இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
சிறிலங்கா மீதான கண்காணிப்பு தொடரும் – கூட்டமைப்பிடம் உறுதியளித்த ஐ.நா…
சிறிலங்கா மீதான ஐ.நாவின் நெருங்கிய கண்காணிப்பும், ஈடுபாடும் தொடரும் என்று அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார். கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் நேற்று…
இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை: முன்னாள் நீதிபதிகள் குழு விசாரிக்கும்
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக கண்டியில் நடந்த வன்செயல்கள் குறித்து விசாரணை நடத்தும் வகையில் மூன்று முன்னாள் நீதிபதிகளை கொண்ட குழு ஒன்றை அமைப்பது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முடிவு செய்துள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது. கண்டியில் நடந்த அக்கிரமங்களை இந்தக் குழு ஆராயும். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டமை,…
இலங்கையில் முஸ்லிம்கள் மீது தாக்குதல்..! கலவரத்தின் ஆரம்பப்புள்ளி எது?
தற்போது இலங்கையில் நிகழ்ந்து வரும் கலவரங்கள் குறித்து, சரியான பார்வை, கொண்டிருக்கும் இக் கட்டுரையினை, கட்டுரையாளர் சோமீதரன் மற்றும் வெளியீடு செய்துள்ள விகடன் குழுமத்துக்குமான நன்றிகளுடன் இங்க மீள்பதிவு செய்கின்றோம். அமுக்கு அமுக்கு இன்னும் சற்றே அதிகம் அமுக்கு அழுத்தம் அதிகரிக்கும் வெடிப்பு நிகழும் சுடு சுடு நூறு…
கண்டியில் முப்படைகளும் குவிப்பு – திரும்பிய திசையெங்கும் கவசவாகனங்கள்
கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். “சிறிலங்கா இராணுவத்தினர் 2500 பேரும், கடற்படையினர் 600 பேரும், விமானப்படையினர் 30 பேரும், பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு உதவத் தயார்…
இலங்கை: ”தமிழர் இலக்கு வைக்கப்பட்டது போல முஸ்லிம்கள் மீது இலக்கு”
இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதுபோல, கண்டி மாவட்டத்தில் இப்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சிங்கள இனவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கையின் முக்கிய முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிபிசியிடம் கூறியுள்ளார். இவர் பாதிக்கப்பட்ட பகுதிகளில்…
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு!
இலங்கையில் மீண்டும் தலைதூக்கியிருக்கும் இனவாதப் பாம்பு. சிங்களவருக்கோ தமிழருக்கோ இஸ்லாமியருக்கோ ஏன் முழு இலங்கைக்குமே நல்லதல்ல. புற்றுக்குள் ஓய்ந்திருக்கும் பாம்பு இரை தேடி வருவது போல், இந்த இனவாதப்பாம்பும் சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து வெளியே வரும். இந்த விவகாரத்தை சமூகநலன் கருதி தீர்க்கதரிசனத்துடன் அணுகவேண்டும். உணர்ச்சிவசப்படுதலை புறம் ஒதுக்கி அறிவுபூர்வமாக…
இலங்கையில் நடப்பதும், நடக்கவிருப்பதும்…! – 4 முக்கிய கேள்வி பதில்கள்
இலங்கையில் கண்டி மாகாணத்தின் மத்திய பகுதி ஒன்றில், பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கும் இடையே எற்பட்ட மோதலை அடுத்து, மார்ச் மாதம் 6-ஆம் தேதி, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனை அங்குள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில்…
இலங்கை: கலவரம் தொடர்பாக 81 பேர் கைது
கண்டி கலவரம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை 81 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெளத்த இயக்கத்தின் இளம் தலைவரும் ஒருவர். அண்மைய கண்டி கலவரத்திற்கு காரணமானவர் என பெளத்த கடும்போக்கு இயக்கமான `மஹசான் பாலாகயா'-வின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கேவை சந்தேகிக்கும் போலீஸ், வியாழக்கிழமை காலை…
முஸ்லிம்கள் இல்லாவிட்டால் புலிகளுடனான யுத்தம் முடிந்திருக்காது: இலங்கை கூட்டுப்படை தளபதி
கொழும்பு: முஸ்லிம்கள் இல்லாவிட்டால் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் முடிந்திருக்காது என இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவிந்தீர விஜயகுணவர்த்தன தெரிவித்துள்ளார். இலங்கையில் முஸ்லிம்கள் மீதான சிங்களர் வன்முறை தாக்குதல்கள் குறித்து இலங்கை கூட்டுப் படைகளின் தளபதி ரவிந்தீர விஜயகுணவர்த்தன கொழும்பில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழீழ விடுதலைப் புலிகளுடனான…
எரிக்கப்பட்ட வாணிப நிலையத்தில் பறக்கவிடப்பட்ட சிங்கக் கொடி
கண்டி- கட்டுகஸ்தோட்டையில் சிங்களக் காடையர்களால் தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம்களின் வாணிப நிலையங்களில், பௌத்த கொடிகள் கட்டப்பட்டுள்ளன. கட்டுகஸ்தோட்டை, உகுரெசபிட்டிய பகுதியில் உள்ள முஸ்லிம்களின் வாணிப நிலையங்களின் மீது, இன்று காலை 11.30 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்கும் இடையில் தாக்குதல்கள் நடத்தப்பட்டு தீயிட்டு எரிக்கப்பட்டன. தீயிட்டு எரிக்கப்பட்ட முஸ்லிம்களின் வெதுப்பகத்தின்…
குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோருகிறது ஐ.நா
சிறிலங்காவில் வெடித்துள்ள இன வன்முறைகள் குறித்து கவலை வெளியிட்டுள்ள ஐ.நா அமைப்பு, இந்த வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் விரைவாக இயல்பு நிலையை ஏற்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் சிறிலங்கா அரசாங்கத்திடம் ஐ.நா கோரியுள்ளது.…
இலங்கை: அவசர நிலைக்கு பிறகும் தொடரும் பதற்றம்
இலங்கையில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்ட பின்னரும் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான சில சம்பவங்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். தென்னகும்பர மற்றும் மெனிக்கின்ன ஆகிய பகுதிகளில் முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க முயன்றவர்களை போலிஸார் கலைத்திருக்கிறார்கள். துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. அதேவேளை கண்டி மாவட்டத்துக்கு வெளியே…
முஸ்லிம்களிடம் பௌத்தர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் – லக்ஸ்மன் கிரியெல்ல
தெல்தெனிய, திகண பகுதிகளில் நடந்த வன்முறைகள் தொடர்பாக முஸ்லிம்களிடம் பௌத்தர்கள் மன்னிப்புக் கோர வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர வேண்டும் என அமைச்சரும் நாடாளுமன்ற அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “திகண, தெல்தெனிய சம்பவங்களின் விளைவாக அரச புலனாய்வுச்…
இலங்கை: இனக்கலவரங்களின் பின்னணி
இலங்கை இனக்கலவரங்களுக்கு பழகிப்போன நாடுதான். இங்கு தமிழருக்கு எதிராக கடந்த காலங்களில் நடந்த வன்செயல்கள், அதனைத் தொடர்ந்த கலவரங்கள் பெரும்பாலும் சர்வதேச மட்டத்தில் பேசப்பட்ட, பலரும் அறிந்த விடயங்கள். ஆனால், இலங்கையில் நடந்த முதலாவது வன்செயல் அல்லது கலவரம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்பது பலரும் அறியாத விடயம். முதலாவது…
இலங்கை: 10 நாட்களுக்கு அவசர நிலை பிரகடனம்
இலங்கை முழுவதும் அடுத்த 10 நாட்களுக்கு அவசரகால நிலையை பிரகடனம் செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண்டி மாவட்டத்தில் நடந்த சிங்கள முஸ்லிம் வன்செயல்களை அடுத்து இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை சந்திப்பு ஒன்றில் ஜனாதிபதியும், அமைச்சர்களும் இந்த முடிவை எடுத்ததாக அந்த சந்திப்பை அடுத்து செய்தியாளர்களிடம்…
இந்தியாவில் உள்ள, இலங்கை அகதிகள் முகாமில் கடிதம் எழுதி வைத்துவிட்டு…
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே முத்தூர் சாலை பிரிவில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு லிங்கேஸ்வரன், அவரது மனைவி சுபாஷினி (27) ஆகியோர் வசித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு 2 வயதில் காக்சிகா என்ற பெண் குழந்தை உள்ளது. லிங்கேஸ்வரன்…
எனது கனவு நனவாக விட்டால் நாடே அழிந்துவிடும்: மைத்திரிபால சிறிசேன
“நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும், சகவாழ்வுடனும் வாழவேண்டும். அதுவே நான் காணும் கனவாகும். அந்தக் கனவை நனவாக்க முடியாவிட்டால், இந்த நாடே அழிந்துவிடும்.” என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்கும் வகையில் இரண்டு ஜனாதிபதி ஆணைக்குழுக்களை அமைக்கவுள்ளதாகவும் அவர்…
கண்டி மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் – இன மோதல்கள் வெடிக்கும்…
சிங்கள, முஸ்லிம் இனங்களுக்கிடையில் தோன்றியுள்ள பதற்ற நிலையைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் உடனடியாக நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறைப் பேச்சாளர் அறிவித்துள்ளார். தெல்தெனியவில் கடந்தவாரம் மோதல் ஒன்றின் போது படுகாயமடைந்த சிங்களவர் ஒருவர் கடந்த சனிக்கிழமை மரணமானார். இதையடுத்து, நேற்று தெல்தெனிய பகுதியில்…
புலிகளின் வாகனத்தில் இருந்தே குண்டை எடுத்தேன், தற்கொலை செய்யவே கொண்டு…
தற்கொலை செய்துகொள்வதற்காகவே கைக்குண்டை வீட்டுக்கு எடுத்து சென்றேன்.எனினும் அது தவறுதலாக பஸ்ஸினுள் வைத்து வெடித்து விட்டது” என கஹகொல்ல பிரதேசத்தில் பயணிகள் பஸ்ஸில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துக்கு காரணமான இராணுவ அதிகாரி அதிர்ச்சி வாக்கு மூலம் வழங்கியுள்ளார்.கடந்த 21 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவை நோக்கி வருகைத்தந்த தனியார்…
புலம்பெயர் தமிழர்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும்: ஜோன்…
இலங்கையிலுள்ள தமிழ் மக்களுக்கு ஏதாவது நன்மை புரிய வேண்டும் என நினைத்தால், புலம்பெயர் தமிழ் மக்கள் வடக்கு மாகாணத்தில் முதலிட முன்வர வேண்டும் என்று சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சின் கீழ் யாழ். மாவட்டத்தில் விருந்தோம்பல் பயிற்சியை நிறைவு செய்தவர்களுக்கான சான்றிதல் வழங்கும்…
ஐ.நா. மனித உரிமை: இலங்கை தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்க…
ஐக்கிய நாடுகளால் இலங்கை மீது அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. இந்த தீர்மானத்தில் முக்கியமான கூறு 30/1. அதில், இலங்கையில் நடந்து முடிந்த போரின் போது…
மக்களின் நம்பிக்கையை இழந்த பின்னர் நிறுவப்பட்டுள்ள பணியகம் – சுமந்திரன்
மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர், “நீண்ட தாமதத்துக்குப் பின்னர் காணாமல் போனோர்…
பிராந்திய செயலகங்களை அமைக்க காணாமல் போனோர் பணியகத்துக்கு அதிகாரம்
காணாமல் போனோர் பணியகம் பிராந்திய செயலகங்களை அமைக்க முடியும் என்றும், அதற்கு காணாமல் போனோர் பணியக சட்டத்தில் இடமிருப்பதாகவும், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலர் சிவஞானசோதி தெரிவித்துள்ளார். காணாமல் போனோர் பணியகத்தின் கிளைச் செயலகங்கள் வடக்கு, கிழக்கில் அமைக்கப்பட வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்களின் அமைப்புகளும், தமிழ்…






















