‘இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் ஆணை வேண்டும்’

நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகள், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னெடுத்துவரும் நகர்வுகளுக்கு, தமிழ் மக்கள் வழங்கும் ஆணையாக அமைய வேண்டும்”  என, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் (ஜனா) தெவித்தார். உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

‘தமிழ் மக்கள் ஏமாற்றம்’

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பான பொறுப்புக்கூறலுக்காக வழங்கிய அர்ப்பணிப்புகளை, அரசாங்கம் நிறைவேற்றவில்லை எனவும், இதனால் தமிழ் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் எனவும், எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவின் “தி ஹிந்து” ஆங்கிலப் பத்திரிகையின் மீரா…

13 இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 13 பேரை கைதுசெய்ததாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் (3) இவர்களை கைதுசெய்ததாக கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர். குறித்த மீனவர்கள் இராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களது 2 மீன்பிடி படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு யாழ்-மீன்பிடி பணிப்பாளர் அலுவலகத்தில்…

அரசியல் தீர்வு விடயத்தில் விரக்தியடையவோ, விடயங்களைக் கைவிட்டுவிடவோ முடியாது: சம்பந்தன்

“அரசியல் தீர்வு விடயத்தில் விரக்தியடையவோ விடயங்களை கைவிட்டுவிடவோ முடியாது. தற்போதைய சூழ்நிலையில் எமது நோக்கங்களில் தொடர்ந்தும் விடாப்பிடியாக இருந்து, விரைவானதும் வெற்றிகரமானதுமான முடிவைக் காண வேண்டும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். “ஆட்சி மாற்றத்துக்காக கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தமையை…

விக்னேஸ்வரனின் தடுமாற்றம்!

கடந்த பத்து நாட்களுக்குள் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி உட்பட மூன்று ஊடக அறிக்கைகளை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வெளியிட்டிருக்கின்றார். இப்போதெல்லாம் ஊடகவியலாளர்களால் எழுப்பப்படும் சிக்கலான கேள்விகளுக்கு உடனடியாக (நேரடியாக) பதிலளிப்பதைக் குறிப்பிட்டளவில் தவிர்த்து வருகின்ற முதலமைச்சர், அந்தக் கேள்விகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து வாராந்தம் பதிலளித்து வருகின்றார். அது,…

நாம் தோல்வியடைந்தால் தனித் தமிழீழம் மலரும்: மஹிந்த ராஜபக்ஷ

“எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தோல்வியடைந்தால், இலங்கை இரண்டாகப் பிளவுபட்டு தனித் தமிழீழம் மலர்வதை எவராலும் தடுத்துநிறுத்த முடியாமல் போய்விடும். எனவே, தேசப்பற்றுள்ள ஒவ்வொருவரும் தாமரை மொட்டு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.'' என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன…

தம்பி பிரபாகரனுக்கு மண்டியிட்டு மலர் மாலை பெறவேண்டிய அவசியம் என்றைக்கும்…

“தம்பி பிரபாகரன் அவர்கள் அரசியல் சூட்சுமத்தில் அனுபவம் முதிர்ந்தவர்களின் அறிவுரைகளைப் புறக்கணித்திருக்கலாம். அதனால் மரணத்தையுந் தழுவியிருக்கலாம். ஆனால் மண்டியிட்டு மலர் மாலை பெற வேண்டிய அவசியம் அவருக்கு என்றுமே இருந்தில்லை.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தமிழரசுக் கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் அண்மையில் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றுக்கு…

வடக்கு- கிழக்கு இணைப்பு முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் நிகழ வேண்டும்:…

“வடக்கு- கிழக்கு மாகாணங்களின் இணைப்பு வேண்டும் என்று வெறுமனே கூறினால் அது முஸ்லிம் மக்களின் மனதைப் பாதிக்கும். ஏனென்றால், தங்களுடன் கலந்தாலோசிக்காமல் அப்படி எவ்வாறு கூறமுடியும் என்று அவர்கள் சிந்திப்பார்கள். அதனால்தான் நாங்கள், வடக்கு- கிழக்கு மாகாணங்கள் இணைப்பு, கிழக்கு மாகாண முஸ்லிம் மக்களின் சம்மதத்துடன் நிகழ வேண்டும்…

திருகோணமலை மாணவர்கள் படுகொலை; 12வது நினைவு தினம் இன்று!

திருகோணமலையில் பல்கலைக்கழக அனுமதிக்காக காத்திருந்த 5 மாணவர்களை இராணுவத்தின் சிறப்பு அதிரப்படை சுட்டுக்கொண்டு இன்றோடு 12 ஆண்டுகளாகின்றது. 2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 02ஆம் திகதி, ஐந்து மாணவர்களும் நிலாவெளிக் கடற்கரையில் நின்றிருந்த வேளையே, அங்கு வந்த இராணுவத்தின் சிறப்பு அதிரப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தனர். குறித்த மாணவர்களின் படுகொலைக்கான நீதிக்…

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் பறக்கும் சீனாவின் தேசியக்கொடி

அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகம் கடந்த செப்ரெம்பர் மாதம், 9ஆம் நாள் சீனாவின் மேர்ச்சன்ட் போர்ட் ஹோல்டிங்ஸ் நிறுவனத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து, முதல் முறையாக அங்கு சீனாவின் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. முன்னதாக, அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்காவின் தேசியக்கொடியும், துறைமுக அதிகாரசபையின் கொடியும்…

தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண அரசியல் தலைமைகள் முன்வர வேண்டும்;…

“புதிய வருடம் ஆரம்பிக்கின்ற வேளையில், தேசியப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை அடையும் நோக்கில் ஒன்றுபட்டு செயற்பட முன்வருமாறு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களிடமும் வேண்டுகோள் விடுக்கின்றறேன். இதனைச் செய்வதன் மூலம் எமது எதிர்காலச் சந்ததிக்கு ஒரு வளமான எதிர்காலத்தை ஏற்படுத்த முடியும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும்…

பெண்கள் அரசியலில் ஈடுபடத் தயங்குவது ஏன்?

நீங்கள் குதிரையை தண்ணீர் குடிக்கக் கொண்டுவர முடியும், ஆனால் உங்களால் அதைக் குடிக்க வைக்க முடியாது. இதேபோன்றே, சிறிலங்காவில் செயற்படும் அரசியற் கட்சிகள், பொது அமைப்புக்கள், பெண்கள் அமைப்புக்கள் போன்றன இந்த நாட்டின் ஜனநாயக ஆட்சி நிறுவகங்களில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதில் வெற்றி பெற்றாலும் கூட, தகைமைபெற்ற பெண்…

அரசியல் தலைமைகள் வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்: சி.வி.விக்னேஸ்வரன்

“எமது அரசியல் தலைமைகள் தமக்குள் போட்டி போட்டுக் கொண்டு தமது வேறுபட்ட கருத்துக்களை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும்” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நாளை திங்கட்கிழமை பிறக்கவுள்ள 2018ஆம் ஆண்டினை முன்னிட்டு முதலைச்சர் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். ஊடக அறிக்கையில்…

உதயசூரியன் சின்னத்தில் போட்டியா? – மறுக்கிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

அடுத்த மாகாணசபைத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல்களை நிராகரித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் அரசுக் கட்சியின் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் அண்மையில் கேள்வி- பதில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதையடுத்து, ஆனந்தசங்கரி தலைமையிலான…

புராதன பௌத்த சின்னம் என்ற பெயரில் சம்பூரில் முருகன் ஆலயத்தை…

திருகோணமலை- சம்பூர், சூடைக்குடா பகுதியில் புராதன பௌத்த எச்சங்கள் இருப்பதாக கூறி, முருகன் ஆலயம் அமைந்துள்ள பகுதியை சிறிலங்காவின் தொல்பொருள் திணைக்களம் விரைவில் சுவீகரிக்கவுள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் பேராசிரியர் மந்தவெல, இதனைத் தெரிவித்துள்ளார். “சம்பூர் சூடைக்குடா செதிய அமைந்துள்ள பகுதியை பாதுகாப்பதற்காக அந்தப் பகுதி விரைவில் தொல்பொருள்…

இலங்கை: பெண்களின் வாழ்வில் இன்னும் தொடரும் போர்

இலங்கையில் உள்நாட்டுப் போர் ஓய்ந்திருக்கலாம். ஆனால் பெண்களின் அன்றாட வாழ்வுக்கான, தேவைக்கான போர் ஓயவில்லை. தினம்தோறும் அவர்களுடைய வாழ்வு போர்க்களமாகவே இருக்கிறது. அவர்களுடைய வாழ்வுக்கான, அன்றாட தேவைக்கான, வாழ்வாதாரத்துக்கான, உணவுக்கான, கௌரவமான வாழ்வுக்கான போராட்டமும், அவப்பெயருக்கு பயப்படும் போராட்டமும்,சமூகப் பாதுக்காப்புக்கான போரட்டமும் எத்தனை தலைமுறைகளுக்குத் தொடரப்போகின்றதோ என்று நினைக்கும்போது…

அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை இழக்கிறது சிறிலங்கா – அதிர்ச்சியுடன் தொடங்கும்…

புத்தாண்டு சிறிலங்காவுக்கு அதிர்ச்சியுடன் ஆரம்பமாகவுள்ளது. அமெரிக்காவின் ஜிஎஸ்பி வரிச்சலுகையை சிறிலங்கா 2018ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் நாளில் இருந்து இழக்கவுள்ளது. சிறிலங்காவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு, அமெரிக்காவில் கிடைத்து வந்து ஜிஎஸ்பி வரிச்சலுகை நாளையுடன் காலாவதியாகவுள்ளது என்று கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்…

இலங்கை: ‘நாடு திரும்புவோரின் குழந்தைகளுக்கு குடியுரிமைக் கட்டணம் கூடாது’

இந்தியாவிலுள்ள இலங்கை அகதிகளுக்கு பிறந்த குழந்தைகளுக்கான இலங்கை குடியுரிமையை பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கம் 25,000 ரூபாய் கட்டணம் அறவிடுவதாக ஈழ புகலிடக் கோரிக்கையாளர் புனர்வாழ்வு அமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தம் காரணமாக சட்டவிரோதமான முறையில் இந்தியா நோக்கி சென்ற இலங்கை அகதிகளின் சுமார் 25 பிள்ளைகள் தற்போது நாடற்றவர்களாக…

முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தமிழ் அரசுக் கட்சி பதிலடி

வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தானும் குழம்பாமல் ,மக்களையும் குழப்பாமல் இருப்பது முக்கியமானது என்று இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் கி. துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கொள்கை மற்றும்  அதன் தலைமையை விமர்சித்து, முதலமைச்சர் விக்னேஸ்வரன் கடந்த புதன்கிழமை வெளியிட்டிருந்த கேள்வி- பதில்…

கேப்பாப்புலவில் 133.34 ஏக்கர் காணிகளை விடுவித்தது சிறிலங்கா இராணுவம்

முல்லைத்தீவு- கேப்பாப்புலவில், சிறிலங்கா படையினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த 85 குடும்பங்களுக்குச் சொந்தமான 133.34 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளன. கேப்பாப்புலவில் நேற்று நடந்த நிகழ்வில், முல்லைத்தீவு படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் துஷ்யந்த ராஜகுரு, இந்தக் காணிகளை ஒப்படைக்கும் ஆவணத்தை, புனர்வாழ்வு புனரமைப்பு, மீள்குடியேற்ற…

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் நான் இதுவரை…

அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தான் இதுவரை சிந்தக்கவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, “வடக்கு கிழக்கில் இந்தத் தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட…

10 நாட்களாக தொடரும் லெமன்மோரா மக்களின் போராட்டம்

தோட்ட நிர்வாகம் தங்களுக்கு வழங்க வேண்டிய அடிப்படை உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்க வேண்டும் என தெரிவித்து கடந்த 18 ஆம் திகதி முதல் ​லெமன்மோரா மக்கள் தொடர்போராட்டத்தினை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் 188 ஏக்கர் நிலப்பரப்பில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தபோதிலும்  தோட்ட நிர்வாகம் திட்டமிட்டு அத்தோட்டத்தினை கடாக்கி வருவதாக…

கேப்பாப்புலவில் 133 ஏக்கர் காணிகள் இன்று இராணுவ ஆக்கிரமிப்பில் இருந்து…

முல்லைத்தீவு – கேப்பாப்புலவில், சிறிலங்கா இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் இருந்து வந்த பொதுமக்களுக்குச் சொந்தமான 133 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன என்று புனர்வாழ்வு அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கேப்பாப்புலவில் பொதுமக்களின் காணிகளில் அமைந்துள்ள சிறிலங்கா படையினர் அமைத்துள்ள படைத்தளங்களை இடம்மாற்றுவதற்கு, புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு 148 மில்லியன் ரூபாவை…