இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
வடக்கு, கிழக்கு இணைப்புக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும்- முதலமைச்சர்…
வடக்கு – கிழக்கு மாகாணங்களின் இணைப்புக்கு இந்தியா அழுத்தங்களைக் கொடுக்க வேண்டும் என்று இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவிடம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கோரிக்கை விடுத்துள்ளார். இந்தியத் தூதுவர் தரன்ஜித் சந்துவை, வடக்கு மாகாண முதலமைச்சர் நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார். வடக்கின் அபிவிருத்தி செயற்பாடுகள்…
நாடு கடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் சிறிலங்காவில் இருந்து நாடு…
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினரான சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும், சிறிலங்காவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். கருப்புப் பட்டியலில் இடம்பெற்றிருந்ததால் சிறிலங்காவுக்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுரேஸ்நாத் இரத்தினபாலனும் அவரது குடும்பத்தினரும் நேற்றுக்காலை நாடு கடத்தப்பட்டதாக சிறிலங்கா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை…
தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடிய தீர்வுக்காக பிரார்த்திக்கிறேன்; பொங்கல்…
“தமிழ் மக்களின் உள்ளக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக்கூடியதாகவும், நீடித்து நிலைத்திருக்கக்கூடியதுமான சுயாட்சியுடன் கூடிய ஒரு நிரந்தரத் தீர்வைக் காண்பதன் மூலம் இதயசுத்தியுடனான புரிந்துணர்வையும் இன நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்துவதற்கு வழியேற்பட வேண்டுமென இந் நன்நாளில் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்…
அமெரிக்கத் தூதுவர் – வடக்கு முதல்வர் சந்திப்பு
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்புக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்புத் தொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் கீச்சகத்தில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். “முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தைப்பொங்கல் வாழ்த்துகளைப் பரிமாறினேன். வட மாகாண விவகாரங்கள்…
தயா மாஸ்டரை தாக்கியவருக்கு மனநிலை பாதிப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான தயா மாஸ்டர் எனப்படுகின்ற வேலாயுதம் தயாநிதி மீது தாக்குதல் நடத்தியவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி போது தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து ஒளிபரப்பாகும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் கலையகத்துக்குள் புகுந்த வயோதிபர் ஒருவர், அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரான…
சிறிலங்காவை சீனாவின் பக்கம் செல்ல அனுமதிக்கக் கூடாது – இந்திய…
சிறிலங்கா போன்ற நாடுகள் சீனாவை நோக்கிச் செல்வதை அனுமதிக்கக் கூடாது என்று இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்துள்ளார். இந்திய இராணுவ நாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “சீனா வலிமையான நாடாக இருக்கலாம். ஆனால் இந்தியா பலவீனமான நாடு அல்ல. பாகிஸ்தான்…
நாடுகடந்த தமிழீழ அரசின் உறுப்பினர் கட்டுநாயக்கவில் குடும்பத்தினருடன் தடுத்து வைப்பு
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர் ஒருவர், சிறிலங்காவுக்குள் நுழைவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, நாடு கடத்தப்படுவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக சிறிலங்கா அதிகாரிகளை மேற்கோள்காட்டி, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “சுரேஸ்நாத் இரத்தினபாலன் என்ற 48 வயதுடையவர், தனது மனைவி…
‘சிறுபான்மைகளை’ ஒதுக்கும் அரசியல்
இலங்கையின் அரசியல் கலாசாரமென்பது, முற்றுமுழுதாக ஆரோக்கியமான அரசியல் கலாசாரத்தைக் கொண்டது என, யாரும் கூறிவிட முடியாது. நேரடியான இனவாதமும் மதவாதமும் பாலின ஒதுக்குதலும் காணப்படாவிட்டாலும், சுதந்திரம் பெறப்பட்ட பின்னர் நடைபெற்ற ஒவ்வொரு தேர்தலிலும், இவை அனைத்தையும் கண்டே வந்திருக்கிறோம். இம்முறை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலும், சிறுபான்மைகளை அல்லது…
கொழும்பு – தூத்துக்குடி இடையே சரக்கு கப்பல் சேவை தொடக்கம்
இலங்கையின் கொழும்பு துறைமுகம் மற்றும் தமிழ் நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய துறைமுகமான தூத்துக்குடி ஆகியவற்றுக்கு இடையே சரக்கு கப்பல் சேவையை தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் தொடங்கியுள்ளது. வாரம் இரு முறை பயணம் மேற்கொள்ளும் எம்.வி.சார்லி என்று பெயரிடப்பட்டுள்ள அந்த கப்பல் 1,730 டி.இ.யூ கொள்ளளவு…
ஆண்டுகளே உருண்டோடுகின்றன! நீதி இன்னும் கிடைக்கவே இல்லை!!
ஆண்டுகளே உருண்டோடுகின்றன! நீதி இன்னும் கிடைக்கவே இல்லை!! – லசந்தவின் நினைவேந்தல் நிகழ்வில் எடுத்துரைப்பு படுகொலைசெய்யப்பட்ட ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் 9ஆவது ஆண்டு நினைவு தினம் நேற்று நினைவுகூரப்பட்டுள்ளது. பொரளை கனத்தையிலுள்ள அவரது நினைவுத்தூபிக்கு முன்னால் அஞ்சலி செலுத்தப்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்களும், அரசியல்வாதிகளும்,…
சுமந்திரன் ஊடகங்களுக்கு அஞ்சி மிரட்டல் விடுகின்றார்: சுரேஷ் பிரேமச்சந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ் ஊடகங்களுக்கு அஞ்சி, ஊடகங்களை மிரட்டி வருவதாக தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் முக்கியஸ்தரும், ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இன்று புதன்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில்…
உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல்…
யாழ்ப்பாணத்தில் 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற 4வது உலகத் தமிழாராச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 44வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று புதன்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது. யாழ். முற்றவெளியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிக்கு அருகில், படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் கலந்து…
தமிழர் அரசியல் புலத்தில் விடை தெரியாத கேள்விகள்
‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகியுள்ளது வடக்கு, கிழக்கு அரசியல் நிலைமைகள் என்றால் மறுப்பதற்கில்லை. தமிழர்களது போராட்ட வரலாறுகளும் அதனூடான உரிமைக்கான குரலும் ஓங்கி ஒலித்த காலத்தில் இருந்த திடமான அரசியல் களம், தற்போது தடம்புரளும் வங்குரோத்தில் செல்கின்றமை ஆரோக்கிமானதாக இல்லை. விடுதலைப் புலிகளினால் உருவாக்கம் பெற்ற தமிழ்த்…
பிரித்தானியா சென்ற சிறிலங்கா இராணுவ அதிகாரியிடம் போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை?
சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடம் போர்க்குற்றங்கள் தொடர்பாக பிரித்தானியா விசாரணை நடத்தியிருப்பதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரித்தானியாவுக்குப் பயணம் மேற்கொண்ட சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவரிடமே, போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. எனினும், எப்போது இந்த விசாரணை நடத்தப்பட்டது, விசாரணைக்குள்ளாக்கப்பட்ட சிறிலங்கா…
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்த விசேட பொலிஸ் குழுவை அமைக்குமாறு விக்னேஸ்வரனிடம்…
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துவரும் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்காக விசேட பொலிஸ் குழுவொன்றை அமைக்குமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம், வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வடக்கு மாகாண சபையின் 115வது அமர்வு இன்று செவ்வாய்க்கிழமை கைதடியிலுள்ள பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இந்த அமர்வில்…
ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசத்துக்கு ஆதரவு இலங்கை வடக்கு மாகாண முதல்–மந்திரி…
யாழ்ப்பாணம், இலங்கையில் உள்ள வடக்கு மாகாணத்துக்கு முதல்–மந்திரியாக இருப்பவர் விக்னேஸ்வரன். யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண கவர்னர் அலுவலகத்தில் தேசிய மற்றும் மாவட்ட அளவிலான தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க விக்னேஸ்வரன் வந்தார். அப்போது அவரிடம் தமிழ்நாட்டில் நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து…
ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டதாக கூறப்படுவது பொய் – சுமந்திரன்
ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சி அல்ல, நாங்கள் ஒற்றையாட்சிக்கு இணங்கி விட்டதாக கூறப்படுவது பொய் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ். ஒஸ்மானியா கல்லூரி வீதியில் நேற்று மாலை நடந்த, யாழ். மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முஸ்லிம் வேட்பாளர்களை…
அகதி முகாம்களில் மத்திய அரச அதிகாரிகள் ஆய்வு – இரட்டைக்…
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்களில் இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் மற்றும் திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள கொட்டப்பட்டு, வாழவந்தான்கோட்டை, தோப்புக்கொல்லை, தேக்காட்டூர், அழியாநிலை அகதிகள் முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் குழுவினர் நேற்று ஆய்வுகளை மேற்கொண்டனர்.…
கடந்த 16 வருடங்களாக த.தே.கூ.வின் சர்வாதிகார தலைமையை திருத்துவதற்கு முயற்சித்தோம்:…
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து நீண்ட சகிப்புத்தன்மையுடன் இருந்தோம். மக்கள் எங்களுக்கு கொடுத்த ஆணையை ஏற்று கிட்டத்தட்ட 16 வருடங்களாக கூட்டமைப்பில் ஒரு சர்வதிகார தலைமையின் கீழ் நாங்கள் இருந்தோம். கூட்டமைப்பின் ஒற்றுமை குலையக் கூடாது. எங்கள் மக்களுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட…
சாவகச்சேரியில் கூட்டமைப்பின் வேட்பாளர் தாக்கப்பட்டு படுகாயம்
சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காசிலிங்கம் சற்குணதேவன் என்ற வேட்பாளரே காயமடைந்தவராவார். சாவகச்சேரி நகரசபையின் 8 ஆவது வட்டாரத்துக்கு (நுணாவில் கிழக்கு) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இவர் போட்டியிடுகிறார். இவர் சாவகச்சேரி-…
தமிழ்நாட்டில் அகதி முகாம்களில் மத்திய அரசு அதிகாரிகள் திடீர் ஆய்வு-…
தமிழ்நாட்டில் ஈழத்தமிழ் அகதிகள் தங்கியுள்ள முகாம்கள் சிலவற்றில், இந்திய மத்திய அரச அதிகாரிகள் குழுவொன்று திடீர் ஆய்வு மேற்கொண்டுள்ளது. இதனால் மாநில அரச அதிகாரிகள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக, இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ரெங்கபுரம் அகதிகள் முகாமில் மத்திய அரசு அதிகாரிகள்…
இனவாதத்திற்கு எதிராக போராடிய இலங்கையின் சிவானந்தன் மறைவு
தனது இனத்திற்காக போராட்டங்களை நடத்திய தலைசிறந்த சிந்தனையாளரும், எழுத்தாளரும், அரசியல் விமர்சகரும், ஆசிரியரும், நியாயமான சமூகத்திற்காக போராடிய இலங்கை செயற்பாட்டாளருமான அம்பலவானர் சிவானந்தன் பிரிட்டன் தலைநகர் லண்டனில் உயிரிழந்தார். 20ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இலங்கையில் பிறந்த சிவானந்தன், தனது 35ஆவது வயதில், அதாவது 1958ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட…
விக்னேஸ்வரன் எனக்கு துரோணாச்சாரியார்; ஆனாலும், அவர் இல்லாததையும் பொல்லாததையும் எழுதுகிறார்:…
“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா எனக்குத் துரோணாச்சாரியார். நான் அருச்சுனன் அல்ல. என்றாலும், ஐவரில் ஒருவன், இல்லையென்றால் ஏகலைவன். அவருக்கு அளிக்க வேண்டிய கண்ணியத்தை வழங்கி, 'உள்ளதையும் நல்லதையும்' சொன்னேன், 'விதியே விதியே தமிழ்ச் சாதியை என் செய நினைத்தாய்' என்று நொந்தேன். ” என்று இலங்கைத்…
























