. அதனால் தொடர்ந்து சாப்பிடும் போது, உடல்நலக் குறைப்பாட்டை ஏற்படுத்தும்.
- நிலக்கடலையில் அதிகப்படியான போஸ்போரஸ், ஃபைட்டிக் ஆசிட் உள்ளது. இந்த ஆசிட் நம் உடலுக்கு தேவையான மற்ற மினரல்களை உறிஞ்சி. உடலின் செயல்பாட்டை குறைத்துவிடும்.
- நிலக்கடலையில் சோடியம் குறைவாக உள்ளது. எனவே இதை தொடர்ந்து எடுக்கும் போது சோடியம் அளவு அதிகமாகி, ரத்த அழுத்தத்தை அதிகரித்து, மாரடைப்பு, வாதம் போன்ற பிரச்சனையை உண்டாக்கும்.
- நிலக்கடலையில் அதிகப்படியான லெக்டீன் உள்ளது. அதனால் உணவுகள் எளிதில் ஜீரணமாவதை தடுத்து, எலும்புகளில் வீக்கம், எலும்பு தேய்மானம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
- நம் உடலுக்கு ஒமேகா 3 மற்றும் 6 இரண்டுமே அவசியம். ஆனால் நிலக்கடலையில் ஒமேகா 6 மட்டுமே உள்ளது. எனவே நிலக்கடலையை அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது, உடல்நலக்குறைவு உண்டாகும்.
-lankasri.com